தோழமையின் தடம் நினைவு பேருரை:-  
தோழர் சி.கா.செந்திவேல்(இலங்கை ) இடம்:-Scarborough Village Rc 3600 Kingston Road/ Markham  காலம்:- 02-10 -2010  சனிக்கிழமை 4.30 மணிக்கு   அனைவரையும்  தோழமையுடன் அழைக்கிறோம்.  
தேடகம் தமிழர் வகைதுறைவள நிலையம் -கனடா
தொடர்புகளுக்கு 416 840 7335 
சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர் நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நினைவு பேருரை.
நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர்  சிவம்) அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. 
பின்னர்  தேசிய கலை இலக்கியப்பேரவை, தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியவர். 
 நன்றி “இனியொரு”

 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்