"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, October 7, 2004

සහෝදරයා ප්‍රේමලාල් කුමාරසිරි Salute to Comrade Premalal Kumarasiri தோழர் பிரேமலால் குமாரசிறி அவர்களுக்கு எமது அஞ்சலிகள்


புதிய ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை
பிரேமலால் குமாாரசிறி (பொதுக் காரியதரிசி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) 1964
புரட்சிகர ஐக்கிய முன்னணிக்குள்ள மிக முக்கிய மூலா தாரமான பிரச்சினை தலைமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ஐக்கிய முன்னணியின் தலைமையிலிருக்கும் வர்க்கத்தைப் பொறுத்தே புரட்சி எத்தகைய பாதை எடுக்கின்றது என்பதைத் தீர்மானிக்க முடியும். புரட்சியின் வெற்றியையோ தோல்வியையோ அன்றிப் புரட்சியின் எதிர்கால வளர்ச்சியையோ ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தின் மூலமே தீர்மானிக்க முடியும்.
இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி எடுக்கவேண்டிய பாதையையும், அப் புரட்சியின் வெற்றி தோல்வியையும், புரட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், அதற்கான அணியாகிய அனைத்தையும், புதிய ஜனநாயகப் புரட்சியின் பொழுது அமைக்கப்படும் அல்லது அமைக்கப்படவேண்டிய பரந்த ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தினுலேயே தீர்மானிக்க முடியும்.
இலங்கை மக்கள் எடுக்கக்கூடிய ஒரேயொரு சரியான நடைமுறைப் பாதை, புதிய ஜனநாயக நெறியில் அமைந்த சோஷலிஸப் பாதையாகும். (புதிய ஜனநாயக முறை எனப்படுவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றிய பின் ஸ்தாபிக்கப்படும், அரசியல் ரீதியில் சுதந்திரமானதும் யொருளாதார ரீதியில் செழிப்பானதும், பரந்த மக்களுக்கு ஜனநாயகத்தை அளிப்பதும், புதிய முற்போக்கான தேசிய கலாச்சாரத்தைக் கொண்டதுமான, தொழிலாள வர்க்கத் தலைமையிலான பல வர்க்க மக்களின் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியாகும்.) இப் பாதையில் வெற்றிகரமாக முன்செல்வதென்றல், எமது கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் மிகவும் பரந்தளவில் நண்பர்களை வென்றெடுத்துப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை ஸ்தாபித்தல் வேண்டும்.
வர்க்கத் தொடர்புகளை ஒட்டிப் பார்க்கும் பொழுது, இலங்கைப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை இருவகை மருவங் கொண்டதாக இருத்தல் வேண்டும், புரட்சிகர ஐக்கிய முன்னணியாகிய நேசக்கூட்டு மூலம் இந்த இருவகை உருவங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஒன்று, தொழிலாளி வர்க்க மும், மறுபக்கத்தில் விவசாய மற்றும் உழைக்கும் வர்க்க மக்களும் அமைக்கும் நேசக் கூட்டாகும். (மற்றும் உழைக்கும் மக்களாகிய தனிப்பட்டமுறையில் கைத்தொழில் செய்பவர்கள் சிறிய சில்லறை வியாபாரிகள் தாம் சுரண்டப்பட்டாலும் மற்றவர்களை சுரண்டாத வகையைச் சேர்ந்த புத்திஜீவிகளும், பரந்த மாணவர்களும்,  வாலிபர்களும் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) இந்தக் கூட்டின் பிரதான அம்சம் தொழிலாள, விவசாயிகள் ஐக்கியமாகும். விவசாய, மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும், அத்தகைய தலைமையை ஸ்திரப் படுத்துவதும் இந்த தொழிலாள, விவசாயிகளின் நேசக் கூட்டின் மூலமேயாகும். தொழிலாள வர்க்கம் தேசிய முதலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுடன் சேராத, ஆனல், ஆதரவைப் பெறக்கூடிய பகுதிகளுடன் அமைக்கும் நேசக் கூட்டு மற்றையதாகும். (ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சுதந்திரத்தையும் விரும்பும், ஆனல் தனிநபர் சொத்துரிமையை இல்லாமல் செய்வதையும் உண்மையான சோஷலிஸத்தை அமைப்பதையும் விரும்பாத மத்திய முதலாளிகளும் உயர் மட்டத்திலிருக்கும் சிறு முதலாளிகளும், அவர்களுடைய புத்திஜீவிகளும் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்) இதன் பிரதான அம்சம் தேசிய முதலாளி வர்க்கத்துடன் நேசக் கூட்டு ஏற்படுவதாகும். தேசிய முதலாளிகள் மற்றும், தேசாபிமானப் பகுதிகள் மத்தியில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும் அத் தலைமையை ஸ்தாபிப்பதும் இந் நேசக் கூட்டு மூலமேயாகும்.
இவ்விருவகை நேசக் கூட்டுகளிலும் அடிப்படையானதும், ஜக்கிய முன்னணி அமைப்பின் அத்திவாரமாக அமைவதும் தொழிலாள, விவசாயிகள் கூட்டாகும். தொழிலாள, விவசாயிகள் கூட்டு கட்டி எழுப்பப்படுமளவிற்கு, பலமுறுமளவிற்கு தொழிலாள வர்க்கம் தனது / பக்கத்துக்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபிமான பகுதிகளையும் வென்றெடுக்க முடியும்; பரந்த முதலாளி வர்க்கத்தையும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தையும் பிரித்து தனிமைப்படுத்த முடியும்; அதேபோல புரட்சியின் வெற்றியை ஸ்தாபிக்கும் சாத்தியப்பாடும் விரிவுறும். சுருக்கமாகவும், அடிப்படையாகவும் கூறுவதாணுல் பாட்டாளிவர்க்கத் தலைமை சம்பந்தப்பட்ட பிரச்சனை விவசாய மக்கள் மற்றும் உழைக்கும் மக்களை தமது பக்கத்துக் வென்றெடுக்கும் பிரச்சினையாகும். தொழிலாள, விவசாயிகள் நேசக் கூட்டை ஏற்படுத்தி விருத்தியாக்கும் பிரச்சினை பாகும். சகல காலனி, அரைக்காலணி நாடுகளிலும் போல இலங்கையிலும் தேசிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினை இதுவேயாகும்.

Premalal Kumarasiri  received the first Premier of the People's Republic of China on behalf of the Ceylon Communist Party (Maoist) when Zhou Enlai visited Sri Lanka in 1964.
தேசிய முதலாளித்துவ வர்க்கம், மற்றும் உழைக்கும் மக் ாளேச் சேராத, ஆனல் ஆதரவு பெறக்கூடிய பகுதிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குமிடையே அமைக்கம்படும் நேசக் கூட்டு பி ர தா ன மா ன கூட்டாக முடியாது. அது ஆரம் பக் கூட்டாக அமைந்தாலும் இலங்கையில் இருக்கும் விசேஷ நிலைமையின் கீழ் இந்தக் கூட்டு முக்கியமானதொன்ருகும். தேசிய முதலாளி வர்க்கத்துடன் அமைக்கப்படும் இந்நேசக் கூட்டு அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லா விட்டாலும் தொழிலாள வர்க்கம் தனது தலைமையில் அதனை அமைப்பதற்கு ந ட வ டி க் கை க ள் எடுத்தல் வேண்டும். தொழிலாள வர்க்கம் புரட்சிகர ஐக்கிய முன்னணியின் சம் பூரணமான சகல அம்சத் தலைமையைப் பெறவும், தொழிலாள-விவசாயிகள் கூட்டின் ஆரம்ப அணியை உற்பத்தி செய்யவும், ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ வர்க்கத்தைப் பூரணமாகத் தனிமைப்படுத்திப் பலவீனப் படுத்தவும், புரட்சியின் வெற்றியை உத்தரவாதப் படுத்தவும் இதன் மூலம் மட்டுமே முடியும்.
தொழிலாள-விவசாயிகள் கூட்டை உருவாக்கி விருத்தியாக்குவதன் அடிப்படையான, தமது பக்கத்துக்கு வென்றெடுக்கக்கூடிய சகல அணிகளையும் வென்று, நாட்டின் மக்கள் தொகையின் பெரும்பான்மையினரின் ஐக்கியத்துடனேயே தொழிலாள வர்க்கம் தமது பலம் மிக்க பூரணமான தலைமையை ஸ்தாபிக்க முடியும்; எதிரியைத் தனிமைபடுத்திப் பலவீனப் படுத்த முடியும்; புரட்சியின் வெற்றியைக் காண முடியும் என்பதைச் சீனம் தொட்டு சகல காலனி, அரைக்காலணி நாடு களிலும் வெற்றிகண்ட புரட்சிகளும் உதாரணமாக அமைந்து எமக்குக் கற்பிக்கின்றன.
பாட்டாளி வர்க்கத் தலைமையை ஸ்தாபிப்பதும் பலப் படுத்துவதும் போராட்டத்திற்கு அவசியமான காரியம். அப் போராட்டம் ஏகாதிபத்திய சார்பான முதலாளித்துவ வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்தும் காலனி, அரைக்காலணி முறை, தேசிய முதலாளித்துவப் பகுதி பிரதிநிதித்துவப் படுத் தும் பழைய ஜனநாயக முறை ஆகிய இரண்டினையும் எதிர்த்து தொழிலாள வர்க்கத்தின் முயற்சியுடன் புதிய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறும் போராட்டமாகும். முடிவாகப் பார்க் கும்பொழுது பழைய ஜனநாயக முறைப் பாதைக்கு எதிரான போராட்டம் காலனி, அரைக்காலணி முறைக்கு எதிரான போராட்டமேய்ாகும். (பழைய ஜனநாயக முறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற்குப் பின் முதலாளி வர்க் கத்தின் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயக முறையி இ. மூலம் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் செல்வதாகும். புதிய ஜனநாயகமுறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற் குப் பின் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயக முறை அமைப்பின்மூலம் சோஷலிஸப் பாதையில் செல்வதா கும்.) ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிக் காலத்தில் எவ் வர்க்கம் தலைமை அளித்தது என்பதைப் பொறுத்தே இவை இரண்டில் எது என்று இனங்கண்டு கொள்ள முடியும்.
தேசிய முதலாளிவர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப் பாதைக்கெதிரான போராட்டத்தில் முக்கிய கொள்கையாகத் திகழ வேண்டியது தொழிலாள வர்க்கக்தின் பக்கத்துக்கு விவ சாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் வெண்றெடுப் பதாகும். விவசாய மக்களும் நகரப்புற சிறு முதலாளிகளும் பரி ணும வளர்ச்சியினல் பாதிக்கப்படும் வர்க்கங்களாகையால் இரு வகைத் தன்மைகள் கொண்டவையாகும் இவர்கள் மத்தியில் உள்ள பெரும் பகுதியினர் பாட்டாளி வர்க்கத்தின் அரசியலையும் ஸ்தாபன அமைப்மையும் மட்டுமல்லாது தத்துவார்த்தத்தையும் ஏற்றுக் கொள்பவர். இது இந்த வர்க்கங்களின் சிறப்பான புரட்சி கரப் பக்கமாகும். ஜனநாயகப் புரட்சியை விரும்பும் இவர்கள் இவை சம்பந்தமாக ஒன்றுபட்டுப் போராடும் திறமையும் உடைய வர்கள். எதிர்காலத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து சோஷலிசப் பாதையை எடுப்பகற்கும் இவர்கள் தயாராக இருக் கின்ருர்கள், இவ்வர்க்கங்களின் கெட்ட, முற்போக்கற்ற Tவிஷ யம் இவர்களிடையே பவவித பலவீனங்கள் இருப்பதாகும். இந்த ளவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திலும் வித்தியாசமானவர் கள். இவர்சளுக்கு பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாதவரை யில் இவர்கள் பெருமளவிற்கு முன் செல்லாது, தேசிய முதலாளி வர்க்கத்தினதும் சில நேரங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தினதும் ஆதிக்கத்துக்குள் சிறைப்பட்டிருப்பர்.
இதனை நன்கு தெளிதல் வேண்டும். ஒன்று தொழிலாள வர்க் கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் தமது பக்கத்துக்கு வென்றெடுத்தல் வேண்டும். இப் பகுதிகளுக்குக் கல்வி ஊட்டிப் பாதைகாட்டும் தேசிய முத லாளி வர்க்கிம், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் ஆகிய வற்றின் பாதிப்பிலிருந்து அவற்றை விலக்கி, புதிய ஜனநாயக முறைப் பாதைக்கு அவர்கள் வருவதற்கு அவர்களுக்கு உதவுவ தற்கு தொழிலாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமுடையவனதாயிருந்தால் அப்பொழுது பாட்டாளிவர்க்கம் விவசாய மக்கள், சிறு நகரப்புற முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் அரசியல் தலைமையை எடுத்து முதலாளி வர்க்கத்தைத் தனிமைப் படுத்த முடியும். மறுபுறத்தில் இவற்றினை நிறைவேற்ற தொழி லாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமில்லா திருந்தால் அதன் விளைவாக விவசாய மக்களினதும் நகரப்புற சிறு முதலாளி மக்சளினதும் அரசியல் தலைமையை வென்றெடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை இப் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத் தவும் தேசிய முதலாளி வர்க்கத்திற்கும் சில நேரங்களில் ஏகாதி பத்திய சார்பு முதலாளி வர்க்கத்திற்கும் இடங்கொடுப்பதாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கமும் சில வரையறைக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசாபிமான உருவத்தை எடுக்கக்கூடிய வர்க்கம். மற்றைய காலணி அரைக் காலனி நாடுகளைப் போவே இலங்கையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருவகை முகமூடியுடன் இருவகை உருவங்கொண்டதோர் வர்க்கம். தேசிய பொருளா தார அபிவிருத்தி அவர்களின் வர்க்கத் தேவையானபடியால் ஒரளவிற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கும். ஒரளவிற்கு தேசிய கைத்தொழில் வளர்ச்சிக்கும் தேசிய வியாபார அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்கும். அதேபோல் விதேச பாதிப்புக்கு எதிராக தேசிய பண்பாட்டை வளர்க்க நடவடிக்கை எடுக்கும். மறுபக்கத்தில், தேசியமாயிருந்தாலும் முதலாளி வர்க் கம் ஆனபடியால் அவர்கள் தமது வர்க்க நலன்களை ப்பாதுகாப்பதற்காகத் தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுப்பர். சோஷலிசம் பற்றி வாய்கிழியப் பேசினலும் முதலாளி வர்க்கப் பாதையிலேயே செல்ல விரும்பும் அவர்கள் தொழிலாள வர்க்க விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தமது வர்க்கத்தின் நலனுக்காக ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக் கைகளை எடுக்கும் அவர்கள் அதற்காக உழைக்கும் வர்க்க மக்க ளின் ஆதரவைத் தேடுவர். அதேநேரத்தில் தமது வர்க்க நல னுக்காக முதலாளித்துவ சலுகைகளைப் பாதுகாக்க நடவடிக்கை கள் எடுக்கும் அவர்கள் அதற்கு ஊறுவிளைக்கும் தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவர். அவர்களின் இயற்கையான குளும்சம் ஊசலாட்டமும் நடுவழியில் காட்டிக்கொடுப்பதுமாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்திய சார்பு (யு. என். பி.) முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து பிரிந்து அதற்கு (pTGð7 Lunt டான ஓர் சக்தியாகும். 1951-ல் காலஞ் சென்ற எஸ். ட பிள்யு ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் யூ. என். பி.யிட மிருந்து பிரிந்து வந்து பூரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்த தன் பின் தேசிய முதலாளி வர்க்கம ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அணியாகப் படிப் படியாக வளர்ச்சி அடைந்தது. வர்க்கம் என்ற முறையில் பொருளாதார ரீதியில் பலவீனமான அவர்களுக்கு தனியணுக எழுந்து நிற்கும் வன்மை இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் ஆதரவின்றி அவர்கள் தனியணுக ஆட்சி அமைக்க முடியா திருந்தபடியாலும், இன்னும் பலத்துடன் திகழும் யூ. என் யின் பிற்போக்குக்குப் பயந்தபடியாலும் அவர்கள் ஒரள விற்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டனர். ஒரளவிற்கு முற்போக்கு நடவடிக்கைகள் எடுத்தனர். முன்னர் தேசிய பண் பாட்டுப் பிரச்சினைகளில் மூழ்கி இடதுசாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து இடதுசாரி இயக்கத்தைக் கைவிட்ட அணியில் சிக்கி இருக் கும் குழுவும் இன்று தேசிய முதலாளி வர்க்க அரசியல் அணியில் இடம் பிடித்துள்ளது என்பதும் கவனத்துக்குரியது. எப்படியிருந்தாலும் மேலே கூறப்பட்டவாறு எந்தத் தேசிய முதலாளி வர்க்கத்திற்கும் இருக்கும் குறைபாடும் இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் உண்டு.
தேசிய முதலாளி வர்க்கத்தின் தலைமையில் 1956-ல் நடை பெற்ற மாற்றத்தின் மூலம் ஏகாதிபத்தியத்துக்கும் அதனுடன் சார்புள்ள உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ முறைக்கும் ஒரளவிற்கு அடி விழுந்தது. சில சில ஏக திபத்திய எதிர்ப்பு நிலப்புரபுத்துவ எதிர்ப்பு நடிவடிக்கைகள் அந்த மாற் றத்தின் பின் எடுக்கப்பட்டன. ஓரளவிற்குப்பொது மக்களின் சிந்தனையும் விரிந்தது. அந்த மாற்றத்தின் சரித்திர முக்கியத்துவம் பெரிதாயினும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவனதிர்ப்பு நடவடிக்கைகளை பூரணமாக நிறைவேற்ற அதனுல் முடியவில்லை.
இதில் ஒரு விஷயம் நிரூபிதமாகிறது. தேசிய முதலாளி வர்ச்கத்தின் தலைமையில் நடத்தப்படும் பழைய ஜனநாயக முறைப் பாதை தற்பொழுதைய சரித்திர நிலைமைகளின் கீழ் மறு நாடுகளைப் போலவே இலங்கைக்கும் பொருந்தாதது. ஏகாதிபத்திய பாட்டாளி வர்க்கப் புரட்சி யுகத்தில் நடைபெறும் இப் புரட்சி பழைய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறமுடியாது.
இலங்கையில் தற்பொழுது போராடும் இரு அணிகளான புரட்சி அணி, எதிர்ப் புரட்சி அணி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் கடுமையான போராட்டத்தில் சிக்கி இருக்கும் தேசிய முதலாளி வர்க்கம் பலவீனமானது, சிறியது. திரும்பவும் தோல்வியை எதிர்நோக்கவோ அல்லது திரும்பவும் பிற்போக்கு யூ. என். பி. ஆட்சிக்குக் கீழ் இருக்கவோ விருப்பமில்லாத அவர்களுக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ யூ. என். பி. பிற்போக்கு வாதிகளுக்குமிடையே பரஸ்பர முரண்பாடுகளும் தகராறுகளும் உண்டு. அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நிகழும் மக்கள் புரட்சி அணி பூரணமாக வெற்றியீட்டி இலங்கையில் புதிய ஜனநாயக முறை மக்கள் அரசாங்கம் ஏற்படுத்துவதைக் குறித்தும் அவர்கள் பயப்படுகின்றர்கள். ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்துக் கும் ஏகாதிபத்திய சார்பு யூ. என். பி. முதலாளி வர்க்கத்துக்கும் எதிராக தயவு தாட்சண்ணியமின்றியும் தீர்க்கமாகவும் நடைபெறும் புதிய ஜனநாயக முறைப் புரட்சிச் சமயத்தில் இலங்கைப் புரட்சி அணிகள், ! எதிர்ப் புரட்சி அணிகள் ஆகியவற்றிற்கிடையேயிருக்கும் தேசிய முதலாளி வர்க்கத்திற்கு சரியான முறையில் அரசியல் சக்தியாக வளரவோ அன்றித் தமது நோக்கங்களைத் தாமாகவே நிறைவேற்றவோ முடியாத நிலைமை எழுந்துள்ளது. இன்று அடிபடும் கூட்டு அரசாங்க இயக்கத்தின் தர்க்க ரீதியான பின்னணி இதுவேயாகும்.
சீன சமுதாயத்தின் வர்க்கங்களின் ஆராய்வு என்ற தலையங்கத்தில் 1962-ம் ஆண்டு தோழர் மா சே-துங் எழுதிய கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுதல் உசிதமானது.
**தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் அரசாங்கத்தை ஸ்தாபிக்க தேசிய முதலாளி வர்க்கம் எடுக்கும் முயற்சி சற்றும் செயல்படுத்த முடியாதது. ஏனென்ருல் இன்றைய உலக நிலைமையில் பிரதான அணிகள் இரண்டாகிய புரட்சி, எதிர்ப் புரட்சி அணிகளிடையே இறுதிப் போராட்டம் நடை பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இடையிலிருக்கும் வர்க்கங் கள் கலைந்துவிடுவது நிச்சயம். அப்படியாயின் சில பகுதிகள் புரட்சியில் இணைவதற்காக இடது பக்கம் திரும்பும். மறுபகுதி கள் எதிர்ப் புரட்சியில் இணைவதற்காக வலது பக்கம் திரும்பும். மேலும் சுயேச்சையாக இருப்பதற்கு அவர்களுக்கு இடம் கிடையாது. ஆகையால் தான் அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றி சுயேச்சையான புரட்சி செய்வது சம்பந்தமாக சீனத்தில் மத்திய முதலாளி வர்த்தத்திற்கிடையே இருக்கும் அபிப்பிராயம் வெறும் மாயை மட்டுமேயாகும்.'
தேசிய முதலாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறை, மாயை அபிப்பிராயம் மத்திய பாதை எனப்படுவதன் மூலம் வெளிவருகின்றது; யூ. என். பி. மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் ஏகாதிபத்திய சார்பு முதலாளிகளுக்கு நெருங்கியது. அரைக் காலணி அரை நிலப்பிரபுத்துவ முறையை அமைத்துச் செல்வதே அவர்கள் தேவை.
கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு பூரண சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் கூடிய புதிய ஜனநாயக முறை ஆட்சியமைகக தாமதமின்றி சோஷலிஸத்தை நோக்கிச் செல்வது அவசியமா கும். வலது பக்கமுமில்லை இடது பக்கமும் இல்லை என்ற தேசிய முதலாளி வர்க்கத்துக்குத் தேவையானது சுயேச்சையான முத லாளித்துவ வளர்ச்சி ஆகும். மூலாதாரமாகப் பார்க்குப்பொ ழுது மத்திய பாதை எனப்படுவது பழைய ஜனநாயக முதலாளித்துவக் குடியரசு ஆகும். நீண்டகாலத்துக்கு முன்ன லேயே காலங்கடந்த இம்முறை சரிவராததாகும். தமது வர்க் கத்தின் தலைமையில் சுதந்திர இயக்கமென்ற ரீதியில் இப்பாதை யில் செல்லவேண்டுமென்ற தேசிய முதலாளி வர்க்கத்தின் கொள்கை நிறைவேற முடியாதது. இதன் விளைவாக சுதந்திரமான இயக்கம் விரைவில் சுதந்திரமற்ற நிலைமைக்கு விழும். அதேபோல் அரைக் காலணி பாதையில் தேங்கி நிற்கும். ஆகையால் மத்திய பாதைக் கெதிரான போராட்டம் அரை காலணி முறைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சி யின் பொழுது பாட்டாளி வர்க்க தலைமையை ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் விசேஷமாக தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றைய தேசாபிமான பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென் றெடுக்கவும் தொழிலாள வர்க்கம் ஒரு புறத்தில் தேசிய முத லாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப்பாதையை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தல் வேண்டும். மறு பக்கத்தில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தின் காலணி அரைக் காலணி முறைப் பாதையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தல்வேண்டும். அவ்வர்க்கத்தின் பிற்போக்குப் பலத்தை ஒதுக்கித் தகர்த்தெறிதல் வேண்டும். இவ்விரு போராட்டங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் கூடுதல் முக்கியமானதா கும். தொழிலாள வர்க்கம் அப்போராட்டத்தின் பொழுது தலைமை எடுக்குமளவிற்கு நோக்கத்தை நிறைவேற்றுமள விற்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபி மானப் பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென்று அவர்கள் மத்தியில் தமது தலைமையை ஸ்தாபிப்பது இலகுவாகும். தொழி லாள வர்க்கம் தமது போராட்டத்தை இவ்விரு போராட்டங் களில் ஒன்றுக்கு மட்டும் வரையறைப்படுத்துவது தவருனது. புதிய ஜனநாயகப் புரட்சியில் மேற்கூறப்பட்ட இரு போராட் டங்களையும் வெற்றிகரமாக நடத்துவதன் மூலமே பாட்டாளி வர்க்கத் தலைமையை வெல்லவும் ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் முடியும்.
- பிரேமலால் குமாாரசிறி (பொதுக் காரியதரிசி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி)
Premalal Kumarasiri (12 December 1919 - 7 October 2004)
Thanks to 

கம்யூனிஸ்ட் 1964.06

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_1964.06

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்