Thursday, April 14, 2022

புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஏழாவது மாநாடு -வாழ்த்துச் செய்தி

 

Congratulatory message from Valliammai Subramaniam . 


எதிர்வரும் 15-16-17ம் திகதிகளில் மாத்தளையில் நடைபெறவுள்ள
  புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஏழாவது மாநாடு -வாழ்த்துச் செய்தி



இலங்கையில் இடது சாரியப் பார்வையுடன் , மக்கள் அமைப்புகள் தாெடங்கிய காலத்திலிருந்து , ஐக்கியமும் போராட்டமுமாக  தோழர்களுடன் இணைந்து , புதிய எண்ணகரு, புதிய அணுகுமுறையுடன் மக்கள் யதார்த்த நலனை முன்னிறுத்தி முதன் முதலாக 1978 ஆம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் எமது கட்சி  நிறுவப்பட்டது.  இதன் நிறுவகப்  பொதுச் செயலாளராக தோழர்  கே. ஏ. சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடமாகாணத்தில் மாத்திரமன்றி , இலங்கையின் பல பகுதிகளிலும்  பழைய தோழமைத் தொடர்புகள் விட்டுப் போகாவண்ணம் ஒன்றிணைத்து , பல புதிய தாேழர்களின் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் , புதிய மார்க்கத்தில்  மக்கள் இலக்கியமும் இணைந்ததாக  இக்கட்சி வளர்ந்தது.  தாேழர் மணியம் அவர்களின் மறைவின் பின்னர், தோழர்  சி.கா.செந்திவேல் அவர்கள்  இதன் பாெதுச்செயலாளராகத் 1989 ஆண்டு கட்சி மிகவும் சிரமத்தில் இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டார். பல நெருக்கடிகள் மத்தியிலும் மனம் தளராது மாக்ஸிஸ லெனினிசக்  கொள்கை மீது உறுதியான நம்பிக்கையுடன் போராட்டப் பாதையில்  தன்னையும் பிற நல்ல சக்திகளையும் முன்னோக்கி நடத்தி புரட்சிகர இயக்கத்தை வழி நடத்துவதில் அவர் ஆற்றிய பணியும் , அவரும் எம்   தோழர்களும் கண்ட சாதனைகளும் பெரியன .  இன்று இது அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது. இன்று எம் நாடு ஆட்சியாளர்களதும் , மேலாதிக்க நாடுகளின் தந்திரங்களாலும்  பொருளாதார சீர்குலைவை எதிர்நோக்கியுள்ளது. அனைத்துப் பொருட்களின் அதி விலையுயர்வும், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடும் மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.  நெருக்கடி மிகுந்த இச்சூழலில் ஒன்றுபடுத்தக்கூடிய சகல சக்திகளிடமும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் கட்சி தன்னையும் தேசபக்த முற்போக்கு சக்திகளையும் பலப்படுத்தி கொண்டு  தொடர்ந்து செயற்பட நடைபெறும் மாநாடு சிறப்புறவும், அதன் தீர்மானங்களை புரிந்துணர்வுடன்  செயற்படுத்த புதிய தோழர்களின்  தலைமையை   ஏற்று நடப்போம்!

 மக்களின் அடிப்டை உரிமைக்கான வாழ்வாதாரதை, சகலரும் ஏற்றத் தாழ்வுகள் கடந்து  பெறவேண்டும் என்ற உணர்வுடன் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக  போராடும் , செயற்படும் எம் கட்சிக்கும், எம்  தாேழர்களுக்கும் , இந்தத் தாயின் புரட்சிகர வாழ்த்துக்கள்!


திருமதி வள்ளியம்மை  சுப்பிரமணியம்
"சத்தியனை"
சுளிபுரம்.
சிறிலங்கா.

+94750555333

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF