"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Saturday, September 25, 2021

Centenary Celebration of Victoria College Former Principal and the Leader of the Mass Movement for Human Rights Mr. V. Rajasundaram Master



சுழிபுரம்,யாழ்/விக்ரோறியா கல்லூரியின் முன்னாள் அதிபர் 
திரு.வைத்திலிங்கம் - இராஜசுந்தரம் 
அவர்களின் நூறாவது பிறந்த தினம்.
23.09.1921 - 23.09.2021
********
இந்த முகநூலுற்குள்  புகுந்து
கனத்துப் போகின்ற காற்றே….,
திசைகளுக்கெல்லாம்  - இந்த
செய்தியைச் சொல்
“இன்று எங்கள் அதிபர் 
இராஜ சுந்தரத்தாருக்கு
நூறாவது பிறந்தநாள் “என்று,

இன்று எங்கள் கண்ணீர்த் துளிகள்
ஒரு புன்னகையை 
நினைக்கின்றன - இல்லை 
நனைக்கின்றன;

என் அயல் வீடுதான்
உம்மை நன்கறிவேன் நான்
1982 ல் இராணுவத்திடம் 
இருந்து என்னைக் காத்தவரன்றோ,
நீர் இல்லை என்றால்
வெலிக்கடையில் வெந்து
சாம்பலாயிருப்பேன்,
நன்றி இன்னும் மறக்கவில்லை;

விக்டோரியாக் கல்லூரி
நூற்றாண்டு விழாவில்
நீர் நடத்திய கேளிக்கைகள்-இன்றும்
நினைவிருக்கிறது
அவை வெறும்
பொழுது போக்கல்ல
எம் பழுது போக்கவும் தான்,

உங்கள் காலம் - எம் 
பாடசாலை வரலாற்றில்
வசந்தகாலம்,

பட்டம் பதவிகள் வந்த போதும்
கிட்டும் பதவிகள் கிடைத்தபோதும்
பண்பை மறவாத அன்பாளன் நீர்,
அதிகாரம் வந்த போதும்
அகங்காரம் கொண்டதில்லை
ஆற்றாத தொண்டுமில்லை;

பிணியாக நம் நாட்டைப்
பிடித்த இன அரசியலால் 
கண் முன்னே அக்கிரமம்
நடப்பதைக் கண்டுவிட்டு - நீர்
கண் மூடி சென்றதில்லை,
அக்கணத்தில் உம் சீற்றம்
அறச் சீற்றம் - அது 
பேரறத்தின் நீதியன்றோ;

கல்லால் அடித்தவர்க்கும்
கனி உதிர்க்கும் கனி மரம் நீர்,
பசியோடு வந்தவர்க்கும்
பழம் தின்ன தருகினற 
கனிவு மரம் நீர்,

எனக்கொன்று புரியவில்லை
“தமிழ் மகன் ஒருவனை
இராணுவம் பிடித்துச் செல்ல,
அவன் பெற்றோர் உம்மிடம்
வந்து அழுது நிற்க,
நீர் மகனை மீட்டுக் கொடுக்கிறீர்,
அந்த மகன் சார்ந்த போராளிகள்
உம்மை அழிக்கின்றனர்………..,”
இது மகா கொடூரம் அல்லவா?

நம் விடுதலைப் போரே
விசித்திரமானது,
மண்ணை நேசிப்பதாய்ச் சொல்லி
நல் மனிதர்களையே 
அழித்து விட்டது;

ம்..ம்……ம்………
தந்திரங்கள் அறிந்திடாத - இராஜ 
சுந்தரனாரே……
சூறைக் காற்றில் 
சுடர்கள்தான் அணையும்,
வானத்துச் சூரியன் 
அணைவதுண்டோ?!!!
——————————இளங்கோ

*வலி மேற்கு சங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுச் சமாசத்தின்

பொங்கும் தலைவராகப் புகழுடன் சேவைசெய்தார்.

 

*மூளாய்க் கூட்டுறவு வைத்திய சாலைதனில்

மூளையாகச் செயற்பட்டு முன்னுக்குக் கொண்டுவந்தார்.

 

*சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வரலாற்றில்

அழியாத பற்பல செயற்த்திட்டங்களைத்  தோற்றுவித்தார்.


* இராணுவசிறைமுகாம்களில் வதங்கிய இளைஞர்களை எல்லாம் தன் வல்லமையினால் விடுதலை வாங்கிக்கொடு்த்த சீலர். 

 

Centenary Celebration of Victoria College Former Principal and the Leader of the Mass Movement for Human Rights Mr. V. Rajasundaram Master 

Time: Sep 25, 2021 09:00 PM Singapore












அமரர்.வை. இராச சுந்தரம் மாஸ்டர் ..... நூறாவது பிறந்த ஆண்டு.

***************************************************************

இற்றைக்கு நூறாண்டு முன்னம் ஒருநாள்

இந்நாட்டின் குறைபாடுத் தன்மை நீங்கவே....

புத்தம் புதுஉருவில் சேவை செய்யவே.....

போந்ததென இராச சுந்தர சிறுவன் பிறந்தார்.....


வைத்திலிங்கம் குடும்பத்தின் வாரிசு இவரென...

வந்துதித்த சிறுவன் வளர்ந்து படித்தார்....

மத்திய கல்லூரி வேலணையின் பின்னர்....

பக்தியாய் சுழிபுர விக்ரோறியா கல்லூரியிலும்......


ஆசிரியராய் அதிபராய் அல்லும் பகலும்.....

நேசிக்கும் சேவைசெய்ய மூளாய் கூட்டுறவு.....

வைத்திய சாலையிலும் தலைமை ஏற்று....

ஐக்கியத்தைக் கட்டிக் காத்து தொண்டுகள் செய்தார்......


வலி.மேற்கு சங்கானை கூட்டுறவுச் சமாசத்தின்...

வலிசுமந்த தலைவரய் எதிர்ப்புக்கள் மத்தியிலே....

துணிச்சல் கொண்ட செயல்வீரனாய் பல ஆண்டு....

பணிகள் பலசெய்து மக்கள்நலன் காத்தார்......


இராணுவ முகாம்களிலே சிறைஇருந்த இளைஞர்களை...

இரவுபகல்  போய்ப்பார்த்து....அவர்களின் விடுதலைக்காய்...

இடையறாது பாடுபட்டு பல அன்னையரின் கண்ணீரைத்.....

துடைத்தீரையா உங்கள்நலன் பேணாமல்......


அரிய பெரிய சேவைகள் செய்து நீவீர்.....

பரிபூரணத்தின் வாழ்க்கைத் துணைவனாய்...

தேவா, சேந்தன், நிருத்தன், பரனென நால்வரின்.....

காக்கும் தெய்வத் தந்தையாய் வாழ்ந்தீர்.....


அன்றில் பறவைகளாய் வாழ்ந்த குடும்பத்தை...

நன்றியுள்ள மக்கள் மறந்திட மாட்டார்கள்.....

உள்ளம் வெம்பி அழுகின்றார் ...உங்கள் பிறப்புத்தான்....

எங்களுக்கொரு விழிப்புணர்வு ஏற்றத்தைத் தந்ததையா.....!


நன்றியுடன்.....

வள்ளியம்மை சுப்பிரமணியம்

       “ சத்தியமனை “

        சுளிபுரம்.


Chulipuram Mr V. Rajasundaram Master அனைவரினதும் மதிப்பிற்குரிய சுழிபுரம் இராஜசுந்தரம் மாஸ்டர்



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்