Thursday, November 20, 1986

திரு.ந. இரவீந்திரன் திருமதி.சத்தியமலர் இணையர்களின் திருமண வாழ்த்துப் பாடல்.

திரு.ந. இரவீந்திரன் திருமதி.சத்தியமலர் இணையர்களின்  திருமண நிச்சயதார்த்தத்தில் சபையோர் சார்பாக நிச்சாமம் தலைமை தோழர் தர்மலிங்கம் கைச்சாத்திட்ட போது (19-11-1986) .


யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986) பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தை – அவர் பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன் அநியாயம் கண்டு குமுறும் தம்பி அன்பிற்கோர் மாமா மாமி ஆசைக்கோர் அங்கிள் அன்ரி அறிவு சொல்லும் தோழர் ஆதரிக்கும் சுற்றம் இவர்கட்கு அருமை பெருமையாக பிறந்தாய் அன்பு பாசத்துடன் வளர்ந்தாய் கருணை இரக்கம் உந்தன் பழக்கம் கலக்கம் தயக்கம் இல்லை அது உன் வழக்கம் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன் வாழ்வு தனில் உந்தன் துணைவன் வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும் அவர்களுள் நாமறிந்த இருவர் மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா) அவர்கள் போல் நீயும் வாழ்வில் வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்.மீரான் மாஸ்ட்ர்


திரு.ந.இரவீந்திரன் திருமதி.சத்தியமலர் இணையர்களின்  திருமணநாளை முன்னிட்டு (19-11-1986)அவர்களின் வாழ்வின் உறுதுணையாகவும், அக்கறையில் குடைபோலவும் வாழ்ந்த வாழ்கின்ற சகல அன்புள்ளங்களுக்கும் இப்பாடல் வரிகளால் நன்றிகலந்த அன்பைக் கூறுகின்றோம்.

வாழ்த்துப் பாடல்.

-----------

சமுதாய விழிப்புணர்வும் சமூகத்தில் அக்கறையும்

குமுகாயக் கோட்பாடும் கொண்டிருந்த குடும்பத்து

வழிவழி வந்தவர்கள் ரவியும் வவியுமென்பர்.

விழியோடு பார்வை எவ்வளவு நெருக்கமோ

அப்படி அவர்கள் வாழ்ந்த காலத்தில்....

எப்படியோ யுத்தம் எழுந்து தாக்கியதால்...

தமிழ்நாடு சென்று தங்கள் குழந்தைகளின்

அமிழ்தான எதிர்காலம் அவலம் அடையாமல்

நெருப்பாற்று வெள்ளத்துள் எதிர்நீச்சல் போட்டதுபோல்

வருங்காலம் கல்வியுடன் வளமாகத் திகழவென

வருத்தும் நோய்நொடிகள் சத்திர சிகிச்சையெனப்

பொருளாதாரப் பாதிப்புப் பொசுக்கி வருத்தினாலும்

பற்பல சோதனைக்குப் பலமாய் முகங்கொடுத்து

நிற்பதற்குத் தைரியம் நம்பிக்கை என்றவொரு

ஆணிவேரில் நின்றது அவர்களத் விடாமுயற்சி

ஏணியிலே ஏறுதற்கு ஏறுபவர் தைரியமும்

கைகொடுத்துத் தூக்கிவிட்ட கனிந்த உறவுகளும்

ஐயமின்றி எப்போதும் அவர்கள் உயர்வினிலே

ஒத்துழைத்த அத்தனை ஒப்பில்லா மானிடத்தை

சத்தியமாய் நீடூழி வாழ்வீரென வாழ்த்துகிறோம்.



My daughter's Marriage was conducted by Poet Dr.E.Murugaiyan on 19 November 1986 in Sathiamanai Jaffna Sri Lanka




நடேசன். இரவீந்திரன் சுப்பிரமணியம். சத்தியமலர்



திருமண வாழ்த்து----------- 19-11-1986.



நடேசனார் பயந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும்கடமையில் மட்டும் அன்றி கல்வியில்..அறிவில்...ஆய்வில்..திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும்.



* * * *



சுப்பிர மணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச்சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம்ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குகஇப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க.

* * * *

இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும்.



* * * *



புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம்பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம்அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம்.



* * * *



எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும்வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம்உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க்!



அன்புடன்சபையோர் சார்பாக.. இ- முருகையன்.நீர்வேலி, 19-11-1986.




No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF