Friday, February 24, 1989

Comrade S.T.N. Nagarathinam தோழர் எஸ்.ரி.என்.நாகரத்தினம்


 யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில்  நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி, தலைமைப் போராளி,  சுன்னாகம் பஸ் நிலையத்துக்கு முன்னால் புடவைக் கடை வைத்திருந்த, தோழர் எஸ்.ரி.என்.நாகரத்தினம்






A group of people sitting together

Description automatically generated with medium confidence

Standing With S.T. Nagarathinam (Left) , V. Dharmalingam (Right)  in between comrade KAS during the Soviet Communist Party delegation to Sri Lanka

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கான தூதுக்குழுவின் போது S.T நாகரத்தினம் (இடது) , வி. தர்மலிங்கம்  (வலது) உடன் கே. ஏ. சுப்பிரமணியம்



Great loss for progressive people (By S.T.N Nagarathinam’s family)

We have known late comrade K.A. Subramaniam from1956 since he was working as a full-time worker in the Chunnakam branch party office. He was instrumental in bringing the Soviet cultural group that visited the Chunnakam office in Sri Lanka in 1957. Subsequently, he played a significant role in the growth of the Communist party in Sri Lanka. In 1966, he led a massive protest against caste atrocity in Chunnakam. We witnessed his fighting spirit, courage, and determination during this protest.

Subsequently, he took part personally in all the protests organised by late S.T.N. Nagarathinam for demanding rights and engaged in all activities with genuine interest and intention. Despite being born in a “dominent community”, he was empathetic towards the struggle faced by our people. As he was closely associated with late Comrade S.T.N. Nagarathinam, our families also came closer.  His demise is not only a loss for his family, but it is a significant loss for all progressive thinkers who have a love for humanity—our sincere condolences to the bereaved family.

Thanks

Family of Comrade S.T. Nagarathinam’s family, Chunnakam.



  1. முற்போக்காளர்களுக்கு பேரிழப்பாகும் - தோழர் S. T. N. நாகரத்தினம் குடும்பத்தினர்






காலஞ்சென்ற கே. ஏ. சுப்பிரமணியம், அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சுன்னாகம் கிளை காரியாலயத்தில் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் பொறுப்பு வாய்ந்த முழு நேர ஊழியனாக இருந்த காலம் முதல் அவரை நாம் நன்கு அறிவோம். அவர் 1957 ஆம் ஆண்டு சோவியத் நாட்டில் இருந்து இலங்கை வந்த கலாசார தூதுக் குழுவின் சுன்னாகம் வருகைக்கு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார். அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி சாதி அடக்கு முறைகளுக்கு எதிராக சுன்னாகத்திலிருந்து ஓர் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தினார். நாம் அன்று தான் அவருடைய போராட்ட தன்மையையும் வீரத்தையும் நெஞ்சுறுதியையும் கண்ணுற்றோம். 


அதைத் தொடர்ந்து காலஞ் சென்ற S. T. N. நாகரத்தினம் அவர்களின் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சகல உரிமைப் போராட்டங்களிலும் நேரடியான பங்களிப்பை வழங்கியது மட்டுமல்லாமல் இதய சுத்தியுடனும் உளப்பூர்வமாகவும் செயற்பட்டார். அவர் பிறப்பில் "உயர் சமூகத்தை" சேர்ந்த போதும் எம் மக்களின் பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்தவர். அவர் மறைந்த S. T. N நாகரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பு காரணமாக எம் குடும்பத்தாருடன் அன்னாரின் குடும்பத்தாருக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அவரின் மறைவு அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மனித குல விடுதலையை நேசிக்கின்ற சகல முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


- நன்றி சுன்னாகம் தோழர் S. T. N. நாகரத்தினம் குடும்பத்தினர்



19 ஜன., 1971 — தோழர் எஸ்.ரி.என்நாகரத்தினம்தோழர் 
சிவதாசன் கைது. இலங்கை-சீன நட்புற. வுக்கு பாதகம்



தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி தோழர் எஸ்.ரி. நாகரத்தினம்சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினதும், அதன் தலைவர் நாகரத்தினதும் பங்கு மிகப்பாரியதாகும்.  அவருடைய துணிவு, ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான அவரது கரிசனை, போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் தலைமைத்துவ ஆற்றல் போன்றன என்றென்றும் மதிக்கப்படக்கூடியவை.


No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF