Comrade Maniam calls on Comrade Ji Pengfei during his visit in 1979. Comrade Ji Pengfei was head of the International Liaison Department of the Communist Party of China Central Committee, then vice-premier and secretary-general of the State Council from 1980 to 1982, and finally head of the Hong Kong and Macau Affairs Office.

மணி , Dec 1ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரை வியட்நாம் எல்லை புறமுள்ள சீனாவின் யுனான் மாகாண குன்மிங் நகரத்தில் தங்கினோம் .இங்கு சீன வியட்நாம் எல்லை யுத்தம் நடந்தது தெரியும் தானே. பல இடங்களைப் பார்வையிட்டோம் . இந்த மாகாணத்திலுள்ள ஜனத் தொகையில் 1/3 பகுதியினர் 22 தேசிய சிறுபான்மையின குழுக்கள். அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு . இங்கே தான் உலகத்திலேயே மிகப் பெரிய கற்காடு இருக்கிறது ( Stone Forest ). இத்தாலி தேசத்திலும் இருக்கின்றது .அது சிறியது - தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாட்டவர்கள் உட்பட பார்த்து மகிழ்வர் .இயற்கை வளங்களுடனும் வகை வகையானா பூந்தோட்டங்களுடனும் பண்டைய கலையை சித்தரிக்கும் கட்டிடங்களும் ஓவியங்களும் நிரப்பப் பெற்றுள்ளது - பலவித தானியங்கள் , மா ,பலா உட்பட பலவகை கனிவகைகள் இங்கு இருக்கின்றன -
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்