Wednesday, September 30, 2009

கவிமாலை புனலிலே நன்னீர்

 

கவிமாலை புனலிலே நன்னீர்
     ....................
   சிங்கைக் கடற்கரைக் கவிமாலைப் பத்தாம் ஆண்டை
     பொங்கும் பொறுப்புடன் புரவலர்கள் அயர்வு  இன்றி
   தங்கநிகர் விழாவாக தேசியநூலக கீழ்த்தளத்தில் நடாத்த..
     முந்தைய ஆசான் பிச்சினிக் காடார் வந்ததனால்...
   சங்கொலிபோல் கரவொலியில் சட்டஅமைச்சரும் வருகை தந்தார்.
     பங்கமிலாச் சினிமாத்துறை மறுமீட்சிச் சேரனுடன்...
   வங்கக்கடல் பரந்து விரிந்து நிறைந்தது போல்
     பங்களிக்கப் பார்வையாளர் பலதிசையால் வந்திருந்தார்.


   தமிழ்த்தாய் வாழ்த்தை தரமான கானத்தில் கலையரசி பாட...
     அமிழ்தாக “அதுமட்டும் வேண்டாம்” தலைப்பில் ஐவர்கவி சொல்ல..
   சமூகமளித்த அத்தனை பேரும்மகிழ அமைச்சரின் கையினாலே..
     கணையாழி விருதும் தங்கப் பதக்கவிருதும் வழங்க..
   கமழ்கின்ற நறுமணத்து “பொன்மாலைப் பூக்கள் “ நூலை..
    கவினுறு சேரன் தன்கரத்தினால் வெளியிட்டாரே! நூலைவாங்க..
  புவியிலே மறுபிறப்பாய் பிறந்திட்ட இந்தத் தாயை..
    ”எங்களின் ஒளவை இவர்” என்றாரே புதுமைத் தேனீ.


   சிந்தனை கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க...
    வந்த இவ்வுரிமை..அன்பு..அரவணைப்பு..பாசம்..
  எந்தனுக்கு எப்போது இந்த இணைப்பு ஏற்பட்ட தென்றால்...?
    சொந்தக் கனவிலே நிகழ்ந்த கவிமாலைக் குள்ளேவந்த-அந்த
  நனவுக்குப் பின்னால் தானே ..நானிதை உணர்ந்து கொண்டேன்.
   கனவல்ல; யாவும் உண்மை கவிமாலை எந்தன் அன்னை.
”இன்னும்  கேட்கிற சத்தம்” சொன்ன புதுமைத்தேனீ தன்குரலில்
  ”இன்னும் பல சொந்தங்கள் மனிதருக்கு வேண்டும்” என்றார்.


   மனதிலே பற்பல இழப்புகள்..மரணத்தாக்கம்..வாட்ட
     தினமும் ஏதாவதொரு திசையறியாத் திணறலுடன் -உலர்
  வனத்திலே தனியாளாக தாகமிகுதியால் நாவரண்டு -கவிமாலை
    புனலிலே நன்னீர் உண்ட புத்துணர்வாலே -தினைப்
  புனத்திலே வள்ளி யாக மறுபிறப் பெடுத்தேனென்று....
    எனக்குள்ளே சொல்லிக் கொள்ள இக்கவி பிறக்குதையா!
  கனதியான உறவுக்குள்ளே கால்பதிதத கர்வமொன்று
   தனக்குள் தான் சொல்லுகிற தாயாக இருப்பதாலே!


                                                      வள்ளியம்மை சுப்பிரமணியம்

3 comments:

  1. சுகந்தன்September 30, 2009 at 7:18 PM

    //
    ”எங்களின் ஒளவை இவர்”
    //
    வாழ்த்துக்கள் கூறும் வயதெனக்கில்லையால் அம்மாவிற்கென் வணக்கங்கள்.

    ReplyDelete
  2. Arumaiyaana kavithai.

    ReplyDelete
  3. vow.... மிக அற்புதமான கவிதை... நிகழ்ச்சியை எவ்வளவு தூரம் ரசித்து அதை உள்வாங்கி வரிகளில் வடித்து காட்டியிருக்கிறீர்கள்... மிக அழகாக வந்திருக்கிறது உங்களுடைய ஈடுபாட்டையும் மாசற்ற அன்பையும் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு நோய்நொடியின்றி வாழ வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேனம்மா...

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF