Friday, July 16, 2010

கிளானை, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது நவாலியில் வசித்தவருமாகிய அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம் இன்று (16.07.2010) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.


கிளானை, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது நவாலியில் வசித்தவருமாகிய 
அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம்
இன்று (16.07.2010) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.


திதி வெண்பா
  ---------------------------------
வருடம் விகிர்தி வனப்பான நல் ஆனி
அருளான வளர்பிறைச் சதுர்த்தியிலே----பெருமையுறு
இலங்கை நாயகத்தார் இவ்வுலகை நீத்தார்
நலங்காணும் நல்லுலகம் நயந்து.
                                  


-----------------------------------------------------------------------------------------------------------
ஆழிசூழ் இலங்கை மண்ணில்...........
வாழுகின்ற தமிழர் வாழ்வில்...........
இலங்கை நாயகம் என்றபெயர் குடும்பத்தில்
துலங்கும் பிரகாசமாய் விளங்குவது சிலருக்கே!

சமாதான உணர்வுள்ள ஆயிரத்தில் ஒருவருக்கே
சமாதான நீதவான் பதவி கிடைக்கிறது
தகுதியாய் அமைந்தது அவரவர் சேவையின்
மிகுதியாய்க் கிடைக்கிறது பதவியில் வகித்தது!

எந்தவிதச் சச்சரவும் இல்லாது வாழுகின்ற
அந்தநல் மனிதருக்கே அரசால் பரிந்துரைத்து
புழங்கும் நட்புணர்வின் தோழமையை மெச்சியே
வழங்கப் படுகின்ற வரமான மகுடமிது!

சின்னமகன் என்பதனால் உடன்பிறந்தார் சுற்றத்தார்
அன்பினைச் சொரிந்து அரவணைத்த செல்லக்குட்டி!
வாழ்நாளில் விவேகானந்த அச்சகத்தின் வளர்ச்சியில்
வாழ்நாட் சாதனையைச் சாதித்த வழிகாட்டி!!

நல்லமனிதர் நாடறிந்த குடும்பத்தின் பெயர்
சொல்லும் வகையில் சுட்டித்தனமாக.............
நிலைகுலையாது நெறிதவறாது............
தலைமை  வழிநடத்திய தயவான தம்பியிவர்!

அனைவரும் பாராட்டும் பாசமான மனைவிமக்கள்
சுனைநீர் போன்றதொரு சுதாகரனும் மகனாக.......
பெற்றெடுத்த பெருமையினால் பெரிதும் மனம்பூரித்த...........
பொற்தேர் போலவே பொலிந்த தலைவனிவர்!

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை  தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கம், நடராசா (பாதிரி) , மனோன்மணி,
கே ஏ.சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம்  ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

2 comments:

  1. சித்தப்பா வீட்டினிலே சிறந்த விருந்தோம்பல்
    மெத்தவும் ஒருவருடம் இன்னும் முடியவில்லை.............
    புத்தகம்போல் எல்லோர்க்கும் புத்தொளியாய் விளங்கிநின்ற
    அத்தகைய சிறப்புள்ள அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்!

    மண்ணின் வடபுலத்துத் தெல்லிப்பழை உதித்து.........
    எண்ணியதை முடிக்கும் திண்ணிய நெஞ்சினராய்.........
    எத்தனையோ நாடுகள் சென்று திரும்பிவந்து....
    சுத்தமான தோழரான நவாலிநகர் நாயகமே!

    சு-சத்தியகீர்த்தி.

    ReplyDelete
  2. From http://www.uthayan.com

    » மரண அறிவித்தல்
    பெயர்: அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்
    இடம்: நவாலி வடக்கு, மானிப்பாய்.
    Receipt No: 100586
    பிரசுரிக்கப்பட்ட திகதி : 2010-07-17

    அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்(J.P)
    (முன்னாள் உத்தியோகத்தர், விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்)
    கொல்லங்கலட்டி, கிளானையைப் பிறப்பிடமாகவும் தற்போது நவாலி வடக்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அ.இலங்கைநாயகம் நேற்று (16.07.2010) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.
    அன்னார் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அம்பலப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும் சடச்சப்பை, கொல் லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலங்கை யைப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் கமலாம்பாளின் (பாப்பா) அன்புக்கணவரும் இலங்காதிலகம், சுதாகினி, சுதாகரன் (லண்டன்), சுகந்தா(ஜேர்மனி), சுதர்சினி (ஜேர்மனி) ஆகியோரின் அன் புத் தந்தையும் சோதிலிங்கம், சுரேஸ்வரன், சசிகலா (லண்டன்) அருள்(ஜேர்மனி), சக்திவர தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் சதீஷ்குமார்(லண்டன்), கஜனி (இலங்கை மின்சார சபை, யாழ்ப்பாணம்), சுபாணி, ரவிநாத், கஜந்தா, நீரஜா, ஜனுஜன் (லண்டன்), அபி லாஷ், ஜசிகா (ஜேர்மனி), ஆரணி, அபர்ணா, அமித்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் அமரர்களான தங்கமணி, நடராசா, மனோன்மணி, சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் அமரர்களான சிவசுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, சபாரத் தினம் மற்றும் வள்ளியம்மை(சிங்கப்பூர்), அமரர் சின்னத்தம்பு மற்றும் கைலாயபிள்ளை காமாட்சி (பிரான்ஸ்), நாகலிங்கம் இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
    அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

    தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்.
    மருமகன் : கா.சோதிலிங்கம்
    மகன் : இ.சுதாகரன்(லண்டன்)
    00442085545463
    நவாலி வடக்கு, மானிப்பாய்.
    021 3002132, 021 4922312.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF