Tuesday, November 30, 2010

பண்டத்தெருப்பு சாந்தைத் தலைவர் தோழர் பொ. துரைராசா (பாவைக்கிளி)







பண்டத்தெருப்பு சாந்தைத் தலைவர் தோழர் பொ. துரைராசா
18-05-1946 (பாவைக்கிளி) 30-11-2010

யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1970களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
பண்டத்தெருப்பு சாந்தைத் தோழர் வை. இராசையாவின் "பேப்பர் மாமா" கே. ஏ. சுப்பிரமணியம் பாடல்
















 

Saturday, November 27, 2010

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…!!!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…!!!



தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.

பொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார்

இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர்  புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட தொழிளார்களின் உரிமைப் பிரகடணத்தை  செய்யவில்லை எனவும் அதேபோல மேற்குலக முதலாளித்துவத்திற்கு எதிரான போக்குகளைக் கொண்டிருப்பதாக கூறினாலும் அதில் எவ்வித நேர்மையும் இல்லை  எனவும் குறிப்பிட்டார்

புலியின் முக்கிய உறுப்பினர்களை விடுதலை செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இந்த அரசாங்கம் அவசரகாலசட்டம் பயங்கரவாதசட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகள் குறிப்பாக ஜம்பதுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தொடர்பாக  எந்தவித சட்ட நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டிய அவர் அவர்களுக்காக தமது கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.வேட்டியைக் கட்டிக் கொண்டு திருநீறை பூசிக்கொண்டு செல்வது அல்ல எனவும் மாற்றுக் கருத்துடைவர்களுடைய கருத்தினை அங்கீகரித்து சமூகங்களுக்கிடையே நட்பு உறவை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் தற்போது மிகமோசமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார அழிவினை நிறுத்த முடியும் எனவும். சி.கா செந்திவேல்; குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைகுழுவானது  ஒரு மாயையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது எனவும் அதேபோன்றே ஜ.நாவினால் உருவாக்கப்பட்ட விசாராணை குழுவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கலாமே தவிர வேறு ஏதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இன்று சீன அரசாங்கம் உண்மையான சோசலிச நெறிமுறைகளைப் பின் பற்றவில்லை என்பதை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன எனவும் சீனாவில் தீடீர் என ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அது உலகச்சந்தையை நோக்கி சென்றமையே அடிப்படைக்காரணம் என்றும் அதே போன்றே இந்தியாவில் உள்ள மாக்சிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரளுமன்ற அரசியல் நோக்கி தங்களின்  நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும் இவை பாட்டளி மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை இரண்டரை மணியத்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொது செயலாளார் சி.கா செந்திவேல் மற்றும் ரிபிசி அரசியல் ஆய்வாளர்களான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜெகநாதன் பணிப்பாளர் வீ.இராமராஜ் மற்றும் தோழர் ஜெயபாலனுடன் பல நேயர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி : அலெக்ஸ் இரவி
பிற்குறிப்பு
கடந்த கால தவறுகளை மறந்து தமிழ் தலைமைகள் இணைந்து கொள்ள சந்தற்பம் வாய்த்துள்ளது, "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது போல ஒற்றுமையே பலம் என உரத்துக் குரல் கொடுக்கும் நேரம் இப்போதாவது கனிந்துள்ளதே! -வள்ளியம்மை சுப்பிரமணியம்

Friday, November 26, 2010

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை


கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

K.A.Subramaniam's 21th Anniversary Memorial Lecture will be held at 5pm 
on Sunday 28 November 2010
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளை நினைவு கூர்ந்து........27 கார்த்திகை 2010


  மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் 
போராளிகளை  நினைவு கூர்ந்து........
"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!"  

வள்ளியம்மை சுப்பிரமணியம் http://sathiamanai.blogspot.com/


Wednesday, November 10, 2010

மணல் வீடு - வள்ளியம்மை சுப்பிரமணியம்



மணல் வீடு
--------------------
 
சீமான்கள் வாழ்வைச் சிந்தையிலே நிறுத்தி
தாமுமவர் போலத் தகுதியெனக் காட்ட...
 
கடன்பற்று அட்டை கைகொடுக்கும் என்று...
உடன்செலவு , உதவாத ஊதாரித் தனத்தினால்.....
 
அத்திவாரம் பலமான ஆணித்தரக் கட்டிடத்தை
மொத்தமாகச் சுனாமி, சூறாவளி தாக்குமெனில்....
 
உழைப்பற்ற பொருளாதார ஊசலாடும் மனிதனுக்கு
மழைநீர் பொழிந்தபின் மணல்வீடு நிலைதான்!.
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF