21-7-1985 அன்று வெளியான ‘ஈழநாடு’ வாரமலர் இதழின் (பக்கம் 8 மற்றும் 12) திரைக்காட்சிகள், மயிலங்கூடலூர் பி. நடராசன் எழுதிய "பாரதியின் பன்முகப்பார்வையும் பாரதி பற்றிய பன்முகப்பார்வையும்" விமர்சனக் கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும். முன்னதாக நீங்கள் இணைத்திருந்த 25-8-1985 இதழில் ந. இரவீந்திரன் மறுப்பு எழுதியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இக்கட்டுரையில்தான் இடம்பெற்றுள்ளன.
பாரதியின் பன்முகப்பார்வையும் பாரதி பற்றிய பன்முகப்பார்வையும்
- மயிலங்கூடலூர் பி. நடராசன்
‘பாரதியின் பன்முகப் பார்வையில்’ இடம்பெற்றுள்ள கட்டுரையாளர்கள் பல துறையினர். முருகையன் (கால மாற்றங்களும் பாரதியும்) கல்வி நிர்வாகத் துறையினர்; செந்திவேல் (தேசிய இயக்க நெறிகளும் பாரதியும்) அரசியல் தலைவர்; ஜெயரத்தினம் (பொருளியற் சிந்தனைகளும் பாரதியும்) அரசாங்கத்துறை நிருவாகி; சித்திரலேகா (பாரதியும் பெண் விடுதலையும்), நுஃமான் (நவீனத்துவமும் பாரதியும்) பல்கலைக்கழக மொழி, பண்பாட்டுத்துறையினர்; மௌனகுரு (கலைகளும் பாரதியும்) பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர்; சின்னத்தம்பி (வர்க்கங்களும் பாரதியும்), ரவீந்திரன் (அரசியல் இலக்கியமும் பாரதியும்) ஆகியோர் கல்லூரி ஆசிரியர்கள். சிவ. இராஜேந்திரன் (கல்வியியற் சிந்தனைகளும் பாரதியும்) பல்கலைக்கழக மாணவர். இவ் வேறுபாடுகளும் பிற தனியான மாற்றங்களும் கட்டுரைகளின் பன்முகப்பார்வைக்குக் காரணமாகும்.
கட்டுரைகளின் பகுப்பு
இந்நூலிலுள்ள கட்டுரைகளைப் படித்து முடித்தபோது அவற்றை இரு பிரிவுகளுக்குள் அடக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதலாவது வகைக் கட்டுரைகளில் பாரதியின் சிந்தனைகள் தொகுத்தும் வகுத்தும் தரப்பட்டுள்ளன. இரண்டாவது வகைக் கட்டுரைகளில் பாரதி இயங்கியல், சமூகவியல் கோட்பாடுகளுக்குப் பாத்திரமாக இலக்கியச் சான்றாகக் காட்டப்பட்டுள்ளான். முதலாவது வகைக்குப் பைபிளின் கட்டுரையையும் இரண்டாவது வகைக்கு சின்னத்தம்பியின் கட்டுரையையும் கை காட்டிக்கொள்ளலாம். வாசகர்களே கட்டுரைகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
பாரதியை உருவாக்கிய பின்னணி
பாரதியை எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்வது? இவ் வினாவுக்குப் ப. ஜீவானந்தத்தின் விடையை முன்னர் கண்டோம். அதே கருத்தை இந் நூலில் செந்திவேல் பின்வருமாறு வலியுறுத்துகிறார்: "பாரதி வாழ்ந்த சூழ்நிலையில் வைத்து பாரதியின் நிலைப்பாட்டைக் கணித்துக் கொள்ள வேண்டும்" (பாரதி பன்முகப்பார்வை பக்கம் 25). இதே கருத்தை ரவீந்திரனும் வலியுறுத்துகிறார் (பக்கம் 80). பாரதி ஆய்வுகளில் முரண்பாடும் பிளவுகளும் பார்வையும் தோன்ற ஆய்வாளர்கள் பாரதியையும் தமது சமகால நிலையில் வைத்து மதிப்பிட முனைவதே காரணமாகும். இக் குறைபாட்டை இந்நூலிலும் ஆங்காங்கே காணலாம்.
பாரதியை ரஷ்ய ஒக்டோபர் புரட்சியின் குழந்தை என்றும் சிலரும் பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று சிலரும் கூறுவர். இக்கருத்துக்கள் இந் நூலிலும் உள்ளன. இக்கருத்துக்கள் உண்மையே எனினும் முழு உண்மைகள் அல்ல என்பதே அனைவரும் அறிவர். எனினும் உலகில் எங்கு மக்கள் எழுச்சி நிகழ்ந்தாலும் பாரதி அதனை வரவேற்றுப் பாடியுள்ளான் என்பது முழு உண்மையாகும். இந்த உண்மையும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் "அக்காலத்தில் பாரதி ஏன் இரட்டைத் தேசமாக விளங்கிய ரஷ்யா" (பக். 50) என்ற கூற்று ஆய்வு நியதிப்பட்டதாகத் தோன்றவில்லை. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவன் பாரதி" (தி. ச. சிவசுப்ரமணியன்; திகழ்ச்சிப் பாரதியார் பக் 26) என்ற கூற்றின் குறை நிரப்பியாகவே இதனைக் கொள்ளலாம்.
பாரதியின் சமய நோக்கு
பாரதியின் சிந்தனைக்கு அடிப்படை பாரதப் பண்பாடே பாரதி அடிப்படையில் ஒரு சமயக் கவிஞனே இக் கருத்தை ஒட்டியும் வெட்டியும் இந்நூலில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. "பாரதி விவேகானந்தர் வழி வந்த வேதாந்தி என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது" என்கிறார் செந்திவேல் (பக் 31). பாரதியை வேதாந்தச் சிமிழக்குள் அடைக்க முயல்வதாகப் பலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். "பாரதி கவிதைகளில் தெரிந்தோ தெரியாமலோ தெய்வ நீதியை அதிகம் வற்புறுத்துவதால் அடிமைத்துவம் தொடர்ந்து நிலைக்க குரல் கொடுப்போர்க்கும் உதவி செய்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கதே" என்று பாரதியைச் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் சின்னத்தம்பி (பக் 75).
"கிரேக்க இயற்கை வழிபாட்டு மதமான ஹெலனிக் வழிபாட்டை மேற்கொண்டவன் போல காற்றையும் நிலவையும் சூரியனையும் தீயையும் வணங்குவதாகப் பாடுகிறான்" என்று கூறுகிறார் சின்னத்தம்பி (பக் 75). ஆனால், இஃது பாரதியின் குறுகிய எண்ணம் என்றும் இந்து நாகரிக மாணவர் கூறி, வேதப்பாடல்களே என்பதே பாரதி ஆய்வுக்கு ஏனைய அறிவுகளோடு இந்துசமயத் தத்துவங்களை அறியவும் வேண்டுமென்று கூறிய அறிஞர் கள் (மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் என். சி. பி. எச் 1982) கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பாரதி இந்து மேலாதிக்க வாதியா
பாரதியின் சமயப் பொறை புகழ் பெற்றது. இப் பண்பை இந்நூலில் பலரும் விதந்து கூறியுள்ளனர். பாரதி தம்மை ஒரு சித்தனாகப் பல இடங்களிலும் கூறியுள்ளார். சித்தர் நெறியைப் பாரதி முழுமையாக ஏற்றதனாலேயே பாரதிக்கு சமயத்தில் முற்போக்குப் பார்வை வாய்த்தது. பாரதி தீவிர பக்தி கொண்ட இந்துவாக இருந்த போதிலும் அவர் சர்வ சமய சமரச ஞானியாகத் திகழ்ந்தார் என்பதை அவரது படைப்புக்கள் காட்டும். தவறான எடுத்துக் காட்டுக்கள் மூலம் நுஃமான் பாரதியை இந்து மத ஆதிக்கவாதி என்று நிறுவ முயன்றுள்ளமை வியப்புத் தருகிறது (பக். 175).
"ஐயோ எத்தனை வருஷங்களாக 'பெண்கல்வி வேண்டும்' என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் 'பைபில்' வாசித்துக்கொண்டு வரும் பொருட்டாகத்தானா?"
என்று பாரதி எழுவது இத்தகைய இந்து மேலாதிக்க உணர்வினால் தான் என்கிறார் நுஃமான் (பக். 175). பாரதி தமது சகோதரிகள் இந்துப் பள்ளிக் கூடத்தில், இந்துமதம் பயில வேண்டும் என்று கூறுவதை இந்து மேலாதிக்க உணர்வு என்பதற்கு நுஃமான் பயன்படுத்திய அளவுகோல் எது என்பது புரியவில்லை. இந்து மதத்தின் மீது நுஃமான் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி பாரதி ஆய்வுக்கு அளவுகோலாக முடியுமா? என்பது சிந்திக்கத் தக்கது.
பாரதியும் புதிய ருஷ்யாவும்
பாரதி பாடியது பெப்ரவரிப் புரட்சியா? நவம்பர் புரட்சியா? இது பாரதி நூற்றாண்டாக ‘அடிபடும்’ பிரச்சினை. ‘பெப்ரவரி’ என்பவர்களெல்லாம் துரோகிகள், பிற்போக்கு வாதிகள் என்பது சிலரது கருத்து. இக் கருத்தை இந்நூலிலும் ரவீந்திரன் விரிவாக ஆராய்கிறார். சிறந்த ஆய்வாளனுக்குரிய நடுநிலையில் இருந்து பெப்ரவரி, அக்டோபர் புரட்சிகள்பற்றிய பாரதியின் கருத்துக்களையெல்லாம் முயன்று தொகுத்துத் தரும் ரவீந்திரன் முடிவு கூறும் போது மட்டும்தான் தன்பரம்பரையினரை அடியொற்றி இடறி வீழ்ந்து விடுகிறார்.
பெப்ரவரிப் புரட்சி பற்றி 28-03-1917இல் பாரதி எழுதியதை மேற்கொள் காட்டிய ரவீந்திரன், ஆய்வாளர் என்ற முறையில் அதே கருத்துக்கள் ‘புதிய ருஷ்யா’விலும் முன்வைக்கப்பட்டிருப்பதைப் பழக்கவாசனையாக இனங் காணத் தவறிவிடுகிறார். இப்பாடலின் தலைப்பைப் ‘ஜாரின் வீழ்ச்சி’ என மொழிபெயர்த்து வெளியிட்டல் ‘ஜாரிசத்தின் வீழ்ச்சி’ என்றே பதிப்பான இ. பி. செலிஷேவ் குறிப்பிட்டிருக்கிறார் (விளாதிமிர் எ. மகரெங்கோ, 1982). லெனினை நினைத்ததாக எழுதும் பாரதி இப்பாடலில் லெனினைக் குறிப்பிடவில்லை இது ஒன்றே இப் பாடல் ஜாரிசத்தின் வீழ்ச்சியை அறிந்தவுடன் மகிழ்ந்து பாடியது என்பதை நிறுவப் போதியதாகும். பெருங்கவியில் வீழ்ந்த ஜாரைத் தகம்பரில் பாட, பாரதி செத்த பாம்படிக்கும் வீரனா என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆய்வாளர்கள் என்றும் உணர்ச்சிவசதா முதலினைப்படுத்துவதில்லை!
பாரதியும் ஈழமும்
இந்நூலின் இறுதிக்கட்டுரை தில்லைநாதனின் ‘பாரதியும் இலங்கையும்’ என்பது. இக் கட்டுரையே இத் தொகுப்பில் மிகவும் தகுதி நிறைந்த கட்டுரை என எனது 'சுற்றறிந்த' நண்பர்கள் கூறினர். அதற்கான காரணத்தைக் கூற அவர்கள் வரவில்லை. ஆனால் இக்கட்டுரை பட்டியலிடும் முதல் முயற்சி. ஆனால், யாரையும் இருட்டடிப்புச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் முக்கியமான வரிகளையெல்லாம் இக்கட்டுரை குறிப்பிடுவதை இதுவே இக் கட்டுரையின் சிறப்பு. ‘பாரதி ஆய்வுகள்’ தொகுப்பிலுள்ள பாரதியும் இலங்கையும் பற்றிய கட்டுரைகளோடு இதனை ஒப்பிட்டுக் கற்பது பயனுள்ளது.
பணி தொடர்க
இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் சிறந்த அறுவடை. ஒரேயொரு அறுவடை “பாரதி: பன்முகப் பார்வை” என் புதுமைப் பித்தன் கூறியது போல எனது அளவுகோலை இதற்கென வைத்து அளந்து சில செய்திகளைக் கூறியுள்ளேன். இந்த நூல் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்தது என்பதே இதன் சிறப்பு. ஆய்வாளர்கள் அனைவரும் மிகவும் உழைத்துக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர். கட்டுரைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தினவாக உள்ளன. ‘பாரதி நூற்றாண்டு விழாவுக்கு ஈழம் ஒன்றே செய்தது; அதையும் நன்றே செய்தது’ என்ற பெருமையைத் தேடித் தந்த தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர்ந்து பணியாற்ற அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். பேரவை மேலும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்