"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, October 8, 2004

தோழர் சி. நவரத்தினம் -அனைவரினதும் அன்புக்கும் மதிப்பிற்கும் தோழமைக்கும் பாத்திரமாகி வாழ்ந்தவர்

 

தோழர் சின்னத்துரை நவரத்தினம்
தோற்றம்
28 - 02 -- 1945
மறைவு
08 - 10 - 2004

ஓய்வறியாது இயங்கிய செயல்வீரர் -ந. இரவீந்திரன்

தோழர் நவரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தி கொஞ்சங்கூட எதிர்பாராத நேரத்தில் பேரிடியாக வந்து சேர்ந்தது. சாவே உனக்கொரு சாவு வராதோ என்ற இரங்கல் வாசகம் என்னால் இந்தச் செய்தியில் உணரப்பட்ட அளவுக்கு முன்னர் புரிந்து கொள்ளப்பட்டதில்லை. எந்தளவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர் ஓய்வறியாது இயங்கிய ஒரு செயல்வீரர். அவரை மறந்த உறக்க நிலையிலுங் கூட அவரது கனவில் ஏதோவொரு மக்கள் மத்தியிலான வேலை ஓடிக்கொண்டிருக்கிருக்கும். அத்தகைய ஒரு இதயம் எப்படி அகாலத்தில் தனது பணியை நிறுத்தியிருக்க முடியும்? "கொள்கையுற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்பதற்கு முழு உதாரணமாக விளங்கியவர் தோழர் நவரத்தினம் ஓய்வறியாமல் இயங்கிய இடை நேரங்களில் சலிப்பின்றிக் கற்பதில் ஈடுபட்டவர் ஆவர். யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கிளிநொச்சி ஆகிய நகரங்களின் கடை வீதிகளில் காலை முதல் பொழுது சாயும் வரை தொடர்ச்சியாக நடந்து நடந்து கட்சிப்பத்திரிகை, தாயகம், சஞ்சிகை ஆகியன விற்றிருக்கிறேன் அவருடன், அவரைவிட மெல்லிய உடல்வாகுடைய எனக்கே களைப்பு வாட்டும், நல்ல தடித்த அவரது உடலில் களைப்பே தெரியாமல் இருக்கும். அவரை ஒரு போதும் இது பற்றிக் கேட்டதில்லை, உண்மையில் உள்ளுர் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவருக்குக் களைப்பேயிருக்காதா? அது தான் ஒரேயடியாக ஓய்வுக்குப் போய்விட்டார் போலும்!. அவர் குறித்து எனக்கு இன்னுமொரு விடயத்திலும் பொறாமை இருந்தது. எனது சில தயக்கங்களில் வேலைகள் தாமதப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அவற்றை ஒப்படைத்திருந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அதற்காகக் கண்டிப்பதுண்டு. அதன் போது எப்போதும் அவர் சொல்கிற விடயம், தோழர் நவரத்தினம் மட்டுமே எந்தவொரு வேலையையும், எங்கு மேற்கொள்ளப்பட வேண்டுமோ அங்கு சென்று உரிய நேரத்தில் முடித்து வைப்பார் என்பது. எல்லாம் சேர்ந்து எனக்கு அவரிடம் பயங்கலந்த ஒரு மரியாதை இருந்தது. அவருடன் நான் விவாதிக்க முனைந்ததில்லை. அவருடைய கருத்தை அறிவதற்கே முதலிடம் கொடுப்பேன். மாற்றுக் கருத்து இருந்தால் மிகுந்த பயத்துடன் தான் சொல்வேன். அவர் அதற்குக் கொடுக்கும் மரியாதை, ஐதயை பயம் அவசியமற்றது என்பதை X தோழர் நவம்.உணர்த்தும் என் கருத்துச் சரியென்றால் தயக்கமின்றி ஏற்பதும், இல்லையென்றாலுங் கூட கவனத்திலெடுக்கும் அக்கறையுடன் செவிமடுப்பதும் அவரது பண்பு.
அவருடைய தீவிர அக்கறை அரசியல் சார்ந்ததாக இருந்த போதிலும், தேசிய கலை இலக்கியப் பேரவையிலும் அதேயளவு ஆர்வத்துடன் அவர் இயங்கியிருக்கிறார். எந்தவொரு கூட்டத்துக்காவது அவர் சொல்லாமல் இருந்ததில்லை. அனைத்திலும் அவரைக் காணலாம். பேச்சாளர்களது உரை மீதான அவரது விமர்சம், அவற்றை எவ்வளவு கவனத்துடன் அவர் கேட்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கும்.
யாழ்ப்பாண நகரில் மிக இளைஞர்களுக்கான வகுப்பொன்றைத் தொடர்ச்சியாக நான் எடுக்க வேண்டியிருந்தது. அது அவருக்கு அவசியமற்றது தத்துவத்திலும் நடைமுறையிலும் மார்க்சியத்தின் பல படிகளை அவர் கடந்துவிட்டவர். ஆரம்ப அறிமுக நிலை வகுப்பை நான் எடுத்த போதும், முழு நேரமும் இருந்து கேட்பார்.
என்னுடைய இயல்புக்கு நான் தமிழர் வரலாற்றை முன்னிறுத்திய வர்க்கத் தோற்றத்தையும், வரலாற்றுச் செய்நெறியையும் விளக்குவேன். அதனுடன் இணைத்துத்தான் ஐரோப்பிய அனுபவத்தைக் குறைந்த அளவில் சொல்வேன். இதனைத் தோழர் நவரத்தினம் எப்படி எடுப்பாரோ என்கிற பயம் எனக்கிருந்தது. முதலிரு வகுப்புகளில் எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. மூன்றோ, நான்கோ சரியாக நினைவில்லை, பின்னர் தான் எனது வகுப்பு நன்றாக இருப்பதாய்ச் சொன்னார். மார்க்சியத்தை எமது அனுபவங்களினூடாகச் சொல்வதே சிறந்ததென உற்சாக மூட்டினார்.
ஒருவகையில் என் எழுத்துக்களில் அசட்டுத் துணிச்சல் உண்டு, அதற்கான உத்வேகத்தைத் தந்ததில் தோழர் நவரத்தினத்துக்கும் பங்குண்டு. அவர் எந்த வகுப்பு முறைமையை நிராகரித்திருந்தால் பலவற்றை நான் எழுத முடியாமல் இருந்திருக்கும். ஏதோ துணிச்சலில் எழுதிவிட்டதால், இனி விவாதிக்கலாம், தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம். செயற்பட உத்வேக மூட்டிய அவரது பங்கு என்றென்றும் நினைவு கூரத்தக்கது. இப்போது எழுதியன பற்றி அவரிடம் கருத்துக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன், இப்படிச் சந்திக்க முடியாமல் ஆகும் எனத் கனவிலும் கருதியிருந்ததில்லை.
அவரையும் எம்முடன் சேர்த்து இனி எமது வேலை இரட்டிப்பாக வேண்டும். அவர் அதற்கான பலத்தைத் தருவார்- துக்கத்தைப் பலமாக மாற்றுவோம்! -ந. இரவீந்திரன்
தோழர் நவம் எழுதிய கவிதை
சோ. தேவராஜா, சட்டத்தரணி (அரசியல்குழு உறுப்பினர், புதிய ஜனநாயகக் கட்சி)
கொக்குவில் மஞ்சவனப் பதியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகிறது. ‘தமிழ் மாணவர்கள் மீது தரப்படுத்தலைத் திணிக்காதே’ என்ற கோசத்துடன் 1972இல் தமிழ் மாணவர்கள் அணி திரண்டு யாழ் முற்றவெளி மைதானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அவ்வூர்வலம் முஸ்லிம் மக்களின் வீதிகளையும் ஊடறுத்துச் செல்கிறது. அப்போதைய கல்வி அமைச்சராக ‘அல்ஹாஜ் பதியுதீன் மாஹற்மூத் பதவியிலிருந்தமையால் அவ்வூர்வலத்தில் கலந்து சென்ற மாணவர்களில் சிலர் முஸ்லீம் மக்களின் மதத்தை ஊறு செய்யும் விதமாக தம்பாட்டில் சுலோகங்களைக் கோசிக்கின்றனர். அதனால் கோபமுற்ற சில தமிழ் இளைஞர்கள் கொம்யூனிஸ்ட்டுகளாய் இருந்த காரணத்தால் அத்தகைய இனவாத சுலோகங்களை உச்சரித்தமையை விமர்சித்து விவாதிக்கின்றனர்.
ஊர்வலம் பெருந்திரளான மாணவர்களை அன்று அணிதிரட்டியிருந்தமை தமிழ்ப் பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஊட்டியிருந்தது. பல கேள்விகளை தமிழ் தேசிய அரசியலை நோக்கி எழுப்பியது.
தமிழ்த் தேசியம் எந்த வர்க்கத் தலைமையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் சலனத்தை உண்டுபண்ணிவிடுமென்ற தவிப்பால் மேட்டுக்குடியினர் மிகக் கவனமாகவே தமிழ் மாணவர்களை இனவாதத்தின் பக்கம் உசுப்பிவிடுவதற்கு தயாராகவே காத்திருந்தனர்.
இக்காலத்தில் தமிழ் மாணவர்களை இலக்காகக் கொண்டு வடக்கிலே கொம்யூனிஸ்ட் இளைஞர்களால் ‘தீ’ எனும் பெயரில் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பத்திரிகையில், தமிழ் மாணவர்களுக்கெதிராக, அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டன.
தமிழ் மாணவப் பேரவையின் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஊர்வலம் இன்னும் வந்து முடியவில்லை. பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன. மாணவர்கள் மேடையில் ஏறி வீரமுழக்கம் செய்கின்றனர்.
தமிழ் மாணவர்கள் செல்லவேண்டிய திசைமார்க்கத்தை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை வர்க்க வழிகாட்டியாக கைகளில் ஏந்தி ஓர் சுறுசுறுப்பான இளைஞனும் கூட்டாளிகளான அவனது சில தோழர்களும் இவ்வூர்வலத்தின் இறுதியில் கூட்டமைதானமான முற்றவெளியில் விநியோகிக்கின்றனர்.
கூட்டத் தரின் இடையிலே ஒரு சலசலப்பு. மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓர் இளைஞனைப் பிடித்துச் சில மாணவர்கள் தாக்குகின்றனர். அந்த இளைஞன் துணிவாக நின்று பதில் சொல்கின்றான். அவனது பிரசுரங்கள் மாணவர்களின் கைகளுக்குச் செல்கிறது.
யாரவன்? எதற்காகத் தாக்கப்பட்டான்? "துரோகி என்றவாறு சில மாணவர்கள் சொல்லிச் செல்வது கேட்கிறது. ‘எங்கடை கூட்டத்திற்குள் வந்து கொம்யூனிஸ்ட்டுக்கள் நோட்டீஸ் குடுக்கிறாங்கள்’ என்று புறுபுறுத்துச் செல்வது கேட்கிறது. இதேபோல், 1971இல் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும் அன்றைய ஆஸ்தான கவிஞர் ஒருவர் "துரோகி என பேராசிரியர் கைலாசபதியை அடையாளப்படுத்தினார். பேராசிரியர் கைலாசபதி பற்றி இவ்வாறாகத்தான் முதன்முதலாக அறிகிறேன். அதுபோன்றே கூட்டத்தில் பிரசுரம் விநியோகித்ததால் "துரோகி எனப் பெயர் சூட்டப்பட்ட பெயர் தெரியாத அந்த கொம்யூனிஸ்ட் இளைஞன் "தோழர் நவம்' என்பதை நான் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அந்த முதன் முதல் அறிமுகம் இப்போது நினைக்கவும் அதிசயமாகத்தான் இருக்கிறது. 
1975இல் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் 'ஆத்திசூடி வீதி என்ற முகவரியை முதன்முதலில் 'தாயகம்' சஞ்சிகையில் பார்த்தேன். அதுவே 'தாயகம் வெளியீட்டு முகவரியாக இருந்தது. எனவே, அந்த முகவரிக்குரியவரைத் தேடி அறிய வேண்டுமென்று விரும்பினேன். அது அன்று கைகூடவில்லை. அவரது அறிமுகம் கட்சி மூலமே பின்னர் கிடைத்தது.
1978இல் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக் கருகில் காலையில்
சென்றுகொண்டிருக்கின்றேன். மக்கள் கூட்டம் திரண்டு பரபரப்புடன் காணப்படுகின்றது. எல்லோரும் முகங்களில் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியபடி இரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஜி.சி.ஈ. (ஓ.எல்) பரீட்சையைக் குழப்புவதற்காக இயக்கப் பொடியள் இரண்டு பேர், அதிபர் ஒருவர் வினாத்தாள்கள் கொண்டுவரும்போது அதைப்பறித்துக்கொண்டு ஓடியதாகவும் அப்போது பொலிஸ் அவர்களைப் பிடித்துக்கொண்டது என்றும் அனுதாபத்துடன் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். மற்றப் பொடியன்கள் தப்பிவிட்டான்கள் என்றும் குசுகுசுக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர்தான் தோழர் நவம் என்று அறிகிறேன்.
உண்மையில் நடந்தது வேறு சம்பவம். மக்கள் பேசியது இன்னொன்றைப் பற்றி என்பதை அன்று மாலை தெரிந்து கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான ஓர் ஆசிரியரை உயர்த்தப்பட்ட தமிழ் அதிபர் ஒருவர் சாதி ரீதியிலே பாரபட்சம், புறக்கணிப்பு செய்து அவமானமாக நடத்தினர். அது பற்றிக் கிடைத்த முறைப்பாட்டினாலேயே அவ்வதிபரை வழிமறித்து விவாதிக்க முயற்சித்தபோது, தற்செயலாக அவரது கையில் ஜி.சி.ஈ. சாதாரண பரீட்சை வினாத்தாள்கள்இருந்தமையால் கதையே மாறிவிட்டது.
யாழ்ப்பாணச் சமூகத்தில் தமிழ் மக்களை இன்றுவரை வெவ்வேறாக அடையாளப்படுத்தும் 'சாதியம்’ என்னும் வடுவானது பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றுக்குமப்பால் ஒடுக்குதலாக மாறும்போதெல்லாம் அந்தந்தக் களங்களில் நின்று போராளியாக குரல் கொடுக்க தோழர் நவம் என்றும் தவறியதில்லை. கோடாலிக்காடு முதல் முதலிகோவிலடி, திடற்புலம், புன்னாலைக்கட்டுவன் வரை பல கிராமங்களில் அவர் துடிப்போடு பணி புரிந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கை இராணுவமும் அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சருமான அத்துலத்முதலி அவர்கள் சிங்கள தேசத்தைப் பாதுகாக்கும் அவாவில் சுன்னாகம் சந்தையில் பொதுமக்கள் மீது ஹெலித்தாக்குதலுக்கு உத்தரவிட்டு இனவெறிப் போரை வட்க்கு-கிழக்குக்கு நகர்த்தும் தமது வெள்ளோட்டத்தை நடத்திவிடுகின்றனர்.
அன்று தொடக்கம் தோழர் நவம், யாழ்ப்பாணத்த்தில், கொழும்பில், மலையகத்தில், கிழக்கில் நடைபெறும் பேரினவாதச் செயல்களுக்கெதிராக உடனுக்குடன் செய்திகளை கேட்பதும் தகவல்களை அறிவதும், பத்திரிகைகளைப் படிப்பதும், பிரச்சினைகள் நடந்த இடங்களுக்கு விரைவதும், உண்மையைத் தெரிந்து கொள்வதிலும் அவைபற்றி கட்சித் தோழர்களுடனும் நண்பர்களுடனும் ஊரவர்களுடனும் குடும்பத்தினருடனும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதும், பேரினவாதக் கொடுமைகளுக்கெதிராக அனைவரையும் அதன்பால் அனுதாபத்தை தூண்டி ஆதரவோடு அணி திரட்டும் ஆர்வமும் மக்களை வெறும் பார்வையாளர் என்ற தளத்திலிருந்து செயற்பாட்டாளராக உருமாற்றும் கொம்யூனிஸ்ட் ஊழியனாகவே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.
அவரைக் காணும் போது ஒரு புதிய தகவல் இருக்கும். உற்சாகம் பிறக்கும். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்ற ஓர் செயற்திட்டம் உருவாகும்.
1984ல் மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கம் உருவாகியது. அதில் மிகத் தீவிரமான செயற்பாட்டாளராக நவம் மாறிவிடுகிறார். இவ்வியக்கம் 1987 ஒக்ரோபர் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் கால்பதிக்கும்வரை செயற்பட்டது. இவ்வியக்கம் சில இந்திய ஆதரவு இயக்கங்களினால் எச்சரிக்கப்பட்டது. அதிபர் இராஜசுந்தரம் கொல்லப்பட்டார். எனினும் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு விரோதமான குறுந்தேசியவாத இயக்கங்களின் முகமூடிகளைக் கிழிப்பதிலும் அவை பற்றிய எச்சரிக்கையுடனும் செயற்பட்டார்.
அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி வடபகுதிக்கெதிராக எரிபொருள் தடையை அறிமுகப்படுத்தி ஒரு பிரதேச மக்களை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டார். அந்நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 
ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்ட மறியல் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் இறுதியாக யாழ் கச்சேரி முன்றலில் நடைபெற்ற சர்வமதப் பிராத்தனையிலும் முன்னின்று செயற்பட்ட போராளித் தோழர் நவமாவார்.
வட்டுக்கோட்டை, கோடாலிக்காடு, புன்னாலைக்கட்டுவன், இருபாலை, அரியாலை, நெல்லியடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, அல்வாய், நல்லூர், கரவெட்டி, கன்பொல்லை, கிளிநொச்சி, வன்னி, வட்டக்கச்சி, அக்கராயன்குளம் என் யாழ் குடாநாடு முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஈறாக தோழர் நவம் பறந்து திரிந்து, பரந்த இயக்கத்தை முன்னெடுத்த அவரது துணிவும் நம்பிக்கையும் இன்னும் நெஞ்சில் பசுமையாக உள்ளது.
தாயகம் சஞ்சிகையை யாழ்ப்பாணத்தில் கடைத் தெருவில் விநியோகிப்பதும், புதியயூமி மற்றும் பிற எமது நிதி சேகரிப்புகளுக்கு வருவதும் முன்னின்று வழிநடத்துவதும் சகலருடனும் உற்சாகத்துடன் இணைந்து செயற்படுவதும் கண்ணில் இன்னும் தெரிகிறது. நம்பிக்கை இல்லாத நவம் என்பது நாம் காணமுடியாதது. நம்பிக்கை = நவம் என்றுதான் எண்ணத்தில் படுகிறது. எம்மால் எதுவும் இயலும் என்பதன் அடையாளம் தோழர் நவம்.
ஓடும் புகையிரதத்தில் பத்திரிகை விற்பது, யாழ்ப்பாணம் முதல் கிளிநொச்சிவரை சென்று கட்சி, கலை இலக்கியப் பேரவை நூல்களை விற்பதும் விவாதிப்பதும் அவருக்கு இன்பமான செயற்பாடாகும். எப்:ேதும் இயக்கம் இயங்க வேண்டுமென்பது அவரது இதயத் துடிப்பாகும். இயக்கமற்ற இதயத்துடிப்பென்பது அவருக்குத் தெரியாததாகும்.
இந்திய இராணுவத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் வரவேற்று, வழி முழுவதும் மாலைசூட்டி, ஆராத்தியெடுத்து வரவேற்றுத் தமிழீழம் காணும் புளுகத்தில் திளைத்தபோது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கொம்யூனிஸ்ட்டுகளும் தோழர் நவமும் வரப்போகும் இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் குரலெழுப்பியதோடு 16-10-1987ல் ஓர் பிரசுரத்தை வெளியிட்டு பல்ல்ாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தின் கண்களில் புலப்படாமல் விநியோகித்ததில் தோழர் நவம் முன்னின்ற செயற்பாட்டாளராகிறார்.
யாழ் பிரதேசச் சுவர்களில், இந்திய இராணுவத்தை வெளியேறும்படி போஸ்ரர் இயக்கத்தை நடத்துவதில் தோழர் நவம் முன்னின்று செயற்பட்ட முன்னணித் தலைமைப் போராளியாவார்.
அந்நியப் படையினரால் அளந்து தரப்படும் ‘விடுதலை"யைத் தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பது பின்னாளில் தமிழ் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டபோதும் இன்றுவரை இந்தியப் பிரமையும் இந்துத்துவ மாயையும் அகன்றதாகத் தெரியவில்லை.
இலங்கை, இந்திய இராணுவங்களின் கெடுபிடிகளின்போது பொதுமக்கள் மத்தியில் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கர்கள் அமைப்பது பற்றியும், துவக்குச் சூட்டிலும் ஷெல் தாக்குதலிலிருந்தும் ஹெலி விமானத் தாக்குதலிலிருந்தும் எவ்வாறு தப்புவது என்பவற்றைப் பற்றியும் செயன்முறையில் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்று நண்பர்கள், தோழர்கள், ஊரவர்களுக்கு உதவுவதில் முன்னின்று செயற்பட்ட தோழர் நவம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அறைக்குள் புரட்சி செய்யும் சாய்மனைக் கதிரைப்படிப்பு அவருக்குரியதல்ல. கட்சியின் முடிவு என்பதில் முதன்மையாக விவாதிப்பார். விவாதத்தில் பெரியவர், சிறியவர் என்பதற்கு முதன்மை கொடுக்காமல் தனது கருத்தை எவ்வித தயக்கமுமின்றி முன்வைத்து வாதிப்பார். அவர் பற்றி தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. எந்த விவாதத்திலும் "தோழர் நவம் என்ன சொல்கின்றார் என்பதை அவதானிக்க வேண்டும் என்பார். ஏனெனில் வர்க்க முத்திரை அவருக்குரியது. தொழிலாளி வர்க்க உணர்வு அவருடையது. கட்சியின் முடிவு அவரது விருப்புக்கும் கருத்துக்கும் மாறுபாடாயிருப்பினும் அம்முடிவுக்கமைய முன்னின்று செயற்படுவதில் முதல் நிலைப் போராளியாக அவர் விளங்குவார். தேர்தல்களில் கட்சி பங்கு பற்றிய போதெல்லாம் தனது உடலாலும் உள்ளத்தாலும் ஊரெல்லாம் உற்சாகத்தோடு செயற்பட்டார் தோழர் நவம்.
எந்த நிகழ்வுகளிலும் மேடையில் ஏறுவதையோ, முன்வரிசையில் அமர்வதையோ பிரமுகர்களைச் சந்தித்துத் தன்னை அறிமுகப்படுத்துவதிலோ தன்னை முன்னிலைப்படுத்தாமல் எங்கோ ஒருவருடனோ பலருடனோ சமூகச் செயற்பாட்டைத் தூண்டும் முயற்சியிலும் விடயங்களை கற்றுக்கொள்வதிலும் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் தனது நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது அவரது நடைமுறையாகும்.
ஏதேனும் நிகழ்விலோ, கருத்தரங்கிலோ, கருத்து மோதலிலோ ஏதேனும் கருத்துக்கள், தகவல்கள் தவறாக தெரியப்படுத்தப்படுமெனில் அதனைத் தெரிவிப்பவர் எந்த கலாநிதியோ பேராசிரியராகவோ இருந்தாலும் அவரது சமூக அங்கீகாரத்துக்கப்பால் தனது கருத்தை துணிந்து முன்வைப்பார். தயக்கம், கூச்சம் தோழர் நவத்துக்குத் தெரியாதது.
தோழர் நவம் என்ற மூன்றெழுத்துப் பெயர் என்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளங்களில் புத்துணர்வை ஊட்டும் மந்திரமாகும்.
கொம்யூனிஸ்ட் வாழ்வென்பது கடினமானது. ஆனால் இனிமையானது. அத்தகைய இன்பம் எவராலும் ஊறுவிளைவிக்கப்படமுடியாதது. எத்தகைய அவதூறும், அவமானமும், துயரும், வேதனையும் கொம்யூனிஸ்டைத் தீண்டமுடியாது தோற்றுப்போய்விடுவனவாகும்.
அரசியல் என்பது அசிங்கமானது என்ற தற்கால மக்கள் அனுபவம் என்பதுமுதலாளித்துவ தேசியவாத குறுந்தேசியவாதிகளுக்குரிய நியதி. அரசியல் என்பது உண்மை, நன்மை, அழகு, நம்பிக்கை மிக்கது, மாற்றத்தை வேண்டுவது, மக்களை மதிப்பது, மக்களின் இன்பமே தம் இன்பமாகக் காணும் பொதுமைமிக்கது. தன்னலம் அற்றது. தோழர் நவம், சீனப் புரட்சியில் பண்பாட்டுப் புரட்சியில் ஆகர்சிக்கப்பட்டவர். புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை மீதுரப் பெற்றவர். தொழிலாளி வர்க்கத் தலைமையில் தன்னை முன்னிலைப்படுத்தியவர்.
ஆங்கிலத்தில் ‘ஈகோ’ என்றும் சமயத்தில்"ஆணவம்' என்றும் பேசப்படும் தன்முனைப்பற்றவராக, தோழமை உணர்வையே ‘தானாக அடையாளப்படுத்தியவர்.
தனிப்பட்ட வாழ்வில் தந்திரங்கள் அற்றவர். சகலரையும் தானாகவே மதித்துப் போற்றும் சால்பு மிக்கவர். போராட்டம் என்பதே அவருக்கு இன்பம் ஊட்டும் செயற்பாடாகும்.
கட்சிக்குள்ளும் கட்சிக்கப்பாலும் கொம்யூனிஸ்டுகளுடன் பழகுவதும் வாழ்வதும் போராடுவதும் ஐக்கியப்படுவதும் அவரது நடத்தைக் கோலமாகும்.
சர்வதேச கொம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்வியும், மூன்றாமுலக நாடுகளில் கொம்யூனிஸ கட்சிகளின் நெருக்கடியும், தேசியவாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஏற்படுத்திய தாக்கங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு முன்னேறுவதும் விடுதலையை நிதர்சனமாக்குவதும் வர்க்க ஒளியில் அணிவகுப்பதுமே நாம் அவரது நினைவுகளை சுமப்பதாக அமையும்.
‘ஓடும் செம்பொன்னும் ஒப்ப நோக்கும் தமிழர் சால்பு சமூக பக்தியுடைய தோழர் நவத்துக்கு உரியதென்பேன். அதன் விரிவு மட்டு:ே தமிழர் விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையையும் சாதிக்கும் என நாம் துணிந்து கூறலாம். நவம் ஓர் அரசியல் ஞானியென்பது என் மிகைக்கூற்றல்ல.
கவிஞர்கள் மறையலாம். அவர்கள் எழுதிய கவிதைகள் மறையுமா? அவை எம் நினைவில் என்றும் நிலைக்கும். அதேபோல் எம் தோழர் நவம் தன் ஐம்புலன்களால் உடலால் உணர்வால் வாழ்வால் எம் தாயகத்தில் எழுதிய "கொம்யூனிஸ்ட் எனும் கவிதை எம் உள்ளத்தில் என்றும் இன்பம் பயக்கும்.
கவிஞர் சுபத்திரனின் கவி அடிகளினை எடுத்துத் தொடுத்து இறுதி வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.
“குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும்” கோவே தோழர் நவமே எச்சாமம் வந்தாலும் எதிரிகளை வெல்வோம் செங்கொடி பறக்கும் அப்போது சந்திப்போம் இப்போது விடைதருகிறோம் தலைசாய்க்கிறோம்.-சோ. தேவராஜா

சிங்கப்பூர் 25-10-2004 மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக. அன்புக்கும் மதிப்பிற்குமுரிய செந்தில் அவர்கட்கு. தோழர் சி நவரத்தினம் அவர்களது திடீர்மறைவுபற்றிய கடிதமும், இதய அஞ்சலிப் பிரசுரங்களும் தபாலில் வந்ததாக கீர்த்தி என்னிடம் தந்தார். தோழர் சி. நவரத்தினம் அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி மனம் நிரம்பிய துக்கமாக இருக்கிறது. அவர் தனது பொது வாழ்விலும், தன் குடும்ப வாழ்விலும் சமநிலையாகக் கடமையாற்றி எவர் மனமும் புண்படாத வகையில் வாழ்ந்த ஒரு சிறந்த செயல் வீரர் ஆவார். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் முகம் கொடுக்கும் பலவித இன்னல்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர் வாழ்வு சவாலாகத் திகழ்ந்தது. நான் 1998 மார்ச் மாதத்தில் உங்கள் வீட்டிற்கும் - (குழந்தை மணியதாஸின் இழப்பின் நிமித்தம்) வந்து விட்டு தோழர் - நவரத்தினம் வீட்டிற்கும் சென்றிருந்தேன். அவர் தனது வேலை காரணமாக வெளியே போயிருந்தார், சகோதரி சந்திராவும் குழந்தைகளும் தான் அந்தக் குறுகிய இடத்தில் இருந்தார்கள். தோழரைக் கண்டு பேச முடியவில்லை. பொதுச் சேவை செய்யும் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வாய்க்கும் பெண்களில் சகோதரி சந்திரா பற்பல இன்னல்களுக்கு ஆளானவர். எமது நாட்டைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் ஈடுபட்டுப் பணியாற்ற வேண்டுமென்ற துடிப்புள்ள பெண்வர்க்கத்திற்கு வீட்டுக்கடமைகள், பிள்ளைவளர்ப்பு, கணவரின் பணிவிடைகள் என்ற பலபொறுப்புகள் குறுக்கிட்டு அவர்களின் வேகத்தை - மன உந்துதல்களை முடக்கி வைத்து அவர்களை நாலு சுவருக்குள்ளே சுற்றிச் சுற்றி சுழன்று சுழன்று நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் அடக்கி வைத்து விடுகின்றன. ஏதோ என் மன உழைச்சலை எழுதி உங்களையும் கவலைப்பட வைக்க வேண்டாமென. தோழர் சி.நவரத்தினம் அவர்களுக்கு மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறான். இங்ங்ணம் தங்கள் அன்புள்ள அக்கா வ. சுப்பிரமணியம்.

Thursday, October 7, 2004

සහෝදරයා ප්‍රේමලාල් කුමාරසිරි Salute to Comrade Premalal Kumarasiri தோழர் பிரேமலால் குமாரசிறி அவர்களுக்கு எமது அஞ்சலிகள்


இலங்கையின் முதல்  பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய இடதுசாரி எம்.பி. தோழர் பிரேமலால் குமாரசிறி அவர்களுக்கு எமது அஞ்சலிகள் ...
தோழர் பிரேமலால் குமாரசிறி 1919 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் தெற்கில் உள்ள கோனாபினுவல என்ற கிராமத்தில் பிறந்தார் .  அக்டோபர் 2004 இல் இறந்தார் (வயது 84) ஆனால் கிடைக்கக்கூடிய  ஆதாரங்களில் இருந்து உண்மையான இறப்பு தேதியைக் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் காலி ரிச்மண்ட் கல்லூரியிலும்  பின்னர் கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார்.  பிறகு 1941 ஆம் ஆண்டு முதல் அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேரப் பணியை மேற்கொண்டார் . 

1947 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி பேசியதால், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான தோழர் டாக்டர். எஸ்.ஏ. விக்கிரமசிங்க போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார், அதனால் அவர் போட்டியிடுவது சட்டவிரோதமானது. எனவே, மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இளம் பிரேமலால் பெற்றார். 1947 இல் அவர் இலங்கையின் முதல் பாராளுமன்றத்திற்கு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஹக்மானா வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ,  தேர்ந்தெடுக்கப்பட்டார் . இருபத்தெட்டு வயதிலேயே அவர் நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினர். 
தோழர் பிரேமலால் குமாரசிறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) முதல் பொதுச் செயலாளர் ஆவார் . 
1964 இல் சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமர் சோ என்லாய் இலங்கைக்கு விஜயம் செய்தபோது , ​​இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) சார்பாக இரத்மலானை விமான நிலையத்தில் சந்தித்தார்.




Thanks to https://noolaham.net/project/284/28315/28315.pdf Page 2

இலங்கை கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இளைஞர் கழகங்களின் பதுளை மாநாட்டின் இறுதி நாளான 17 மே 1964 அன்று, தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தலைமையில் தோழர் பிரேமலால் குமாரசிறி நீண்ட உரை நிகழ்த்தினார்.

குறிப்பாக தோழர் ரோஹன விஜேவீரவின் தந்தை தோழர் டொன் அன்ட்ரிஸ் விஜேவீர 1947 ஆம் ஆண்டு ஹக்மன தேர்தல் வேட்பாளர் தோழர் பிரேமலால் குமாரசிறியின் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரணி UNP அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என நம்பப்படும் குண்டர்களின் தாக்குதலால் ஊனமுற்றார். தோழர் பிரேம்லாலுக்கு தேர்தலுக்கு முன்னும் பின்னும் கொலை மிரட்டல்கள் வந்தன. பதவிப் பிரமாணம் செய்த பின்னரும் அவர் கொல்லப்படுவார் என்று செல்வாக்கு மிக்க வேட்பாளரிடமிருந்து அவருக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் மக்கள் வழங்கிய ஆதரவு, காப்பாற்றியது. 1951 இல் தேசியக் கொடி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது சிங்கக் கொடியில் மஞ்சள், பச்சைக் கோடுகள் சேர்க்கப்பட்டு தேசியக் கொடியாக ஏற்கப்பட்டது. மஞ்சள் தமிழர்களையும், பச்சை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களாக கொடியில் சேர்க்கப்பட்டன. அப்போது தோழர் பிரேமலால் குமாரசிறி பின்வருமாறு கூறினார். ” இக்கொடி சிங்களவர்களில் மிகவும் மோசமான இனவாதிகளின் ஆதரவுடன் ஏற்கப்பட்டுள்ளது. அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான வரலாற்றின்படி தம்மைச் சிங்கத்தின் வழி வந்தவர்கள் என நம்புகிறார்கள். இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ள கொடி சிங்களவர்களுக்குள் இருக்கும் இவ் இனவாதிகளுக்கு கொடுத்த விட்டுக் கொடுப்பு ஆகும். அவர்கள் பிரித்தானியரின் யூனியன் கொடியின் கீழ் வாழ விரும்புவார்கள். ஆனால் சிறுபான்மையினருக்கு நீதியான சலுகைகள் எதனையும் வழங்கமாட்டார்கள்.” (ஹன்சாட் தொகுதி 9, 1951 : 1670 – 1). தோழர் பிரேமலால் குமாரசிறியின் மூலமாகச் சீனச் சார்பு ​​இலங்கை கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக தோழர் ரோஹண விஜேவீர 1963 ஆம் ஆண்டு சேர்ந்து கொண்டார். 1947 இல் அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தோழர் விஜேவீரவின் தந்தை தோழர் டொன் அன்ட்ரிஸ் விஜேவீர அவர் இறக்கும் 1965 ஆம் ஆண்டு வரை படுக்கையில் இருந்தார். அதற்குள் ஆனந்த குணதிலகவும் Ananda Goonatilleke விஜேவீரவும் முழு நேர கட்சி வேலைக்காரர்களாக இருந்தனர். கட்சி பேப்பர் "கம்கருவா'வின் துணை ஆசிரியராக இருந்த ஆனந்த குணதிலக "லுனு கலபுவ" என்ற இடத்தில் தோழர் விஜேவீரவின் தந்தையின் மரணச் செய்தியையும் தகனத்தையும் எழுதினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் பிரேமலால் குமாரசிறி, இந்த நாட்டின் ஏழை விவசாயிகளின் நலன்களில் அதிக அக்கறை காட்டினார். நாடாளுமன்றத்தில் குத்தகைதாரர்கள் குறித்து பேசிய அவர், "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் திருப்திகரமாகவோ அல்லது போதுமானதாகவோ இருக்கும் என்று நான் நம்பவில்லை. நிலத்தை உழவர்களும் சொந்தமாக வைத்திருக்கும் வரை நிலம், அவர்கள் குறைந்தபட்சம் இந்த இரண்டு நிபந்தனைகளையாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்." "சட்டத்தின் மூலம் குத்தகைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும், குத்தகைதாரர் விவசாயிகள் விளைச்சலில் பெறும் பங்கு சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அது போதுமான பங்காக இருக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன். .....உணவு உற்பத்திக்கு நேரடியாகக் காரணமான விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படாவிட்டால், அவர்களால் நல்ல பலன்களைக் காட்ட முடியாது." "உணவை உற்பத்தி செய்யும் மனிதர்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களின் பாதுகாப்பு முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதிக உணவை உற்பத்தி செய்யச் சொல்ல முடியும். .....அப்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்குப் பணம் கொடுப்பது பற்றிய கேள்வி. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து வகை தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் ஊதிய வாரியங்கள் உள்ளன, ஆனால் நெல் வயல்களில் வேலை செய்யும் மற்றும் பிற உணவு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாய தொழிலாளர்களை உள்ளடக்கிய ஊதிய வாரியங்கள் இல்லை. எனவே, இந்த விவசாயத் தொழிலாளர்களின் வேலைக் காலத்தை, குறிப்பாக ஊதியத்தை நிர்ணயிக்கும் வகையில், மாவட்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இப்படி தோழர் பிரேமலால் விவசாயிகளின் விடுதலைக்காக பேசினார்.

 முன்பு ஒரு பேட்டியில் தோழர் பிரேமலால், திருமணத்திற்குப் பிறகு தனது முதல் இரவு கோட்டா சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்தது என்று கூறினார். எம்.பி.யாக இருந்து சம்பாதித்ததை கட்சிக்கு கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் கட்சியின் தலைமையகத்தில் கட்சியால் வழங்கப்பட்ட ஒரு சிறிய அறையில் வசித்து வந்தனர்.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு அதன் தாக்கத்தை அரசியல் கட்சிகள் மீது ஏற்படுத்தியது. இயக்கத்தினுள் எழுந்த கருத்தியல் வேறுபாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையையும் அதன் சர்வதேசப் பிம்பத்தையும் கடுமையாகச் சிதைத்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் முரண்பாடுகளின் தாக்கத்தை அனுபவித்தது.

இதன் விளைவாக, தோழர் பிரேமலால் குமாரசிறி 1963 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்சியின் பொலிட்பீரோவினால் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். இந்த இடைநீக்கத்திற்கு அவர் அளித்த பதில், தோழர் பிரேமலால் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக ஒரு உறுதியான போராளியாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. தோழர் பிரேமலால் எழுதினார்: "இந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, நான் என்னை அர்ப்பணித்து, ஏற்கனவே 22 ஆண்டுகால வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள புனிதமான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதான எனது விசுவாசத்தால் நான் பின்வருமாறு கூறுகிறேன்: "நான் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். கட்சி உருவாவதற்கு முன்பே, நான் போரின் போது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் நிலத்தடி இயக்கத்தில் இருந்தேன். கட்சிக்காக 20 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் அர்ப்பணிப்பு மற்றும் களங்கமற்ற சேவையை நான் செய்தேன். முழுநேரக் கட்சிப் பணியாளரான நான், கட்சியின் துணைத் தலைவராகவும், தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும், செயல் பொதுச் செயலாளராகவும் இருந்திருக்கிறேன்." "நான் நீண்ட காலமாக கட்சி அமைப்பின் ஆசிரியராக இருந்தேன். கட்சியின் மத்திய குழு மற்றும் அதன் அரசியல் குழுவில் தொடர்ந்து உறுப்பினராக இருந்துள்ளேன். கட்சியின் கடந்த தேசிய காங்கிரஸிலிருந்து, மத்திய குழுவின் செயலக உறுப்பினராக இருந்தேன்." “இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், லங்கா மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் முதல் செயலாளர், கம்யூனிஸ்ட் இளைஞர் சம்மேளனத்தின் முதலாவது தலைவர், கட்சியின் சிசியின் அமைப்புப் பணியகம், விவசாயப் பணியகம், கலாசாரப் பணியகம் போன்ற பல பதவிகளில் நான் பல்வேறு காலகட்டங்களில் இருந்துள்ளேன்." "கடந்த கட்சி காங்கிரஸிலிருந்து நான் கட்சியின் கல்விப் பணியகத்தின் செயலாளராக இருந்தேன், அதில் பல குறைபாடுகளுடன் நியாயமான விமர்சனத்திற்கு தகுதியானது. சிங்களத் தோழர்களுக்கு அதன் இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் தத்துவம் உட்பட மார்க்சிய-லெனினிசத்தை போதிக்க நியாயமான அளவு வேலைகளைச் செய்திருக்கிறேன். நீங்கள் சில சமயங்களில் தயக்கத்துடன் கூட, எனது தத்துவார்த்த பங்களிப்புகளின் மதிப்பை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள், இது பல சந்தர்ப்பங்களில் கட்சியை குழப்பத்தில் இருந்து காப்பாற்றியது." "சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 1957 மற்றும் 1960 மாஸ்கோ கூட்டங்களில் நான் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினேன், இது சர்வதேச சித்தாந்த மோதலில் உள்ள நீரோட்டங்களையும் கீழ்-நீரோட்டங்களையும் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. அனைத்து வெகுஜன பிரச்சாரங்களிலும் வெகுஜன போராட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்கள் மற்றும் தென் மாகாணத்தில் தொழிற்சங்க மற்றும் விவசாயிகள் போராட்டமாக இருந்தாலும் சரி அல்லது கொழும்பில் புகழ்பெற்ற துறைமுகம், டிராம்வே, தேயிலை மற்றும் ரப்பர் வேலைநிறுத்தங்கள் அல்லது 1953 வரலாற்று ஹர்த்தாலாக இருந்தாலும் சரி அல்லது அவை எதிர்ப்பு பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி. - ஏகாதிபத்திய கோரிக்கைகள், மக்கள் உரிமைகள் மற்றும் சரியான முன்னோக்கி வழி." தோழர் பிரேமலால் 1963 ஆம் ஆண்டு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். 1964 இல் தோழர் பிரேமலால் குமாரசிறி இலங்கை கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியை பின்வரும் தோழர்களுடன் உருவாக்க ஏற்பாடு செய்தார்: வி.ஏ. கந்தசாமி, என். சண்முகதாசன் , டி.என்.நடுங்கே, டி.கே.டி.ஜினேந்திரபால, ஹிக்கொட தர்மசேன, கே.மாணிக்கவாசகர் (கார்த்திகேசன் மாஸ்டர் ), என்.எல். பெரேரா, கே.விமலபால, கே.குலவீரசிங்கம், டபிள்யூ.எஸ்.டி.சிறிவர்தன, ஏ.டி. வொட்சன் பெர்னாண்டோ , டபிள்யூ.ஏ. தர்மதாச, எஸ்.எம். விக்கிரமசிங்க, ஏ. ஜயசூரிய, டி.ஏ.குணசேகர, சிறில் குலதுங்க, விக்டர் சில்வா, கே.ஏ. சுப்பிரமணியம் , சுசீமா, கே.வி. கிருஸ்ணகுட்டி, எஸ்.ஜனப்பிரிய, காந்தி அபேயசேகர, இ.டி.மூர்த்தி, எஸ்.எம்.பி. ஜயகோட்டி, தர்மதாச. , எச்.எம்.பி மொஹிதீன், டி.எம்.ஜே.அபேயகுணவர்தன, ஓ.ஏ.ராமையா, டி.பி.அல்விஸ், சி.எஸ்.மனோகர், எஸ்.சிவதாசன் , சமரசிறி டி சில்வா, பி.விஜயதிலக, கரவை கந்தசாமி மற்றும் பலர் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு கட்சியை உருவாக்கினர். இந்தக் கட்சி பலம் பெற்றாலும் 1971 ஏப்ரல் JVP கிளர்ச்சியின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அன்றிலிருந்து தோழர் பிரேமலால் குமாரசிறி ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்தார், ஆனால் தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றியை நம்பினார். தோழர் பிரேமலால் இப்போது இல்லை, ஆனால் அவரது முன்மாதிரியான வாழ்க்கை எப்போதும் நினைவில் இருக்கும்.
Valliammai வள்ளியம்மை சுப்பிரமணியம் Subramaniam

புதிய ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை
பிரேமலால் குமாாரசிறி (பொதுக் காரியதரிசி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) 1964
புரட்சிகர ஐக்கிய முன்னணிக்குள்ள மிக முக்கிய மூலா தாரமான பிரச்சினை தலைமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ஐக்கிய முன்னணியின் தலைமையிலிருக்கும் வர்க்கத்தைப் பொறுத்தே புரட்சி எத்தகைய பாதை எடுக்கின்றது என்பதைத் தீர்மானிக்க முடியும். புரட்சியின் வெற்றியையோ தோல்வியையோ அன்றிப் புரட்சியின் எதிர்கால வளர்ச்சியையோ ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தின் மூலமே தீர்மானிக்க முடியும்.
இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி எடுக்கவேண்டிய பாதையையும், அப் புரட்சியின் வெற்றி தோல்வியையும், புரட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், அதற்கான அணியாகிய அனைத்தையும், புதிய ஜனநாயகப் புரட்சியின் பொழுது அமைக்கப்படும் அல்லது அமைக்கப்படவேண்டிய பரந்த ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தினுலேயே தீர்மானிக்க முடியும்.
இலங்கை மக்கள் எடுக்கக்கூடிய ஒரேயொரு சரியான நடைமுறைப் பாதை, புதிய ஜனநாயக நெறியில் அமைந்த சோஷலிஸப் பாதையாகும். (புதிய ஜனநாயக முறை எனப்படுவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றிய பின் ஸ்தாபிக்கப்படும், அரசியல் ரீதியில் சுதந்திரமானதும் யொருளாதார ரீதியில் செழிப்பானதும், பரந்த மக்களுக்கு ஜனநாயகத்தை அளிப்பதும், புதிய முற்போக்கான தேசிய கலாச்சாரத்தைக் கொண்டதுமான, தொழிலாள வர்க்கத் தலைமையிலான பல வர்க்க மக்களின் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியாகும்.) இப் பாதையில் வெற்றிகரமாக முன்செல்வதென்றல், எமது கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் மிகவும் பரந்தளவில் நண்பர்களை வென்றெடுத்துப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை ஸ்தாபித்தல் வேண்டும்.
வர்க்கத் தொடர்புகளை ஒட்டிப் பார்க்கும் பொழுது, இலங்கைப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை இருவகை மருவங் கொண்டதாக இருத்தல் வேண்டும், புரட்சிகர ஐக்கிய முன்னணியாகிய நேசக்கூட்டு மூலம் இந்த இருவகை உருவங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஒன்று, தொழிலாளி வர்க்க மும், மறுபக்கத்தில் விவசாய மற்றும் உழைக்கும் வர்க்க மக்களும் அமைக்கும் நேசக் கூட்டாகும். (மற்றும் உழைக்கும் மக்களாகிய தனிப்பட்டமுறையில் கைத்தொழில் செய்பவர்கள் சிறிய சில்லறை வியாபாரிகள் தாம் சுரண்டப்பட்டாலும் மற்றவர்களை சுரண்டாத வகையைச் சேர்ந்த புத்திஜீவிகளும், பரந்த மாணவர்களும்,  வாலிபர்களும் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) இந்தக் கூட்டின் பிரதான அம்சம் தொழிலாள, விவசாயிகள் ஐக்கியமாகும். விவசாய, மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும், அத்தகைய தலைமையை ஸ்திரப் படுத்துவதும் இந்த தொழிலாள, விவசாயிகளின் நேசக் கூட்டின் மூலமேயாகும். தொழிலாள வர்க்கம் தேசிய முதலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுடன் சேராத, ஆனல், ஆதரவைப் பெறக்கூடிய பகுதிகளுடன் அமைக்கும் நேசக் கூட்டு மற்றையதாகும். (ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சுதந்திரத்தையும் விரும்பும், ஆனல் தனிநபர் சொத்துரிமையை இல்லாமல் செய்வதையும் உண்மையான சோஷலிஸத்தை அமைப்பதையும் விரும்பாத மத்திய முதலாளிகளும் உயர் மட்டத்திலிருக்கும் சிறு முதலாளிகளும், அவர்களுடைய புத்திஜீவிகளும் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்) இதன் பிரதான அம்சம் தேசிய முதலாளி வர்க்கத்துடன் நேசக் கூட்டு ஏற்படுவதாகும். தேசிய முதலாளிகள் மற்றும், தேசாபிமானப் பகுதிகள் மத்தியில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும் அத் தலைமையை ஸ்தாபிப்பதும் இந் நேசக் கூட்டு மூலமேயாகும்.
இவ்விருவகை நேசக் கூட்டுகளிலும் அடிப்படையானதும், ஜக்கிய முன்னணி அமைப்பின் அத்திவாரமாக அமைவதும் தொழிலாள, விவசாயிகள் கூட்டாகும். தொழிலாள, விவசாயிகள் கூட்டு கட்டி எழுப்பப்படுமளவிற்கு, பலமுறுமளவிற்கு தொழிலாள வர்க்கம் தனது / பக்கத்துக்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபிமான பகுதிகளையும் வென்றெடுக்க முடியும்; பரந்த முதலாளி வர்க்கத்தையும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தையும் பிரித்து தனிமைப்படுத்த முடியும்; அதேபோல புரட்சியின் வெற்றியை ஸ்தாபிக்கும் சாத்தியப்பாடும் விரிவுறும். சுருக்கமாகவும், அடிப்படையாகவும் கூறுவதாணுல் பாட்டாளிவர்க்கத் தலைமை சம்பந்தப்பட்ட பிரச்சனை விவசாய மக்கள் மற்றும் உழைக்கும் மக்களை தமது பக்கத்துக் வென்றெடுக்கும் பிரச்சினையாகும். தொழிலாள, விவசாயிகள் நேசக் கூட்டை ஏற்படுத்தி விருத்தியாக்கும் பிரச்சினை பாகும். சகல காலனி, அரைக்காலணி நாடுகளிலும் போல இலங்கையிலும் தேசிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினை இதுவேயாகும்.

Premalal Kumarasiri  received the first Premier of the People's Republic of China on behalf of the Ceylon Communist Party (Maoist) when Zhou Enlai visited Sri Lanka in 1964.
தேசிய முதலாளித்துவ வர்க்கம், மற்றும் உழைக்கும் மக் ாளேச் சேராத, ஆனல் ஆதரவு பெறக்கூடிய பகுதிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குமிடையே அமைக்கம்படும் நேசக் கூட்டு பி ர தா ன மா ன கூட்டாக முடியாது. அது ஆரம் பக் கூட்டாக அமைந்தாலும் இலங்கையில் இருக்கும் விசேஷ நிலைமையின் கீழ் இந்தக் கூட்டு முக்கியமானதொன்ருகும். தேசிய முதலாளி வர்க்கத்துடன் அமைக்கப்படும் இந்நேசக் கூட்டு அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லா விட்டாலும் தொழிலாள வர்க்கம் தனது தலைமையில் அதனை அமைப்பதற்கு ந ட வ டி க் கை க ள் எடுத்தல் வேண்டும். தொழிலாள வர்க்கம் புரட்சிகர ஐக்கிய முன்னணியின் சம் பூரணமான சகல அம்சத் தலைமையைப் பெறவும், தொழிலாள-விவசாயிகள் கூட்டின் ஆரம்ப அணியை உற்பத்தி செய்யவும், ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ வர்க்கத்தைப் பூரணமாகத் தனிமைப்படுத்திப் பலவீனப் படுத்தவும், புரட்சியின் வெற்றியை உத்தரவாதப் படுத்தவும் இதன் மூலம் மட்டுமே முடியும்.
தொழிலாள-விவசாயிகள் கூட்டை உருவாக்கி விருத்தியாக்குவதன் அடிப்படையான, தமது பக்கத்துக்கு வென்றெடுக்கக்கூடிய சகல அணிகளையும் வென்று, நாட்டின் மக்கள் தொகையின் பெரும்பான்மையினரின் ஐக்கியத்துடனேயே தொழிலாள வர்க்கம் தமது பலம் மிக்க பூரணமான தலைமையை ஸ்தாபிக்க முடியும்; எதிரியைத் தனிமைபடுத்திப் பலவீனப் படுத்த முடியும்; புரட்சியின் வெற்றியைக் காண முடியும் என்பதைச் சீனம் தொட்டு சகல காலனி, அரைக்காலணி நாடு களிலும் வெற்றிகண்ட புரட்சிகளும் உதாரணமாக அமைந்து எமக்குக் கற்பிக்கின்றன.
பாட்டாளி வர்க்கத் தலைமையை ஸ்தாபிப்பதும் பலப் படுத்துவதும் போராட்டத்திற்கு அவசியமான காரியம். அப் போராட்டம் ஏகாதிபத்திய சார்பான முதலாளித்துவ வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்தும் காலனி, அரைக்காலணி முறை, தேசிய முதலாளித்துவப் பகுதி பிரதிநிதித்துவப் படுத் தும் பழைய ஜனநாயக முறை ஆகிய இரண்டினையும் எதிர்த்து தொழிலாள வர்க்கத்தின் முயற்சியுடன் புதிய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறும் போராட்டமாகும். முடிவாகப் பார்க் கும்பொழுது பழைய ஜனநாயக முறைப் பாதைக்கு எதிரான போராட்டம் காலனி, அரைக்காலணி முறைக்கு எதிரான போராட்டமேய்ாகும். (பழைய ஜனநாயக முறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற்குப் பின் முதலாளி வர்க் கத்தின் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயக முறையி இ. மூலம் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் செல்வதாகும். புதிய ஜனநாயகமுறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற் குப் பின் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயக முறை அமைப்பின்மூலம் சோஷலிஸப் பாதையில் செல்வதா கும்.) ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிக் காலத்தில் எவ் வர்க்கம் தலைமை அளித்தது என்பதைப் பொறுத்தே இவை இரண்டில் எது என்று இனங்கண்டு கொள்ள முடியும்.
தேசிய முதலாளிவர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப் பாதைக்கெதிரான போராட்டத்தில் முக்கிய கொள்கையாகத் திகழ வேண்டியது தொழிலாள வர்க்கக்தின் பக்கத்துக்கு விவ சாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் வெண்றெடுப் பதாகும். விவசாய மக்களும் நகரப்புற சிறு முதலாளிகளும் பரி ணும வளர்ச்சியினல் பாதிக்கப்படும் வர்க்கங்களாகையால் இரு வகைத் தன்மைகள் கொண்டவையாகும் இவர்கள் மத்தியில் உள்ள பெரும் பகுதியினர் பாட்டாளி வர்க்கத்தின் அரசியலையும் ஸ்தாபன அமைப்மையும் மட்டுமல்லாது தத்துவார்த்தத்தையும் ஏற்றுக் கொள்பவர். இது இந்த வர்க்கங்களின் சிறப்பான புரட்சி கரப் பக்கமாகும். ஜனநாயகப் புரட்சியை விரும்பும் இவர்கள் இவை சம்பந்தமாக ஒன்றுபட்டுப் போராடும் திறமையும் உடைய வர்கள். எதிர்காலத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து சோஷலிசப் பாதையை எடுப்பகற்கும் இவர்கள் தயாராக இருக் கின்ருர்கள், இவ்வர்க்கங்களின் கெட்ட, முற்போக்கற்ற Tவிஷ யம் இவர்களிடையே பவவித பலவீனங்கள் இருப்பதாகும். இந்த ளவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திலும் வித்தியாசமானவர் கள். இவர்சளுக்கு பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாதவரை யில் இவர்கள் பெருமளவிற்கு முன் செல்லாது, தேசிய முதலாளி வர்க்கத்தினதும் சில நேரங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தினதும் ஆதிக்கத்துக்குள் சிறைப்பட்டிருப்பர்.
இதனை நன்கு தெளிதல் வேண்டும். ஒன்று தொழிலாள வர்க் கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் தமது பக்கத்துக்கு வென்றெடுத்தல் வேண்டும். இப் பகுதிகளுக்குக் கல்வி ஊட்டிப் பாதைகாட்டும் தேசிய முத லாளி வர்க்கிம், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் ஆகிய வற்றின் பாதிப்பிலிருந்து அவற்றை விலக்கி, புதிய ஜனநாயக முறைப் பாதைக்கு அவர்கள் வருவதற்கு அவர்களுக்கு உதவுவ தற்கு தொழிலாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமுடையவனதாயிருந்தால் அப்பொழுது பாட்டாளிவர்க்கம் விவசாய மக்கள், சிறு நகரப்புற முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் அரசியல் தலைமையை எடுத்து முதலாளி வர்க்கத்தைத் தனிமைப் படுத்த முடியும். மறுபுறத்தில் இவற்றினை நிறைவேற்ற தொழி லாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமில்லா திருந்தால் அதன் விளைவாக விவசாய மக்களினதும் நகரப்புற சிறு முதலாளி மக்சளினதும் அரசியல் தலைமையை வென்றெடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை இப் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத் தவும் தேசிய முதலாளி வர்க்கத்திற்கும் சில நேரங்களில் ஏகாதி பத்திய சார்பு முதலாளி வர்க்கத்திற்கும் இடங்கொடுப்பதாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கமும் சில வரையறைக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசாபிமான உருவத்தை எடுக்கக்கூடிய வர்க்கம். மற்றைய காலணி அரைக் காலனி நாடுகளைப் போவே இலங்கையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருவகை முகமூடியுடன் இருவகை உருவங்கொண்டதோர் வர்க்கம். தேசிய பொருளா தார அபிவிருத்தி அவர்களின் வர்க்கத் தேவையானபடியால் ஒரளவிற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கும். ஒரளவிற்கு தேசிய கைத்தொழில் வளர்ச்சிக்கும் தேசிய வியாபார அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்கும். அதேபோல் விதேச பாதிப்புக்கு எதிராக தேசிய பண்பாட்டை வளர்க்க நடவடிக்கை எடுக்கும். மறுபக்கத்தில், தேசியமாயிருந்தாலும் முதலாளி வர்க் கம் ஆனபடியால் அவர்கள் தமது வர்க்க நலன்களை ப்பாதுகாப்பதற்காகத் தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுப்பர். சோஷலிசம் பற்றி வாய்கிழியப் பேசினலும் முதலாளி வர்க்கப் பாதையிலேயே செல்ல விரும்பும் அவர்கள் தொழிலாள வர்க்க விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தமது வர்க்கத்தின் நலனுக்காக ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக் கைகளை எடுக்கும் அவர்கள் அதற்காக உழைக்கும் வர்க்க மக்க ளின் ஆதரவைத் தேடுவர். அதேநேரத்தில் தமது வர்க்க நல னுக்காக முதலாளித்துவ சலுகைகளைப் பாதுகாக்க நடவடிக்கை கள் எடுக்கும் அவர்கள் அதற்கு ஊறுவிளைக்கும் தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவர். அவர்களின் இயற்கையான குளும்சம் ஊசலாட்டமும் நடுவழியில் காட்டிக்கொடுப்பதுமாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்திய சார்பு (யு. என். பி.) முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து பிரிந்து அதற்கு (pTGð7 Lunt டான ஓர் சக்தியாகும். 1951-ல் காலஞ் சென்ற எஸ். ட பிள்யு ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் யூ. என். பி.யிட மிருந்து பிரிந்து வந்து பூரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்த தன் பின் தேசிய முதலாளி வர்க்கம ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அணியாகப் படிப் படியாக வளர்ச்சி அடைந்தது. வர்க்கம் என்ற முறையில் பொருளாதார ரீதியில் பலவீனமான அவர்களுக்கு தனியணுக எழுந்து நிற்கும் வன்மை இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் ஆதரவின்றி அவர்கள் தனியணுக ஆட்சி அமைக்க முடியா திருந்தபடியாலும், இன்னும் பலத்துடன் திகழும் யூ. என் யின் பிற்போக்குக்குப் பயந்தபடியாலும் அவர்கள் ஒரள விற்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டனர். ஒரளவிற்கு முற்போக்கு நடவடிக்கைகள் எடுத்தனர். முன்னர் தேசிய பண் பாட்டுப் பிரச்சினைகளில் மூழ்கி இடதுசாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து இடதுசாரி இயக்கத்தைக் கைவிட்ட அணியில் சிக்கி இருக் கும் குழுவும் இன்று தேசிய முதலாளி வர்க்க அரசியல் அணியில் இடம் பிடித்துள்ளது என்பதும் கவனத்துக்குரியது. எப்படியிருந்தாலும் மேலே கூறப்பட்டவாறு எந்தத் தேசிய முதலாளி வர்க்கத்திற்கும் இருக்கும் குறைபாடும் இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் உண்டு.
தேசிய முதலாளி வர்க்கத்தின் தலைமையில் 1956-ல் நடை பெற்ற மாற்றத்தின் மூலம் ஏகாதிபத்தியத்துக்கும் அதனுடன் சார்புள்ள உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ முறைக்கும் ஒரளவிற்கு அடி விழுந்தது. சில சில ஏக திபத்திய எதிர்ப்பு நிலப்புரபுத்துவ எதிர்ப்பு நடிவடிக்கைகள் அந்த மாற் றத்தின் பின் எடுக்கப்பட்டன. ஓரளவிற்குப்பொது மக்களின் சிந்தனையும் விரிந்தது. அந்த மாற்றத்தின் சரித்திர முக்கியத்துவம் பெரிதாயினும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவனதிர்ப்பு நடவடிக்கைகளை பூரணமாக நிறைவேற்ற அதனுல் முடியவில்லை.
இதில் ஒரு விஷயம் நிரூபிதமாகிறது. தேசிய முதலாளி வர்ச்கத்தின் தலைமையில் நடத்தப்படும் பழைய ஜனநாயக முறைப் பாதை தற்பொழுதைய சரித்திர நிலைமைகளின் கீழ் மறு நாடுகளைப் போலவே இலங்கைக்கும் பொருந்தாதது. ஏகாதிபத்திய பாட்டாளி வர்க்கப் புரட்சி யுகத்தில் நடைபெறும் இப் புரட்சி பழைய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறமுடியாது.
இலங்கையில் தற்பொழுது போராடும் இரு அணிகளான புரட்சி அணி, எதிர்ப் புரட்சி அணி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் கடுமையான போராட்டத்தில் சிக்கி இருக்கும் தேசிய முதலாளி வர்க்கம் பலவீனமானது, சிறியது. திரும்பவும் தோல்வியை எதிர்நோக்கவோ அல்லது திரும்பவும் பிற்போக்கு யூ. என். பி. ஆட்சிக்குக் கீழ் இருக்கவோ விருப்பமில்லாத அவர்களுக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ யூ. என். பி. பிற்போக்கு வாதிகளுக்குமிடையே பரஸ்பர முரண்பாடுகளும் தகராறுகளும் உண்டு. அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நிகழும் மக்கள் புரட்சி அணி பூரணமாக வெற்றியீட்டி இலங்கையில் புதிய ஜனநாயக முறை மக்கள் அரசாங்கம் ஏற்படுத்துவதைக் குறித்தும் அவர்கள் பயப்படுகின்றர்கள். ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்துக் கும் ஏகாதிபத்திய சார்பு யூ. என். பி. முதலாளி வர்க்கத்துக்கும் எதிராக தயவு தாட்சண்ணியமின்றியும் தீர்க்கமாகவும் நடைபெறும் புதிய ஜனநாயக முறைப் புரட்சிச் சமயத்தில் இலங்கைப் புரட்சி அணிகள், ! எதிர்ப் புரட்சி அணிகள் ஆகியவற்றிற்கிடையேயிருக்கும் தேசிய முதலாளி வர்க்கத்திற்கு சரியான முறையில் அரசியல் சக்தியாக வளரவோ அன்றித் தமது நோக்கங்களைத் தாமாகவே நிறைவேற்றவோ முடியாத நிலைமை எழுந்துள்ளது. இன்று அடிபடும் கூட்டு அரசாங்க இயக்கத்தின் தர்க்க ரீதியான பின்னணி இதுவேயாகும்.
சீன சமுதாயத்தின் வர்க்கங்களின் ஆராய்வு என்ற தலையங்கத்தில் 1962-ம் ஆண்டு தோழர் மா சே-துங் எழுதிய கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுதல் உசிதமானது.
**தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் அரசாங்கத்தை ஸ்தாபிக்க தேசிய முதலாளி வர்க்கம் எடுக்கும் முயற்சி சற்றும் செயல்படுத்த முடியாதது. ஏனென்ருல் இன்றைய உலக நிலைமையில் பிரதான அணிகள் இரண்டாகிய புரட்சி, எதிர்ப் புரட்சி அணிகளிடையே இறுதிப் போராட்டம் நடை பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இடையிலிருக்கும் வர்க்கங் கள் கலைந்துவிடுவது நிச்சயம். அப்படியாயின் சில பகுதிகள் புரட்சியில் இணைவதற்காக இடது பக்கம் திரும்பும். மறுபகுதி கள் எதிர்ப் புரட்சியில் இணைவதற்காக வலது பக்கம் திரும்பும். மேலும் சுயேச்சையாக இருப்பதற்கு அவர்களுக்கு இடம் கிடையாது. ஆகையால் தான் அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றி சுயேச்சையான புரட்சி செய்வது சம்பந்தமாக சீனத்தில் மத்திய முதலாளி வர்த்தத்திற்கிடையே இருக்கும் அபிப்பிராயம் வெறும் மாயை மட்டுமேயாகும்.'
தேசிய முதலாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறை, மாயை அபிப்பிராயம் மத்திய பாதை எனப்படுவதன் மூலம் வெளிவருகின்றது; யூ. என். பி. மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் ஏகாதிபத்திய சார்பு முதலாளிகளுக்கு நெருங்கியது. அரைக் காலணி அரை நிலப்பிரபுத்துவ முறையை அமைத்துச் செல்வதே அவர்கள் தேவை.
கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு பூரண சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் கூடிய புதிய ஜனநாயக முறை ஆட்சியமைகக தாமதமின்றி சோஷலிஸத்தை நோக்கிச் செல்வது அவசியமா கும். வலது பக்கமுமில்லை இடது பக்கமும் இல்லை என்ற தேசிய முதலாளி வர்க்கத்துக்குத் தேவையானது சுயேச்சையான முத லாளித்துவ வளர்ச்சி ஆகும். மூலாதாரமாகப் பார்க்குப்பொ ழுது மத்திய பாதை எனப்படுவது பழைய ஜனநாயக முதலாளித்துவக் குடியரசு ஆகும். நீண்டகாலத்துக்கு முன்ன லேயே காலங்கடந்த இம்முறை சரிவராததாகும். தமது வர்க் கத்தின் தலைமையில் சுதந்திர இயக்கமென்ற ரீதியில் இப்பாதை யில் செல்லவேண்டுமென்ற தேசிய முதலாளி வர்க்கத்தின் கொள்கை நிறைவேற முடியாதது. இதன் விளைவாக சுதந்திரமான இயக்கம் விரைவில் சுதந்திரமற்ற நிலைமைக்கு விழும். அதேபோல் அரைக் காலணி பாதையில் தேங்கி நிற்கும். ஆகையால் மத்திய பாதைக் கெதிரான போராட்டம் அரை காலணி முறைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சி யின் பொழுது பாட்டாளி வர்க்க தலைமையை ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் விசேஷமாக தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றைய தேசாபிமான பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென் றெடுக்கவும் தொழிலாள வர்க்கம் ஒரு புறத்தில் தேசிய முத லாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப்பாதையை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தல் வேண்டும். மறு பக்கத்தில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தின் காலணி அரைக் காலணி முறைப் பாதையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தல்வேண்டும். அவ்வர்க்கத்தின் பிற்போக்குப் பலத்தை ஒதுக்கித் தகர்த்தெறிதல் வேண்டும். இவ்விரு போராட்டங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் கூடுதல் முக்கியமானதா கும். தொழிலாள வர்க்கம் அப்போராட்டத்தின் பொழுது தலைமை எடுக்குமளவிற்கு நோக்கத்தை நிறைவேற்றுமள விற்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபி மானப் பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென்று அவர்கள் மத்தியில் தமது தலைமையை ஸ்தாபிப்பது இலகுவாகும். தொழி லாள வர்க்கம் தமது போராட்டத்தை இவ்விரு போராட்டங் களில் ஒன்றுக்கு மட்டும் வரையறைப்படுத்துவது தவருனது. புதிய ஜனநாயகப் புரட்சியில் மேற்கூறப்பட்ட இரு போராட் டங்களையும் வெற்றிகரமாக நடத்துவதன் மூலமே பாட்டாளி வர்க்கத் தலைமையை வெல்லவும் ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் முடியும்.
- பிரேமலால் குமாாரசிறி (பொதுக் காரியதரிசி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி)
Premalal Kumarasiri (12 December 1919 - 7 October 2004)
Thanks to 

கம்யூனிஸ்ட் 1964.06

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_1964.06