திரு. நா. சண்முகதாசன் அவர்களது நினைவு குறிப்புகள் ஆங்கிலநூலாக அண்மையில் பிரசுரமாயின. அதை வாசித்தபோது சண்முகதாசன் என்ற ஒரு தனி நபர்வாதியின் பூதாகரமான படிமம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாக்சிச லெனினிச போக்குக்கு தலைமை தாங்கிய ஒரு முக்கிய போராளி என்ற படிமத்தை விட பன்மடங்கு பெரிதாகிக் கட்சியையும் இயக்கத்தையும் திரையிட்டு மறைத்தது. திரு. சண்முகதாசன் உடன் என் முதலாவது சந்திப்பை நினைவு கூரும் போது இது எனக்கு அதிசயமாக இல்லை. இங்கிலாந்தில் மேற்படிப்பை முடிக்க சென்ற காலத்திலேயே எனக்கு இடதுசாரி சிந்தனையுடன் ஆழமான பரிச்சயம் ஏற்பட்டது. 1970 இல் இலங்கை திரும்பிய போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாக்சிச லெனினிசக் பகுதியினர் (‘பீக்கிங் பிரிவு’ என்று அழைக்கப்பட்டவர்கள்) மீது மிகுந்த நம்பிக்கையும் அனுதாபமும் எனக்கு இருந்தது . கண்டியிலிருந்த இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் சிறிய அலுவலகத்தில் திரு. மல்லிய கொட உடன் தொடர்பு கொண்டு மலையகத்தில் இருந்த சில கட்சி அனுதாபிகளுடனும் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டேன் . எதிர்பாராமலே ஒரு நாள் திரு சண்முகதாசனை சந்தித்து சிறிது நேரம் பேச கிடைத்தது. சண்முகதாசன் கண்டியில் உள்ள ஆடம்பர விருந்தினர் விடுதி ‘சுவிஸ்’ ஹோட்டலில் தங்கி நிற்பதாக அறிந்த போது மனதில் உறுத்தியது. அதற்கான விளக்கம் அவரது உடல்நிலையும் அடிக்கடி பயணம் செய்யும் அவசியமும் என்று தெரியவந்தது. இது எனக்கு பூரண திருப்தி தராத போதும் இதை மட்டுமே காரணமாக வைத்து ஒரு கட்சியின் தலைமையை நிராகரிப்பது சரியாக தெரியவில்லை. ஆயினும் இதையே ஆயுதமாகப் பாவித்து கட்சியின் எதிரிகள் கட்சியை தாக்குவதை பற்றி மல்லிய கொட தெரிவித்தார். ( பின்னர் ஒரு பொதுக்கூட்டத்தில் ஜேவிபியின் பிரதான பேச்சாளரான ரோகன விஜேவீர பேசுகையில், “தோழர் சண் புரட்சி செய்யப் புறப்படுவதானால், அவரது பிருஷ்டத்துக்கு தலையணை தேவை” என்று கேலி செய்ததும் குறிப்பிடத்தக்கது.) எனவே கட்சிக்கு அவப்பெயரை தவிர்க்கவும் பணத்தை மிச்சப்படுத்தவும் அடுத்த முறை அவர் வரும் போது என் வீட்டில் தங்கலாம் என்று மல்லிய கொடவுக்கு சொன்னேன். சண்முகதாசனும் அவரது மகளும் தமது அடுத்த கண்டி வருகையின்போது என்னுடைய வீட்டில் தங்கினார்கள். சண்முகதாசனுடைய விசாலமான அறிவும் புத்திக்கூர்மையும் அவருடன் பேசும் எவருடைய கவனத்தையும் ஈர்க்க தவறாது. அவர் எங்களுடன் தங்கிய இரண்டு தினங்களும் மகிழ்ச்சிகரமானதாகவே கழிந்தன. அந்தச் சந்தர்ப்பத்தின் போதும், 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சிக்கு சிறிது காலம் முன்னர் கொழும்பில் அவருடன் நடந்த உரையாடலின் போதும் ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. எப்பொழுதுமே சண்முகதாசன் தன்னை மிகவும் முக்கியப் படுத்தி கொள்ள முற்படுவதை என்னால் கவனிக்க முடிந்தது. இதை நினைவிற் கொள்ளும் போதும் அவர் 1971 ஆம் ஆண்டு கலவரத்தின் பின் அரசாங்கம் தன்னை தடுப்பு மறியலில் வைத்ததை பற்றித் திரும்பத் திரும்ப தவறாமல் மிகுந்த சுய அனுதாபத்துடன் முறையிட்டு வருவது புதினமாக தெரியவில்லை. இதனால் தான் தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் அவர் தடுப்பு மறியலில் இருந்தபோது அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதித்த ஒரு உயர் அதிகாரியின் நற்பண்பை நன்றியுடன் நீளமாக குறிப்பிட்டுள்ள போதும். 1977 வரையும் அவருடனான கருத்து வேறுபாடுகளையும் மீறி கட்சிக் கட்டுப்பாட்டை மதித்துப் போராடியதில் முன் வரிசையில் நின்று போலீசாரிடம் அடியும் உதையும் வாங்கிய பல தோழர்களின் பெயர்களை தவற விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் மறக்க விரும்பும் ஒருவரை இப்போது நினைக்கும் போதும் கம்யூனிஸ்ட் கட்சி தவறவிட்ட நல்ல சந்தர்ப்பங்களே நினைவுக்கு வருகின்றன . நண்பர் கே ஏ சுப்பிரமணியத்தை எனக்கு 1977க்கு முன்பு தெரியாது. 1972 சண்முகதாசன் மறியலில் இருக்கையில் அவரை வெளியேற்ற எடுத்த தீர்மானம் முறையற்றது என்று கருதி அதை மறுத்து நின்றவர்களுள் சுப்ரமணியமும் ஒருவர் என அறிவேன். சண்முகதாசன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் தவறுகளை அவர் கட்சிக்குள் மிகவும் கட்டுப்பாடான முறையில் நேர்மையுடன் வெளிப்படுத்தியது பற்றி பின்னரே எனக்குத் தெரியவந்தது. ஆயினும் வெளியேற்றல் பற்றிய தீர்மானம் எடுக்கப் பட்ட முறையை விட அது பற்றி கட்சிக் கீழ் மட்டங்களில் கலந்து ஆலோசனையும் விளக்கமும் இல்லாமை பற்றியும் அறிவேன் என்பதால் அவ் விஷயங்களில் எனக்கு மனக்குறை இருந்தது. 1977 தேர்தலில் சண்முகதாசன் திரும்பவும் தன் தவறான நிலைப்பாட்டையே மேற்கொண்டதன் விளைவாகவும் அவரது பிற தவறுகளின் காரணமாகவும் அவருடன் நெருங்கி நின்ற விசுவாசமான தோழர்கள் அவரிடமிருந்து பிரிந்து இயங்கினர். இந்தச் சூழலில்தான் கொழும்பில் திரு கே. ஏ. சுப்பிரமணியத்தை (மணியம்) முதன்முதலாக நண்பர் கரவிட்ட வீட்டில் சந்தித்தேன். 1982 முற்பகுதியில் நிகழ்ந்த அடுத்த சந்திப்பும், அதை அடுத்த ஒரு சில சந்தர்ப்பங்களில் கூட அதே வீட்டில் தான் வாய்த்தன . அவருடன் அதிக நேரம் உரையாட வாய்ப்பு இருக்கவில்லை. பிரிந்து சென்ற நல்ல சக்திகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான ஸ்தாபனத்தை நிறுவும் ஆவலுடன் அவர் H L K கரவிட்டவை அணுகினார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அது அன்று கைகூடாமைக்கு கரவிட்ட சார்ந்திருந்த மா-லெ கட்சியினுள் இருந்த பலவீனங்கள் காரணம் என்பதை நண்பர் மணியத்திடம் தெளிவாக விளக்க கரவிட்டவால் முடியாதிருந்தது. ஆயினும் வடக்கில் இருந்த இடது கம்யூனிஸ்ட் சக்திகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கரவிட்ட என்னை கேட்டுக்கொண்டார் . கரவிட்டவின் சிபாரிசின் மூலம் தொடங்கிய அந்த நல்லுறவு இடது கம்யூனிஸ்ட் அனுதாபம் உடைய பத்திரிகை தொடர்புகளால் வளர்ந்தது. நண்பர் கைலாசபதியின் மரணத்தை அடுத்து பத்திரிகைகளில் என் பங்களிப்புக்கு சிறிது அதிக தேவை ஏற்பட்டது. 1984 முற்பகுதியில் நான் அயல்நாடு புறப்படுமுன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்த கைலாசபதி நினைவு கூட்டத்தில் பங்குபற்ற யாழ்ப்பாணத்துக்குச் சென்று நண்பர் மணியம் வீட்டில் தங்கியபோது தான் எனக்கு அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் இடது கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றின் முக்கிய தோழர்களுடன் ஆறுதலாகப் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
கட்சியின் கடந்தகால தவறுகளையும் பங்களிப்புகளையும் கட்சித் தோழர்கள் ஆற்றிவரும் பணிகளையும் எதிர்காலத் திட்டங்களையும் கட்சியின் பலத்தையும் பலவீனத்தையும் பற்றி மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் எழுதியும் பேசியும் உள்ள நண்பர் மணியம் தன்னைப் பற்றியும் சிறிது தெரிவித்தார். தன்னுடைய கடந்த காலத் தவறுகளை பற்றி பேசிய அவர் தன் சாதனைகள், தான் அனுபவித்த கொடுமைகள், தனது தியாகங்கள் பற்றி மறந்தும் ஒரு வார்த்தை பேசியதோ எழுதியதோ கிடையாது . கட்சித் தோழர்கள் கூட இவை பற்றி எனக்குச் சொல்லவில்லை. கொழும்பில் பழைய கால தோழர்கள் மூலமே நண்பர் மணியத்தின் சிறந்த பங்களிப்பை பற்றி நான் அறிந்தேன். கட்சியின் தவறுகளைப் பற்றி பேசும் போது அதில் தன் பொறுப்பை குறிப்பிட அவர் தவறுவதில்லை. எந்த ஒரு தவறுக்கும் தனிப்பட்ட ஒருவரை மட்டுமே அவர் காரணம் காட்டியதாக நினைவில்லை . அதையெல்லாம் விட முக்கியமாக சண்முகதாசன் தலைமையிலான தவறுகளை பற்றியும் சண்முகதாசன் இடமிருந்து பிரிந்த பின்பு உறவில் ஏற்பட்ட விரிசலை பற்றியும் அவர் குறிப்பிட்டபோதும், சண்முகதாசன் உடைய நல்ல பண்புகளைப் பற்றியும் தன் விஷயத்தில் அவர் செய்த உதவிகளை பற்றியும் நன்றி உணர்வுடன் குறிப்பிட்டதை, வேறு சிலர் சண்முகதாசனை தூற்றல் உடன் ஒப்பிட்ட போது நண்பர் மணியத்தால் மனித உறவுகளையும் அரசியல் நேர்மையும் எவ்வாறு வஞ்சகம் இன்றி பேண முடிந்தது என்று வியந்தேன் .
தன்னுடைய நலனை விடவும் தன்னுடைய பெருமையை விடவும் கட்சியினதும் புரட்சிகர இயக்கத்தினதும் அதன் செல்வாக்கும் அவருக்கு பெரிதாக இருந்தது என்னிடம் அவர் பல வகையான உதவிகளைப் பெற்று உள்ளார். அவர் எல்லாவற்றையும் என்னால் கொடுக்க முடிந்ததில்லை. உதாரணமாக ஹங்கேரிய கவிஞர் சாண்டோர் பெட்டாஃபியின் கவிதைகளை தமிழாக்கம் செய்யுமாறு அவர் கேட்டதை நிறைவேற்ற, அவை கைவசம் இல்லாமையினாலும் அதனை செய்யும் அளவுக்கு அவகாசம் இல்லாமலும் அம்முயற்சியில் நான் இறங்கவில்லை . பிறகு அவரது இந்த ஆசையை கவிஞர் கணேஷ் நிறைவு செய்தார். இதைவிட சிறிய வேண்டுகோள்களை நான் எளிதாக நிறைவேற்றினேன். ஆயினும் எந்த நிலையிலும் அவர் என்னிடம் தனக்காக ஒரு உதவியையும் கேட்கவில்லை . இவ்வாறான அவரது சிறந்த பண்புகள் யாவும் அவர் எவ்வாறு ஏக காலத்தில் ஒரு நல்ல தலைவருக்கும் ஒரு நல்ல ஊழியருக்கும் உரிய பண்புகளை கொண்டு இருந்தார் என்று உணர்த்தின. ஆயினும் அவருடனான தொடர்பு எனக்கு புகட்டிய மிகவும் பயனுள்ள பாடம் ‘ஐக்கியமும் போராட்டமும்’ பற்றியது . என்னுடன் பேசும்போது அவர் ஒரு தடவை நாம் ஐக்கியப்பட கூடிய சக்திகளை ஐக்கிய படுத்துவது பற்றி பேசுகிறோம். ஆனால் நம்முடன் ஐக்கியப்பட வேண்டிய சக்திகளுடன் எதிரி ஐக்கிய படுகிறான் என்று குறிப்பிட்டார் . இது இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள சகல விடுதலைப் போராட்டங்களுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் ஆன ஒரு எச்சரிக்கையாகவே எனக்கு தெரிந்தது. அவரது சொற்கள் நீண்டகால அரசியல் அனுபவத்தினதும் அவதானத்தினதும் பொழிப்பகவே தெரிந்தன…………...
இலங்கையின் முற்போக்கு , இடதுசாரி , தேசபத்த , தேசிய விடுதலை இயக்கங்களின் வலிமையையும் எதிரியின் வலிமையையும் ஒப்பிடும் போது எத்தனை அரிய வாய்ப்புகளை நாம் இழந்திருக்கிறோம் என்று மனம் நோக நேரும் . தனிநபர் வாதம் , வலது சந்தர்ப்பவாதம் , இடது தீவிரவாதம் போன்று பல வேறு முனைப்புக்கள் வெகுஜனங்களின் ஐக்கியத்தை குலைத்து பிற்போக்கு அரசியற் சக்திகட்கு எதிரான போராட்டத்தை பலவீனப் படுத்தியுள்ளன . ஐக்கியம் சாத்தியமாக்க கூடிய நிலையிற் கூட ,ஒன்று சேர்ந்து செயற்படும் சக்திகள் , போராட்டம் வெற்றி பெறும் வாய்ப்பு நெருங்கும் போது பிளவு பட்டுத் தம்மை பலவீனப்படுத்திய சம்பவங்கள் அண்மைக்கால வரலாற்றில் , முக்கியமாக 1977 இன் தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் நிறையவே நிகழ்த்துள்ளன .
ஐக்கியம் வலியுறுத்தப்பட்ட காலங்கள் பல .ஆயினும் யாருடனான ஐக்கியம் , எந்த அடிப்படையிலான ஐக்கியம் என்ற தெளிவின்றி குறுகிய கால நன்மைகளைக் கருத்திற்கொண்டு பதவிக்காகவும் பாராளுமன்ற ஆசனங்களுக்காவும் ஐக்கியம் என்ற பேரில் சுரண்டும் வர்க்கத்திடம் சரணாகதியான நிலைமைகளை , 1956 க்குப்பின்பு நடந்த தேர்தல்களில் கண்டோம் . கசப்புணர்வும் விரக்தியும் பிறருக்குப் 'பாடம் புகட்டும் ' நோக்கமும் கொண்டு எதிரிக்கு வசதியாகும் முறையில் நடந்துஇடதுசாரி தலைமைகளை நாம் அறிவோம் . துரோகமிழைத்த தமிழரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட இனவாத கூச்சல் எழுப்பியவர்களுடன் 1966இல் இணைந்து நின்ற இடதுசாரிகளும் , என் .எம் . பெரேராவின் தலைமையின் துரோகத்திற்கு பழிதீர்க்க UNP யுடன் சேர்ந்த பிலிப் குணவர்தனாவின் தலைமையும் , 1977இல் SLFP க்குப் பாடம் புகட்ட UNP க்கு மாபெரும் வெற்றி ஏற்படும் வகையிற் செயற்பட்ட இடதுசாரி தலைமைகளும் எதிரிக்கு சகுன பிழை கருதி தம் மூக்கை அறுத்தவர்கள் அல்லர் .சிநேகிதர்களுடனான பிணக்கை காரணம் கொண்டு தம் மூக்கை அறுத்த அதி மூடர்கள் . இவ்வளவுக்குப்பின்னும் இன்னமும் நண்பன் யார் எதிரி யார் என்று தெரியாமல் தடுமாறும் முற்போக்கு சக்திகள் நடுவே சில தெளிவான நிதானமான குரல்கள் எழுந்தால் அதில் ஒன்று இடது கம்யூனிட்ஸ்ட் கட்சியினுடையது என்று நம்பலாம் .ஐக்கியத்தை வலியுறுத்தும் அதே சமயம் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தன் போராட்டத்தை கைவிடாத உறுதியையும் அதன் தலைமையிடம் காணலாமெனில் , இத்தகைய ஒரு அரசியற் தலைமை உருவானதில் நண்பர் மணியத்தின் பங்களிப்பு மிகவும் பெரியது .
நண்பர் மணியம் நான் எழுதுகின்ற விஷயங்களின் பிரசுரத்தில் என் அனுமதியின்றி எந்த மாற்றங்களையும் செய்ய அனுமதித்ததில்லை . ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர் சில மாற்றங்களை செய்ய என்னிடம் அனுமதி கேட்டு நான் உடன் படும் நிலையில் அவற்றை செய்திருக்கிறார் . நான் அவ்வாறான மாற்றம் அவசியமில்லை என விளக்கினால் அதை ஏற்று செயற்பட்டுள்ளார் . என் விமர்சனம் ஒன்றுக்கு சேரன் சுட்டிக்காட்டிய ஒரு தவறை இரு முறை ஒப்பு கொண்டிருந்தேன் .சேரனது கருத்துக்கள் எழுதப்பட்ட முறைக்கு நான் என் தவற்றை ஒரு முறைக்கு மேல் ஒத்துக்கொள்ள அவசியமில்லை என்று நண்பர் மணியம் சுட்டிக்காட்டினார் . இதே தொடர்பில் , நான் குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் பற்றிக் குறையாக எழுதியிருந்தேன் .அது பிரசுரமாகும் நிலையில் அந்த எழுத்தாளர் மரணமானார் . திரு. மணியம் இச் சூழ்நிலையில் அந்த குறிப்பை தவிர்ப்பது நல்லதென்று கருதினார் .இதுவும் மிக நியாயமானதாகவே எனக்கு பட்டது . இன்னொரு சமயம் , என் கவிதை ஒன்றின் இறுதி வரிகள் இந்திய 'அமைதி காக்கும் 'படைக்கு கோபமூட்ட கூடும் என்று கருதி அச்சகத்தினர் அவற்றை தவிர்திருத்தனர் . அது என்னால் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த போதும் நண்பர் மணியம் அது பற்றி தன் மனவருத்தத்தை தெரிவித்ததோடு அடுத்த சந்தர்ப்பத்தில் முழுக் கவிதையையும் மறுபிரசுரம் செய்வித்தார் .இந்தளவு நேர்மையான முறையில் பத்திரிகை நடத்துபவர்கள் நமது இலக்கியத்துறையில் மிகசிலரே .
புதுக்கவிதையில் எனக்கு ஈடுபாடு அதிகம் என்பதால் எளிதாக இசைக்கத்தக்க முறையில் என் கவிதைகள் அமைவதில்லை .ஆயினும் வெகுசிரமத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் இசையமைப்பாளர் கண்ணனின் ஒத்துழைப்புடன் என் கவிதைகள் சிலவற்றுக்கு இசை வடிவம் கொடுத்தனர் . இசைப்பாடல்களின் முக்கியத்துவத்தை எனக்கு நினைவூட்டிய ' புது வரலாறும் நாமே படைப்போம் 'என்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் இசை நாடாவை (Audio Cassette ) நண்பர் மணியம் எனக்கு அனுப்பியபோது என் கவிதைகளின் அமைப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளை சாடையாக சுட்டிக்காட்டியிருந்தார் .இதையடுத்து , நான் இசைப் பாடல்களாகவே சில கவிதைகளை அமைத்தேன் .இவை பற்றி அவர் மிகுந்த திருப்தி தெரிவித்தார் .ஆயினும் எந்த நிலையிலும் இவ்வாறு எழுத வேண்டும் என்று என்னை அவர் கேட்டுக்கொண்டது கிடையாது . ஒவ்வொருவரது பலத்தையும் பலவீனத்தையும் அடையாளங்கண்டு மிகையாகப் புகழாமலும் கேட்பவர் மனம் நோக்காமலும் விமர்சித்து உற்சாகமூட்டும் பக்குவம் அவரிடமிருந்தது என்பதை எனது எழுத்துக்கள் பற்றிய அவரது கருத்துக்களிற் கண்டேன் .இங்கும் ஐக்கியமும் போராட்டமும் பற்றிய அவரது அனுபவ முதிர்சியையே நான் உணர்தேன் .
1984 ஜனவரி கைலாசபதி நினைவுக் கூட்டத்தின் முடிவில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் இங்கு குறிப்பிடத்தக்கது. கூட்டத்திற்கு முதல்நாள் என்னுடன் கருத்து வேறுபாடுடைய ஒருவரைக் கொண்டு என்னை மிரட்டும் முயற்சியில் கட்சி விரோத பத்திரிகையொன்றுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு நபர் சம்பந்தப்பட்டிருந்தார் .அவர் மறுநாளும் ஏதாவது விசமத்தனத்தில் ஈடுபடலாம் என்று நண்பர்கள் எதிர்பார்த்திருந்தனர் .அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லையாயினும் கூட்ட முடிவில், விடுதலை இயக்கமொன்றைச் சார்ந்தவராக தன்னை கூறிக் கொண்ட முன்பின் தெரியாத ஒரு வாலிபர் என்னுடைய கட்டுரை ஒன்றில் ஈழப்பிரிவினை தொடர்பாக எழுதிய சில கருதுகளையிட்டு ஆட்ஷேபித்ததோடு அவ்வாறு தொடர்ந்தும் எழுதுவது பற்றி மிரட்டவும் முற்பட்டார் . எடை வெகு தொலைவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதும் ,கவனித்த நண்பர் மணியம் மெதுவாக என்னிடம் வந்து "என்ன பிரச்சினையாம் ?" என்று மிகவும் தன்மை வழமையாக கேட்டார் .என்னை மிரட்டவும் முற்பட்ட இளைஞர் "ஒன்றுமில்லை , சும்மா சில சந்தேகங்கள் ..." என்று சொல்லி நழுவி விட்டார் . நண்பர் மணியம் பிரச்சனையை சமாளித்த விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆர்ப்படடமில்லாமல் ஒன்றுமே நடவாதது போல விஷயத்தை முடித்த போதும் கொழும்புக்கு நான் பஸ் ஏறும் வரை நண்பர்கள் சிலரை துணைக்கு அனுப்பி வைத்து விட்டே வீடு திரும்பினார் .கட்சி தோழர்களது இந்த விதமான முன்னெச்செரிக்கையையும் , நிதானமான தைரியமுமே அடுத்து வந்த நெருக்கடி மிகுந்த ஆண்டுகளிற் கட்சியையும் அதன் வெகுஜன ஸ்தாபனங்களையும் தொடர்ந்தும் பயனுள்ள முறையிற் செயற்பட அனுமதித்தது என நினைக்கின்றேன் . தேசிய சிறுபான்மை இனத்தினரது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் போதும், 1977க்குப் பின் UNP அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி வேட்பாளர்களையும், 1983 பாராளுமன்ற கலைப்பு பிரச்சனையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கை மீதான சர்வசன வாக்கெடுப்பின் போதும் இடது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடு ஐக்கியமும் போராட்டமும் என்ற கொள்கைக்கு நல்ல நடைமுறை விளக்கமாகவே இருந்தது .அண்மைக்கால நெருக்கடி மிகுந்த சூழலில் ஒன்றுபடுத்தக்கூடிய சகல சக்திகளிடமும் ஒன்றுபட்டு செயற்பட்டதன் மூலம் கட்சி
தன்னையும் தேசபக்த முற்போக்கு சக்திகளையும் பலப்படுத்தி கொண்டதன் காரணமாகவே இன்றும் தொடர்ந்து செயற்படக்கூடிய நிலையில் உள்ளது . இதில் நண்பர் மணியத்தின் தலைமையும் முன்னுதாரணமான செயற்பாடும் மிக முக்கியமானது என்றே கருதுகின்றேன் .
எந்தவொரு கட்சி தோழரையும் விடத்தன்னை முக்கியமானவராகக் கருதாதவர் நண்பர் மணியம். கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி அதன் நேச சக்திகளுள் எவராயினும் தன்னை வீணாக அபாயத்துக்கு உட்படுத்தி கொள்வதை அவர் விரும்பியதில்லை . புரட்சி என்றாலே கொலையும் வீண் இரத்தம்சிந்தலும் என்றும் பலரையும் கருத தூண்டும் ஒரு சூழலில் , அனாவசியமான ஒரு உயிரிழப்பையும் விரும்பாத நண்பர் மணியம் மாக்ஸிஸ புரட்சியின் மனிதாபிமானம் மற்றைய கிளர்சிக்காரர்களது உலக நோக்கினின்று எவ்வாறு வேறுபடுகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு . புரட்சிக்கு உயிர் தியாகங்கள் அவசியமாகலாம் , ஆனால் வீண் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அவரது பார்வை மாக்ஸிஸ முதல்வர்களது பார்வையுடன் மிகவும் உடன்பாடானது .எதிரிக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டையும் மக்கள் மத்தியிலான முரண்பாடுகளையும் தெளிவாக இனங்கண்டு அதன் அடிப்படையில் உருவான இந்த மனிதாபிமானமே நண்பர் மணியத்துடன் கருத்து வேறுபாடுடையவர்களையும் அவர் மீது அபிமானமும் மதிப்பும் உடையவர்களாக்கியது .
நண்பர் மணியம் இடது கம்யூனிஸ்ட் சக்திகட்கு தலைமைதாங்கி வழிநடத்தும் நிலை இடதுசாரி இயக்கம் மிகவும் சிரமதசையில் இருந்தபோதே ஏற்பட்டது .இத்தனை நெருக்கடிகள் மத்தியிலும் மனம் தளராது மாக்ஸிஸ கொள்கை மீது உறுதியான நம்பிக்கையுடன் போராட்டப் பாதையில் தன்னையும் பிற நல்ல சக்திகளையும் முன்னோக்கி நடத்தி புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பணியும் ,அவரும் அவரது நெருங்கிய தோழர்களும் கண்ட சாதனைகளும் பெரியன . இவை இன்னும் பெரிய வெற்றிக்கட்க்கும் ஒரு புதிய சமதர்ம சமுதாயத்துக்கும் இட்டுச்செல்லும் என்பது நண்பர் மணியத்தின் பங்களிப்பு நாளைய சமுதாயத்தின் எழுதாத வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக அமையும் என்பதும் நமது நியாமான எதிர்பார்ப்புகள் .
-- சி.சிவசேகரம் --
Friend Maniam, who writes and speaks very clearly and honestly about the past mistakes and contributions of the party, the work done by the party comrades and future plans and the strengths and weaknesses of the party, also said a little about himself. He never spoke or wrote a word about his past mistakes, his achievements, the atrocities he experienced, the sacrifices he made. Even the party comrades did not tell me about these. I came to know about the excellent contribution of the friend Maniam through old time comrades in Colombo. When talking about the faults of the party he does not fail to mention his responsibility in it. I do not remember him blaming any individual for any wrongdoing.
His influence on the party and the revolutionary movement was greater than his own interests and his own pride. He could never give me everything. For example, I did not embark on the task of translating the poems of the Hungarian poet Santor Petafi into Tamil without fulfilling his request and having the opportunity to do so. Then the poet Ganesh fulfilled his wish. I could easily fulfill smaller requests than this. Yet under no circumstances did he ask me for any help for himself. All of his best qualities like this made him realize how he possessed the qualities of a good leader and a good servant at the same time. Yet the most useful lesson I learned from my association with him was about 'unity and struggle'. As he speaks to me he once spoke of the unification of the forces with which we can unite. But he noted that the enemy is united with the forces that must unite with us. I saw this as a warning to all liberation struggles and progressive forces not only in Sri Lanka but around the world. His words are a testament to his long political experience and observation ... I saw this as a warning to all liberation struggles and progressive forces not only in Sri Lanka but around the world. His words are a testament to his long political experience and observation ... I saw this as a warning to all liberation struggles and progressive forces not only in Sri Lanka but around the world. His words are a testament to his long political experience and observation ...
One can only imagine how many rare opportunities we have missed when comparing the strength of Sri Lanka's progressive, left, patriotic and national liberation movements with the strength of the enemy . Many other movements, such as individualism, right-wing opportunism and left-wing extremism, have disrupted the unity of the masses and weakened the struggle against the reactionary prefectural force. Despite the possibility of unity, the forces that work together have split and weakened themselves in the recent history, especially in the post-1977 elections.
There are many times when unity is emphasized .However unity with anyone, on any basis In the post-1956 elections we saw the surrender of the class to the exploiting class in the name of unity for office and parliamentary seats, in view of the vague short-term benefits of unity. We know left-wing leaders who behave in a way that is convenient to the enemy with the intention of 'teaching a lesson' to others through bitterness and frustration. The Left, which had joined hands with those who had raised racist cries in 1966 to teach a lesson to the betrayed TNA, and the NM. The leadership of Philip Gunawardena, who joined the UNP to avenge the betrayal of Pereira's leadership, and the left - wing leaders who acted in such a way as to lead the UNP to a landslide victory in 1977 to teach the SLFP a lesson, did not cut their noses in defiance of the enemy. If it can be trusted that it belongs to the TC , its friend can play a major role in the emergence of such a prefectural leadership if its leadership can see the determination not to give up its struggle on behalf of the oppressed people while emphasizing unity .
Friend Maniam never allowed me to make any changes in the publication of the things I write without my permission. On a few occasions he asked me for permission to make some changes
Has done them in the accompanying condition. If I explain that such a change is not necessary he has accepted it and acted. I have admitted twice to a mistake pointed out by Cheran in one of my reviews . In this connection, I wrote less about a particular writer. That writer died while it was being published. Mr. Maniam thought it would be better to avoid that reference in this situation .This also seemed very reasonable to me. On another occasion, the printers omitted the final lines of one of my poems, thinking that it might offend the Indian 'peacekeeping force'. Even though it was somewhat acceptable to me Friend Maniam expressed his regret about it and republished the whole poem on the next occasion.
My poems are not easily set to music as I am more involved in revival poetry. Audio Cassette of the National Art Literary Council entitled ' We Will Create New History ' reminding me of the importance of music When my friend Maniam sent it to me, he pointed out the problems caused by the structure of my poems .After this, I composed some poems as musical songs .He was very satisfied about these .However he never asked me to write like this under any circumstances. I found in his comments on my writings that he had the maturity to recognize the strengths and weaknesses of each and to criticize without exaggeration and without the listener's mind .Here I felt his experiential maturity in unity and struggle .
An incident that took place at the end of the January 1984 Kailasapathy Memorial Meeting is also noteworthy here. On the first day of the meeting, a person closely associated with an anti - party newspaper was involved in an attempt to intimidate me with someone who had a difference of opinion with him. He objected to some of the comments he had made in connection with it and sought to intimidate them into continuing to do so. The weight was noticed while talking to friends far away Friend Maniam slowly came to me and asked "What is the problem?" The young man who tried to intimidate me slipped away saying "Nothing, just some doubts ...". The way my friend dealt with the problem made me cringe . When the matter was settled as if nothing had happened without a demonstration, he sent some friends to support me until I boarded the bus to Colombo and returned home. I think that has allowed it and its mass institutions to continue to function effectively. The position taken by the Left Communist Party during the struggle for the right of national minorities to self-determination, the main opposition candidates who contested the presidential election against the anti-democratic measures of the post-1977 UNP government, and the referendum on the anti-democratic action of the government in the 1983 parliamentary dissolution issue was a good practical explanation for the policy of unity and struggle. The party by working together with all the forces that can unite in a crisis situation . It is still in a position to function today because of the strengthening of itself and the patriotic progressive forces. I think the leadership and exemplary work of Friend Maniam is very important in this.
Friend Maniam who does not consider himself more important than any party comrade . He did not want to endanger himself in vain, not only by party members but also by any of its allies. An example of how the humanity of the Marxist revolution differs from the worldview of other insurgents . Revolution may require sacrifices, but his view that futile casualties must be avoided is very much in line with the views of the Marxist chiefs .It was this humanity that clearly formed the basis for recognizing the contradictions between the people and the people who disagreed with the friend and made him admire and value him.
Friend Maniam 's leadership of the Left Communist Force came at a time when the Left Movement was in dire straits . It is our reasonable expectation that the contribution of friend Maniam will be an important part of the unwritten history of tomorrow's society , leading to great success and a new harmonious society.
- S. Sivaseharam -
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்