சிட்னியில் கனக-சிறீதரன்*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நீருடன் பால்கலந்தால் பிரித்தருந்தும் அன்னம்போல்
வேருடன் விழுதுகளையும் தேடலால் அறிந்துகொண்டு
பாரெலாம் வாழ்ந்திருந்த பண்பட்ட அறிஞர்வாழ்வை
சீருடன் எடுத்துக்கூறும் சிந்தனைத் திறனாளன்!
சிட்னிவாழ் கனக-சிறீதரன் சண்டிருப்பாய் மண்வித்து
தொட்டது துலங்கிடத் தோப்பாகிக் கிளைபரப்பிப்
பட்டறிவும் பகுத்தறிவும் ஆராய்வும் சேர்ந்ததனால்......
தொட்டனைத் தூறுகின்ற மணற்கேணி இவனன்றோ!
நல்லை நகர் ஆறுமுக நாவலர் தொடக்கம்
சொல்லரிய மேதைகளின் சமுதாய அக்கறையை
வல்லமையாய் இவனெழுத வளர்ந்துவரும் இளைஞர்கள்
எல்லாவித விபரங்கள் இலகுவாய்ப் பெற்றுய்வர்!
வள்ளியம்மை சுப்பிரமணியம்.
*சிறீதரன் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். தற்பொழுது புலம் பெயர்ந்து சிட்னியில் பணியாற்றுகிறார். மாஸ்கோ லுமும்பா, மற்றும் வட அயர்லாந்து குயின்சு பல்கலைக்கழகங்களில் ஒளி மின்னணுவியலில் முதுமாணிப் பட்டம் பெற்று மட்டக்களப்பு, யாழ், கொழும்பு, மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 சனவரி முதல் பங்களித்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் 2000 இற்கும் அதிகமான கட்டுரைகளை ஆரம்பித்து எழுதியிருக்கிறார். 365 நாட்களுக்கும் நாட்கள் வாரியாக வரலாறுகளை இற்றைப் படுத்தியமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் விக்கிசெய்திகளில் தொடர்பங்களிப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்