Friday, July 23, 2010

இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

 இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!


கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

Saturday, July 17, 2010

» மரண அறிவித்தல்: அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்(J.P)

» மரண அறிவித்தல்

பெயர்: அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்





அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்(J.P)
(முன்னாள் உத்தியோகத்தர், விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்)
கொல்லங்கலட்டி, கிளானையைப் பிறப்பிடமாகவும் தற்போது நவாலி வடக்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அ.இலங்கைநாயகம் நேற்று (16.07.2010) வெள்ளிக்கிழமை  அதிகாலை காலமானார்.
அன்னார் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அம்பலப்பிள்ளை  தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும் சடச்சப்பை, கொல் லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலங்கை யைப்பிள்ளை  அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் கமலாம்பாளின் (பாப்பா) அன்புக்கணவரும் இலங்காதிலகம், சுதாகினி, சுதாகரன் (லண்டன்), சுகந்தா(ஜேர்மனி), சுதர்சினி (ஜேர்மனி)  ஆகியோரின் அன் புத் தந்தையும் சோதிலிங்கம், சுரேஸ்வரன், சசிகலா (லண்டன்) அருள்(ஜேர்மனி), சக்திவர தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் சதீஷ்குமார்(லண்டன்), கஜனி (இலங்கை மின்சார சபை, யாழ்ப்பாணம்), சுபாணி, ரவிநாத், கஜந்தா, நீரஜா, ஜனுஜன் (லண்டன்), அபி லாஷ், ஜசிகா (ஜேர்மனி), ஆரணி, அபர்ணா, அமித்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் அமரர்களான தங்கமணி, நடராசா, மனோன்மணி, சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் அமரர்களான சிவசுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, சபாரத் தினம் மற்றும் வள்ளியம்மை(சிங்கப்பூர்), அமரர் சின்னத்தம்பு மற்றும் கைலாயபிள்ளை காமாட்சி (பிரான்ஸ்), நாகலிங்கம் இராசம்மா ஆகியோரின்  அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.



தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்.
மருமகன் : கா.சோதிலிங்கம்
மகன் : இ.சுதாகரன்(லண்டன்)
00442085545463
நவாலி வடக்கு, மானிப்பாய்.
021 3002132, 021 4922312.
(100687)

Friday, July 16, 2010

கிளானை, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது நவாலியில் வசித்தவருமாகிய அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம் இன்று (16.07.2010) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.


கிளானை, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது நவாலியில் வசித்தவருமாகிய 
அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம்
இன்று (16.07.2010) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.


திதி வெண்பா
  ---------------------------------
வருடம் விகிர்தி வனப்பான நல் ஆனி
அருளான வளர்பிறைச் சதுர்த்தியிலே----பெருமையுறு
இலங்கை நாயகத்தார் இவ்வுலகை நீத்தார்
நலங்காணும் நல்லுலகம் நயந்து.
                                  


-----------------------------------------------------------------------------------------------------------
ஆழிசூழ் இலங்கை மண்ணில்...........
வாழுகின்ற தமிழர் வாழ்வில்...........
இலங்கை நாயகம் என்றபெயர் குடும்பத்தில்
துலங்கும் பிரகாசமாய் விளங்குவது சிலருக்கே!

சமாதான உணர்வுள்ள ஆயிரத்தில் ஒருவருக்கே
சமாதான நீதவான் பதவி கிடைக்கிறது
தகுதியாய் அமைந்தது அவரவர் சேவையின்
மிகுதியாய்க் கிடைக்கிறது பதவியில் வகித்தது!

எந்தவிதச் சச்சரவும் இல்லாது வாழுகின்ற
அந்தநல் மனிதருக்கே அரசால் பரிந்துரைத்து
புழங்கும் நட்புணர்வின் தோழமையை மெச்சியே
வழங்கப் படுகின்ற வரமான மகுடமிது!

சின்னமகன் என்பதனால் உடன்பிறந்தார் சுற்றத்தார்
அன்பினைச் சொரிந்து அரவணைத்த செல்லக்குட்டி!
வாழ்நாளில் விவேகானந்த அச்சகத்தின் வளர்ச்சியில்
வாழ்நாட் சாதனையைச் சாதித்த வழிகாட்டி!!

நல்லமனிதர் நாடறிந்த குடும்பத்தின் பெயர்
சொல்லும் வகையில் சுட்டித்தனமாக.............
நிலைகுலையாது நெறிதவறாது............
தலைமை  வழிநடத்திய தயவான தம்பியிவர்!

அனைவரும் பாராட்டும் பாசமான மனைவிமக்கள்
சுனைநீர் போன்றதொரு சுதாகரனும் மகனாக.......
பெற்றெடுத்த பெருமையினால் பெரிதும் மனம்பூரித்த...........
பொற்தேர் போலவே பொலிந்த தலைவனிவர்!

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை  தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கம், நடராசா (பாதிரி) , மனோன்மணி,
கே ஏ.சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம்  ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

Thursday, July 15, 2010

மெல்பேர்ண் மணியின் சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........

சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........
-----------------------------------------------------------------------------------------



 மாண்போடு மாதர்களின் மனவழகைப் புரிந்துகொண்டு
 ஆண்களும் உதவவேண்டும் அரிவையர்கள் குடும்பத்தைத்
 தூண்போலத் தாங்கித் தூக்கி நிறுத்துதற்கு
 சாணேற முழம்சறுக்கும் சச்சரவுச் சூழ்நிலையில்
 பூணுகின்ற ஒழுக்கநெறி புனிதமான வில்லினிலே
 நாணேற்றிக் கூரான நல்லம்பு தொடுத்துவிட்டுத்
 பேணுகின்ற வரிசையிலே பெண்களுக்கே பங்கதிகம்
 தோணிபோற் கரைசேர்க்கும் துணிவும் வரவேண்டும்!


மண்ணில் உழலுகிற மாதருக்கு வழிகாட்ட
 திண்ணமான பற்பல திட்டங்கள் வகுக்கவேண்டும்
 எண்ணத்தில் தெளிவுகொண்ட எழுத்துருவம் பிறந்ததனால்
 உண்மையே நிலைக்குமென்ற உறுதியும் அறுதியாக
 வண்ணம்போல் இளஞ்சிறாரின் வதனத்தை மலர்விக்கும்
 பண்பாடு புகுத்திநின்றார் பரந்த இவ்வுலகினிலே
 கண்போன்ற கருத்துள்ள கவிதைகளைப் படைத்ததனால்
 “மெல்லெனப் பாயும்தண்ணீர் கல்லையும் உருகப்பாயும்!”


 மெல்பேர்ண் மணிக் கவிதை மேன்மையான கருவூலம்
 சொல்வதில் நிதானம், சொற்சுவை, பொருட்சுவையும்
 வல்லவர் தமக்குமல்ல; வரிவரியாய்ப் படிப்பவர்க்கும்
 வெல்லும்வகை, வாழ்க்கைநெறி, வேண்டாத இருளகற்றி
 துல்லியமாய்க் காட்டுகின்ற தூயபளிங் கினைப்போல்.....
 தொல்லைப்படும் மனதில் துயரமே இல்லாத
 வல்லமை நிறைந்த வைரமான நெறிகொண்ட
 நல்லவற்றைக் கூறிநிற்கும் நற்சந்தக் கவிதையிது!


   இன்னும் எழுதவேண்டும் ஈரமனம் தெரியவேண்டும்
   நன்நெறிகள் காட்டும் நயவுரைகள் சொல்லவேண்டும்
   தன்னாலியன்ற மட்டும் தரணிக்கு வழிகாட்டும்
   அன்னமிட்ட கைகளுக்கு அம்பல வாணர்துணை
  அகணிமுதல் பேராசான் தாசனையும் பெற்றெடுத்த
  சொன்னசொற் தவறாத சொற்கொடிநம் கவிதைமணி...........
  பண்பாடு காக்கப் பாரம்பரியம் பேணிப்பல
  வெண்பாக்கள் யாத்து வெளியீடு கண்டாரிவர்!

  நல்லைநகர் தந்த நாவலனார் தொண்டினைப்போல்
  சொல்லவல்ல அறிஞர்களின் சுவட்டினை ஒட்டியிவர்
  எல்லையற்ற கவித்திறத்தால் எடுத்தியம்பும் உண்மைகள்
  அல்லல்கள் யாவும் அகற்றிவிடும் பாங்கினாலே...........
  இல்லையிதற் கீடாக எந்தப் பெண்மணியும்
  சொல்லிவைக்க வில்லையென்று சுடரொளியாத் தெரிகிறதே!
  வல்லவராய்க் கவிதைகளை வடித்து அச்சேற்றி.....
  சல்லடைக் கண்கள்போல் சலித்தெடுத்த சந்தமிது!



  சூழ்ந்துவரும் சுற்றாடல் சுத்தமாய் இருப்பதுபோல்
  வாழ்க்கையில் செழுமையும் வற்றாத நிம்மதியும்
  ஆழ்ந்து நோக்கிடில் அவரவர் இல்லறத்தில்
  பாழ்போகாப் பயிரான பண்பாட்டு நெறிகளும்
  தாழ்வில்லா உயர்வொன்றைத் தந்திடும் என்பதனால்
  காழ்ப்புணர்ச்சி இல்லாத கருமமே கண்ணான
  வாழ்வினில் சமுதாய முன்னேற்ற முயற்சிகளை
  ஏழ்பிறப்பும் ஏற்கும் எதிர்கால வெளிச்சமிது!

  தங்கத் தாத்தா நவாலியூர்ச் சோமசுந் தரனாரின்
  மங்காத கவிதைகள் ஆடிப்பிறப்பு, ஆடுகதறியது...........
  எங்கள் பண்டிதமணி மட்டுவில் கணபதிப்பிள்ளை....
  அங்கம் வகித்து அருந்தமிழை வளர்த்தோர்பலர்.........
  இளமுருகன்,துரைசிங்கம்,இராசையா,வேலனுடன் வேந்தனாரும்
  களமிறங்கிக் கவிபடைத்த புதுவைக் கவிஞன்வரை-----வாழ்வை
  வளப்படுத்தும் தாய்க்குலத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை
  உளம்திறந்து வாழ்த்துவமே சந்தக்கவி விதைத்தவரை!

வள்ளியம்மை சுப்பிரமணியம் 
சத்தியமனை    சிங்கப்பூர் 15 -07 -2010

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF