-------------------
முருகையன் ஈழத்தின் முதன்மைக் கவிஞர்களுள்அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாகஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கிசரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்...வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதிபரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!
------------------ திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம்.
திரு. கே. ஏ. சுப்பிரமணியம் மறைந்து விட்டார். மக்கள் பலராலும் தோழர் என உரிமை பாராட்டப்படும் மணியத்தார் ஒரு மணியான மனிதர். அவர் உயரிய இலட்சியங்களை உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தவர். வெறும் சிந்தனையாளர் அல்லர், தாம் மேற்கொண்ட கொள்கையின் பொருட்டு, அல்லும் பகலும் சோராது உழைத்தவர்; சாதனையாளர்.
அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும். திசுக்கப்பட்டும் சுரண்டப் பட்டும் திண்டாடும் மக்கட் பிரிவினரின் விடிவுக்காகத் தமது சொல்லையும் செயலையும் அர்ப்பணித்த்வர். சாதியத்துக்கு எதிரான போராட்டங்களிலும் இயக்கங்களிலும் அவற்றின் அச்சாணி போல அமைந்து பயன்பட்டவர். அந்தத் தருணங்களில் அவர் காட்டிய துணிவும் ஊக்கமும் ஆற்றலும் வரலாற்று ஏடுகளிற் பதிவு பெற்றுவிட்ட பண்புகள்ா கும்.
மணியத்தாருடன் தனிப்பட்ட முறையிலே பழகும் வாய்ப்பு மிகவும் அண்மையிலே தான் எனக்குக் கிட்டிற்று. ஆனாலும் இந்த ஐந்தாறு ஆண்டுக் காலப்பகுதியில் அவருடைய இனிய இயல்புகள் பலவற்றை தெரிந்து கொண்டேன். நிதானமான சிந்தனைத் தெளிவும், காரியங்களை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தும் திறமையும் அவரிடம் நிறைய உண்டு.
கொள்கை விளக்கங்களான பிரசுரங்களையும் நூல்களையும் வெளிக்கொணர்வதில் அதிக ஆர்வத்தை அவர் அண்மைக்காலங்களிலே காட்டி வந்தார். கருத்தரங்குகளும் ஆய்வுரைக் கூட்டங்களும் அடிக்கடி நடக்க வேண்டும் என்பதும் அவர் விருப்பமாகும். நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் வருங்கால வேலைத் திட்டங்களை பற்றிய எண்ணங்களே அவர் சிந்தனையை நிறைத்திருந்தன
இவ்வாறான ஒரு பெரியவர் நம்மை விட்டுப் பிரிந்தமை பெருந் துயர் தருவதாகும். அவரது பிரிவினால் வருந்தும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் நமது அநுதாபம் உரியது
நீர்வேலி தெற்கு, இ. முருகையன்
* * * *
இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும்.
மணியத்தார் குறிக்கோள் வீரர் - கவிஞர் இ. முருகையன் 1999 கார்த்திகையில் எழுதியது.
சுப்பிரமணியம் என்று சொல்லிய மாத்திரத்தே பற்பல எண்ணம் சூழ்ந்து படர்ந்திடும் தொடர்ந்து நீளும்
துப்புரவாளர் ஒப்புரவாளர் கே..ஏ. உன்னத லட்சியங்கள் நற்பணி இவற்றுக்காக நாள்தோறும் உழைத்து வந்தார்.
அறுபத்தெட் டாண்டின் முன்னால் (1931) அழகிய ஈழமண்ணில் வடபக்கப் புலத்தில் தோன்றி வாலிபப் பருவம் கண்டு , முறுகிய செயல் வீரத்தின் முனைப்புடன் மலர்ந்து நின்றார்.
உறுதியும் உணர்வும் ஓயா ஊக்கமும் பூண்டு கொண்டார்.
சீமெந்துத் தொழிற்கூடத்தின் பயிலுனர் ஆகச் சேர்ந்து, போய் வந்து பணிகள் ஆற்றி உழைப்பிலே திளைத்த வேளை,
ஆர்வங்கள் புதிசாய்த் தோன்ற அங்குள்ள தொழிற்சங்கத்தின் ஊழியம் சிறக்க வேண்டி ஒரு பெரு முயற்சி செய்தார்.
உழைப்பவர் உரிமை வேட்கை ஓங்கிடுமாறு தூண்டும் தொழிற்சங்கத் துறையில் எய்தித் தொண்டராய் மாறிவிட்டார்- விழிப்பொன்றின் துவக்கம் கண்ட மேல் நிலை ஆட்கள் கூடி, குழப்பினாய் அமைதி என்று கோபித்து முரண்டினார்கள் .
- புதிய பூமி 1999
- http://noolaham.net/project/58/5721/5721.pdf Page II
ok ok
ReplyDelete