"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, September 14, 2009

”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”

”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”


(1)வடக்கே இயங்கியது சீமெந்துத் தொழிற்சாலை....
தெற்கே மிளிர்ந்தது கண்ணாடித் தொழிற்சாலை....
கிழக்கே இருந்தது காகிதத் தொழிற்சாலை....
மேற்கே விளங்கியது புடவைத் தொழிற்சாலை....

(2)கெளரவமாக நான்கு மதங்களின் குருமார்கள்
பெளத்தர்கள்,இந்துக்கள்,இஸ்லாமியர், கிறிஸ்தவர் சகலரும்
ஐக்கியமாகக் கொடுத்து வாங்கி உண்டு உடுத்தி வாழ்ந்த
அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தது....யாதெனில்....

(3)மூன்று இனங்களும் ஒருவர்க்கு ஒருவர்
சான்று பகரும் சகோதர உணர்வுடன்...
வேண்டுமென்று ஒருநாளும் வினைசெய்தறியார்
ஆண்ட பரம்பரைதான் அவர்களைப் பிரித்தது.

(4)மூவின மக்களும் வடக்கிலும் தெற்கிலும்
பூவும்மணமும் போலவே வாழ்ந்த காலத்தில்
தாவிடும் தலைமைப் பதவியின் ஆவலில்
தூவினர் வகுப்புவாதத் துர்மார்க்கச் சொற்களை.

(5)பூலோக கற்பக தருவாகிய பனைமரம்
ஆகாயம் நோக்கி நெடிதாய் வளர்ந்து
தானாக நிலத்தடியின் நீரினை உறிஞ்சி
வானோக்கும் உயர்ந்த பயன் தருகிற்தே! அப்படியே..................

(6)வடபகுதி விவசாயி வயலுக்கு நீர்ப்பாய்ச்ச
விடாமுயற்சி கொண்டு மேகம்பார்த்த பூமியை
உடலுழைப்பு வியர்வைநீர், கிணற்றுநீர் கலந்து
கடுமுழைப் பொன்றினால் பசுமையாய் ஆக்கினான்!

(7)இயற்கை வளங்கள் ஏராளம் நிறைந்திருக்கும்
இலங்கை நாட்டின் சிறப்பினைச் சொல்லிமுடியாது
இயற்கைக் கடற்கரை, ஆறுகள்,மலைகள்
இரசித்துச் சுவைக்கும் தேயிலை, கோப்பி, பழவகையும்

(8)இனிதாக உபசரிக்கும் விருந்தினர் விடுதிகளும்
இயல்பாகச் சிரித்தமுக விமானத்துறை ஊழியரும்
அயல்நாடுகள் விரும்பும் புராதன ஆலயங்கள்
அத்தனை சிறப்பும் இலங்கைக்குத் தனிப் பெருமை!

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்