Friday, January 3, 1992

Comrade Dr. S.V. Seenivasagam தோழர் சு.வே. சீனிவாசகம் அவர்களின் நினைவாக... 12 Sep 1909 - 03 Jan 1992

மறைந்த வைத்தியக் கலாநிதியும், முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளியும் பொது வாழ்விற்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவருமான தோழர் சு. வே. சீனிவாசகத்தின் அவர்களின் நினைவாக...

தோழர் சீனிவாசகம் மிகவும் முதுமை அடைந்த நிலையில் இறுதியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியான 29.11.1989இல் மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

அன்புத் தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தை  அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இளம் பராயம் முதல் நன்கறிவேன். மிகவும் துடிப்பான உறுதி மிக்க கம்யூனிஸ்ட்  இளைஞனாக மணியம் வேலை செய்து வந்ததை வயது முதிர்ந்து ஞாபக மறதி வரும் இன்றைய நாளிலும் நினைவு படுத்திப் பார்க்கின்றேன்.


அவர் ஒரு தன்னலமற்ற புரட்சி வீரர். கட்சிக்காக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொழிலாளர் விவசாயிகளின் விடிவுக்காக இடம்பெற்ற சகல போராட்டங்களிலும் முன்னின்று போராடியவர்,


அதனால் அடி உதை பட்டு இரத்தக் காயங்களுக்கு ஆளானவர். அரச படைகளின் தேடுதலுக்கு ஆளாகி தலை மறைவு வாழ்க்கையை மக்கள் மத்தியிலே மேற்கொண்டவர் தனக்காக வாழாது மக்களுக்காக வாழ்ந்தவர் - ஊண் உறக்கம் ஓய்வின்றி நேர்மையான அரசியல் வாழ்வில் ஈடுபட்டதால் கடும் நோய்க்கு ஆளானவர். 


இறுதியில் ஐம்பத்தெட்டு வயதில் நம்மை விட்டுப்பிரிய நேர்ந்தது நம் எல்லோருக்கும் பெரும் இழப்பே ஆகும். அவரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட கட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 


டாக்டர் சு. வே. சீனிவாசகம்

காங்கேசன்துறை 



தோழர் சீனிவாசகம் மிகவும் முதுமை அடைந்த நிலையில் இறுதியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியான 29.11.1989இல் மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


தோழர் சு.வே. சீனிவாசகம் அவர்கள் அடிக்கடி பேசுவது "சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்" என்பதுதான். இவ்விழா வில் பேசும்போது ருஷ்ய புரட்சியின் சாதனைகள், சீனப் புரட்சியின் சாதனைகள் அந்நாடுகளிலே எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது, அத்தகைய புரட்சி எமது நாட்டிலும் ஏன் ஏற்படுத்த முடியாது என்ற கேள்வியை எழுப்பி விட்டார்.
ஒவ்வொரு வேலைக்கும் அதற்கான ஸ்தாபனங்களும் அவற்றின் ஐக்கியப்பட்ட செயற்பாடும் அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி அதற்கான ஸ்தாபனங்களை உருவாக்கியவர். துறைமுகத் தொழிலாளருக்காக ஐக்கிய துறைமுகத் தொழிலாளர் சங்கத்தையும், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தையும் ஏற்படுத்தியவர். அத்துடன் மட்டுமல்லாமல் பெற்றோர் சங்கம் ஒன்றினை உருவாக்கி 1958ஆம் ஆண்டில் சிவகுருநாத வித்தியாலயத்தில் மூன்று மாதத்திற்கு மேலாக நடந்த பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நடத்தி வெற்றிகரமாக முடிக்க தலைமை தாங்கியவர். வெற்றியைக் கொண்டாட அப்போராட்டத் திற்கு உதவிபுரிந்த தோழர் பொன். கந்தையா-பருத்தித் துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அக் கிராம மக்களால் அழைக்கப்பட்டார். இக் கூட்டத் திற்கு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களான வி. பொன்னம்பலம், கே. ஏ. சுப்பிரமணியம் முதலியோர் வந்திருந்தனர். தோழர் கே. ஏ. சுப்பிரமணியம்தான் அப்போது காங்கேசன்துறைத் தொகுதியின் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தார். அவருடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்தார். இதன்மூலம் கட்சியுடனான நெருக்கம் அதிகரித்தது.
1959இல் டாக்டர் சீனிவாசகம் காங்கேசன்துறைப் பட்டின சபைத் தலைவராக இருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாலிபர் இயக்கத் தோழர் வலம்புரி காங்கேசன் துறைக்குவந்திருந் தார். அவரின் சைக்கிள் ஓட்ட சாதனையை மக்கள் பார்ப் பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. சைக்கிள் கான்ரிலில் திரும்பிஇருந்து கொண்டு ஓடி பல நிகழ்ச்சிகளை நடத்திய அந்தசாதனை ஏழு நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் ஆலய முன்றல் - தற்போதைய நடேஸ்வராக் கல்லூரி விடையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. மக்கள் நலாந்தம் திரண்டு வந்து களித்த வலம்புரி சாதனை நிகழ்ச்சியில் ஒழுங்கினை நிலைநாட்ட பொலிஸ் வரவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் பல இருந்தன. ஆனால் சாரணர் இயக்கத்தினரின் உதவி யுடன் சிறப்பாக-ஒழுங்காக நடந்து முடிந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் இந்த சாரணர் இயக்கத்தை உதாரணங்காட்டி "மக்கள் படையொன்று இல்லாவிட்டால் மக்களுக்கு என்று ஒன்றில்லை” என்பதை சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் டாக்டர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமது ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் ஒழுங்காக நடத்தப்பட்டதை பொறுக்க மாட்டாத எதிர்த்தரப்பினர் நிகழ்ச்சியில் சேர்ந்த நிதியை டாக்டர் கையாடிவிட்டார் எனத் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளி யிட்டனர். அவர் ஆத்திரப்பட வில்லை. நிதானத்துடன் உண்மை நிலையை விளக்கி பதிற் பிரசுர மொன்றினை பட்டினசபைத் தலைவரான டாக்டரும், சபைச் செயலாள ராக கடமையாற்றிய உள்ளூராட்சி உத்தியோகத்தரும் கையெழுத்திட்டு வெளியிட்டனர். கட்சியும் அவர் மேல் உன்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விளக்குமாறு கோரிக்கை விட்டிருந்தது. ஆனால் எவரும் முன்வர வில்லை. அவதூற்றுப் பிரசாரம் பிசுபிசுத்துவிட்டது 1960இல் நடந்த பட்டின சபைத் தேர்தலில் அதிகப்படி யான வாக்குகளால் வெற்றியீட்டி மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

டாக்டர் தனது பழைய சைக்கிளில் அல்லது நடையில் தான் சென்று வந்தார். அவர்மேல் கொண்ட அன்பினால் மக்கள் புதிய சைக்கிள் ஒன்றினை வாங்கி அன்பளிப்பாக விழாவொன்றில் வழங்கினர். அவர் அதனைத் தனது இறுதிக்காலம் வரையும் வைத் திருந்தார். இக்காலத்தில் சீமெந்து தொழிற்சாலை ஊழியர்கள் கட்சிப் பணிகளில் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களுக்கும் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்புச் செய்தது குறிப்பிடத் தக்கது. இது அத் தோழர்கள் மீது அம்மக்கள் கொண்டிருந்த அன்பினையும் நம்பிக்கையையும் காட்டி நின்றது
-இ. கா. சூடாமணி முன்னாள் தொழிற்சங்க தலைவர் லங்கா சீமெந்து நிறுவனம் வீமன் காமம் வடக்கு காங்கேசன்துறை

 

Comrade Dr. S.V. Seenivasagam's speech Video from minutes 6 onwards...

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF