Saturday, March 26, 2022

Introduction to the book of poetry by Prof. S. Sivasegaram பேராசிரியர் சி.சிவசேகரம் கவிதைகள் நூல் அறிமுகம்

 



தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தக அரங்கப் பெருவிழாவின் முதல் நிகழ்வு - பேராசிரியர் சி.சிவசேகரம் கவிதைகள் நூல் அறிமுகம்

















சத்யதேவன் சற்குணம்

சத்யதேவன், சற்குணம் (1984.01.20 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சற்குணம்; தாய் தங்கேஸ்வரி. இவர் தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் மாணவராவார். தற்போது இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்ற இவர் வரலாறு, தமிழ் சமூக வரலாறு, மானிடவியல், தமிழிலக்கிய வரலாறு, சமூகவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர்.

இவர் எஸ்.சத்யதேவன், சத்யன், ச.சத்தியதேவன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரை, ஆய்வு, பத்தி, விமர்சனம் ஆகிய துறைகளில் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மலைமுரசு முதலிய பத்திரிகைகளிலும் ஞானம், நீங்களும் எழுதலாம், கலை ஓசை, புதிய சொல் ஆகிய இதழ்களிலும் நீள்கரை ஆகிய இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். சுன்னாகம் நூலக பொன்விழா மலரிலும் எழுதியுள்ளார். இவர் சனம், கலைஓசை, சமூக வெளி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அங்கத்தவராவார். தி.த. சரவனமுத்தப்பிள்ளையின் "தமிழ் பாஷை, தத்தைவிடு தூது மற்றும் ஏனைய பிரபந்தகளும்" நூலின் மீள் பதிப்பாசிரியர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினரான இவர் சமூகவெளி படிப்பு வட்டத்துடனும் இணைந்து செயற்படுகின்றார். தாயகம் (இதழ்) நிர்வாக ஆசிரியர் சத்தியதேவன் ஆவார்.



வரலாறு பற்றி ....
(தோழர் மணியம் நினைவாக )

வரலாற்றிற் பேர்பொறிக்க 
வலியபெரும் படை நடத்தி 
வாளெடுத்த பேர்கள் பலர் 
வாள்பொறித்த பேர்களையே 
வாள் சிதைத்த வரலாறு 
பேர் மாற்றிப் பேர் மறந்து 
பேர் மறைக்கும் வரலாறு 
வென்றவர்கள் எழுதுகிற 
பொய் கலந்த கதை நிறைந்த 
ஏடுகளா வரலாறு? 
களிமண்ணா கல்வெட்டா 
காகிதமா வரலாறு ? 
முதல் நெருப்பை மூட்டியவர் 
சக்கரத்தைக் கைத்தறியைக் 
கல்லுளியைக் காகிதத்தைப் 
பூச்சியத்தைக் கண்டறிந்தோர் 
பேசுகிற மொழி வகுத்தோர்
பேரறியா வரலாற்றிற் 
சொல்திரிந்து செயல் மறந்து 
பேரழிந்து போனாலும் 
வாழுமொரு வரலாறு 
மானுடத்தின் மேம்பாடு 
மானுடரின் அருஞ் செயல்கள் 
ஆக்கிவைத்த வரலாறு, 
எழுதாமல் நிலைபெற்று 
வாழுகிற வரலாறு
 - - பேராசிரியர் சி.சிவசேகரம்
Thanks Noolaham புதிய பூமி 1990.04 for more information please read  Unity and Struggle - By Professor S. Sivaseharam in memory of K.A. Subramaniam in 1991 ஐக்கியமும் போராட்டமும் (தோழர்.கே.ஏ.சுப்பிரமணியம் நினைவுகள்) - பேராசிரியர் சி.சிவசேகரம் (1991 ) 






SSA Talks: Dr. S. Sivasegaram [1/3]


SSA Talks: Dr. S. Sivasegaram [2/3]


SSA Talks: Dr. S. Sivasegaram [3/3]




No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF