Sunday, July 12, 2009

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானைத் தோழர் க. இராசையா


  

15-09-1942 தோழர் க. இராசையா 12-07-2009


யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
சங்கானைத் தோழர் க. இராசையா ...
சங்கானைக்கு என் வணக்கம் !

தோழர் இராசையாவின் மறைவுக்கு எமது செவ்வஞ்சலி
அண்மையில் சங்கானைப் பிரதேசத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான தோழர் க.இராசையா இயற்கை எய்தினார். அவர் சங்கானை கிழக்கைச் சேர்ந்தவர். தனது இளமைக் காலத்திலேயே மாக்சிச லெனினிசக் கருத்துக்களால் 1960துகளின் நடுக்கூறிலே ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் வாலிபர் இயக்கத்திலும் பின்பு கட்சியிலும் இணைந்து உறுதியான ஒரு தோழராகவும் போராளியாகவும் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியும் நிதானமும் கொண்ட தோழர் இராசையா மக்களோடும் தோழர்களோடும் மிக நெருக்கமாக நின்று கட்சிவேலைகளை முன்னெடுத்து வந்த ஒருவராக திகழ்ந்தார். அதேவேளை மக்கஞக்கும் கட்சிக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டோருடன் மிகக் கடுமையாக நடந்துகொள்வது அவரது இயல்பாகும். 


 தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்ட காலத்தில் சங்கானைப் பிரதேசத்தில் தோழர் இராசையா ஏனைய தோழர்களோடு இணைந்து நின்று ஒரு புரட்சிகரப் போராளியாகவே திகழ்ந்து வந்தார். அவர் அதிகம் பேசுபவர அல்லர். ஆனால் அவரது கருத்துக்களில் நிதானமும் தூரநோக்கும் பதிந்திருக்கும். 
தோழர் இராசையா புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் குறிப்பிட்ட காலப்பகுதி யாழ்ப்பாண வட  பிரதேச குழுவிலும் இருந்தவர்.
 தோழர் இராசையா 12-07-2009 இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்  மத்திய குழு தனது ஆழ்ந்த செவ்வஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டது. மேலும் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது துணைவியார் பிள்ளைகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டது. தோழர் இராசையாவின் பெயர் என்றும் கட்சியின் தோழர்களின் மத்தியில் நிலைத்து நிற்கும். தோழர் இராசையாவின் மறைவிற்கு  புதிய பூமி தனது புரட்சிகர அஞ்சலியையும் குடும்பந்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதிய பூமி October 2009 ஒக்ரோபர்


'சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்' 






30 நவம்பர் 1989  அன்று சத்தியமனையில் நடைபெற்ற தோழர் கே.. சுப்பிரமணியம் நினைவேந்தல் கூட்டத்தில் :  பேராசிரியர் மௌனகுரு உரையாற்றுகிறார். அவருக்கு அருகில் தோழர் சி. கா. செந்திவேல், தோழர் அழ பகீரதன், தோழர் க. இராசையா, தோழர் காபஞ்சலிங்கம், தோழர் க.ஜெயபாலசிங்கம் 

தோழர் கா. பஞ்சலிங்கம், தோழர் க. இராசையா, தோழர் அழ பகீரதன்















சங்கானைக்கு என் வணக்கம் !

 

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF