Tuesday, July 21, 2009

Tribute to Poet E. Murugaiyan மூத்த கவிஞன் முருகையன் 19 கார்த்திகை 1986 காணொளி

மூத்த கவிஞன் முருகையன்.


-------------------
முருகையன் ஈழத்தின் முதன்மைக் கவிஞர்களுள்அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாகஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கிசரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்...வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதிபரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!

* * *

அல்லும் பகலும் தேசியகலை இலக்கியச்சொல்லும் செயலும் சுடரான சிந்தனையும்வல்லவராம் இருமொழியில் தாய்மொழிக்குத் தனியிடமாம்எல்லையில்லாத கவிதைகள் ஆயிரம் ஆயிரம்நல்ல கருத்துடன் நயம்பட வடித்தகவிஅத்தனையும் மானிடத்தின் அரிய விடியலுக்குசத்தமில்லா எதிர்கால விழிப்புணர்வுச் சூரியனாய்திங்களென்ற குயிலித் திருமகளும் மங்காத்தங்கமகன் கண்ணன் மாநிலத்தில் கண்மணிகள்...முல்லைச் சிரிப்பும் முறுவலித்த முகமுமாய்..இல்லையே இவனென்று நினைக்க முடியவில்லை!

* * *

மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல்கொடுத்துஇறுதிமூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களைஅறுதியாக உரைபேனென அரும்பெரும் கவிதைகளில்வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்குபோலஅடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன்.

------------------ திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம்.


மணியான ஒரு மனிதரின் மறைவு


திருகேசுப்பிரமணியம் மறைந்து விட்டார்மக்கள் பலராலும் தோழர் என உரிமை பாராட்டப்படும் மணியத்தார் ஒரு மணியான மனிதர்அவர் உயரிய இலட்சியங்களை உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தவர்வெறும் சிந்தனையாளர் அல்லர்தாம் மேற்கொண்ட கொள்கையின் பொருட்டுஅல்லும் பகலும் சோராது உழைத்தவர்சாதனையாளர்.

அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும்திசுக்கப்பட்டும் சுரண்டப் பட்டும் திண்டாடும் மக்கட் பிரிவினரின் விடிவுக்காகத் தமது சொல்லையும் செயலையும் அர்ப்பணித்த்வர்சாதியத்துக்கு எதிரான போராட்டங்களிலும் இயக்கங்களிலும் அவற்றின் அச்சாணி போல அமைந்து பயன்பட்டவர்அந்தத் தருணங்களில் அவர் காட்டிய துணிவும் ஊக்கமும் ஆற்றலும் வரலாற்று ஏடுகளிற் திவு பெற்றுவிட்ட பண்புகள்ா கும்.

மணியத்தாருடன் தனிப்பட்ட முறையிலே பழகும் வாய்ப்பு மிகவும் அண்மையிலே தான் எனக்குக் கிட்டிற்றுஆனாலும் இந்த ஐந்தாறு ஆண்டுக் காலப்பகுதியில் அவருடைய இனிய இயல்புகள் பலவற்றை தெரிந்து கொண்டேன்நிதானமான சிந்தனைத் தெளிவும்காரியங்களை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தும் திறமையும் அவரிடம் நிறைய உண்டு.

கொள்கை விளக்கங்களா பிரசுரங்களையும் நூல்களையும் வெளிக்கொணர்வதில் அதிக ஆர்வத்தை அவர் அண்மைக்காலங்களிலே காட்டி வந்தார்கருத்தரங்குகளும் ஆய்வுரைக் கூட்டங்களும் அடிக்கடி நடக்க வேண்டும் என்பதும் அவர் விருப்பமாகும்நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் வருங்கால வேலைத் திட்டங்களை பற்றிய எண்ணங்களே அவர் சிந்தனையை நிறைத்திருந்தன

இவ்வாறான ஒரு பெரியவர் நம்மை விட்டுப் பிரிந்தமை பெருந் துயர் தருவதாகும்அவரது பிரிவினால் வருந்தும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் நமது அநுதாபம் உரியது

நீர்வேலி தெற்குமுருகையன்


 

My daughter's Marriage was conducted by Poet Dr.E.Murugaiyan on 19 November 1986 in Jaffna மூத்த கவிஞன் முருகையன் 19 கார்த்திகை 1986 காணொளி

நடேசன். இரவீந்திரன் சுப்பிரமணியம். சத்தியமலர்
திருமண வாழ்த்து----------- 19-11-1986.
நடேசனார் பயந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும்கடமையில் மட்டும் அன்றி கல்வியில்..அறிவில்...ஆய்வில்..திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும்.
* * * *
சுப்பிர மணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச்சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம்ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குகஇப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க.
* * * *
இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும்.
* * * *
புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம்பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம்அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம்.
* * * *
எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும்வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம்உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க்!
அன்புடன்சபையோர் சார்பாக.. இ- முருகையன்.நீர்வேலி, 19-11-1986.
2 Video Clips each 2 minutes are available at the links below


மணியத்தார் குறிக்கோள் வீரர் - கவிஞர் இ. முருகையன் 1999 கார்த்திகையில் எழுதியது.

 

சுப்பிரமணியம் என்று சொல்லிய மாத்திரத்தே பற்பல எண்ணம் சூழ்ந்து படர்ந்திடும் தொடர்ந்து நீளும் 

துப்புரவாளர் ஒப்புரவாளர் கே..ஏ.  உன்னத லட்சியங்கள் நற்பணி இவற்றுக்காக நாள்தோறும் உழைத்து வந்தார்.

 

 அறுபத்தெட் டாண்டின் முன்னால் (1931) அழகிய ஈழமண்ணில் வடபக்கப் புலத்தில் தோன்றி  வாலிபப் பருவம் கண்டு , முறுகிய செயல் வீரத்தின் முனைப்புடன் மலர்ந்து நின்றார்.

 

உறுதியும் உணர்வும் ஓயா ஊக்கமும் பூண்டு கொண்டார்.

 

சீமெந்துத் தொழிற்கூடத்தின் பயிலுனர் ஆகச் சேர்ந்து, போய் வந்து பணிகள் ஆற்றி உழைப்பிலே திளைத்த வேளை,

 

ஆர்வங்கள் புதிசாய்த் தோன்ற அங்குள்ள தொழிற்சங்கத்தின் ஊழியம் சிறக்க வேண்டி ஒரு பெரு முயற்சி  செய்தார்.

 

உழைப்பவர் உரிமை வேட்கை ஓங்கிடுமாறு தூண்டும் தொழிற்சங்கத் துறையில் எய்தித் தொண்டராய் மாறிவிட்டார்- விழிப்பொன்றின் துவக்கம் கண்ட மேல் நிலை ஆட்கள் கூடி, குழப்பினாய் அமைதி என்று கோபித்து முரண்டினார்கள் .





Sunday, July 12, 2009

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானைத் தோழர் க. இராசையா


  

15-09-1942 தோழர் க. இராசையா 12-07-2009


யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
சங்கானைத் தோழர் க. இராசையா ...
சங்கானைக்கு என் வணக்கம் !

தோழர் இராசையாவின் மறைவுக்கு எமது செவ்வஞ்சலி
அண்மையில் சங்கானைப் பிரதேசத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான தோழர் க.இராசையா இயற்கை எய்தினார். அவர் சங்கானை கிழக்கைச் சேர்ந்தவர். தனது இளமைக் காலத்திலேயே மாக்சிச லெனினிசக் கருத்துக்களால் 1960துகளின் நடுக்கூறிலே ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் வாலிபர் இயக்கத்திலும் பின்பு கட்சியிலும் இணைந்து உறுதியான ஒரு தோழராகவும் போராளியாகவும் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியும் நிதானமும் கொண்ட தோழர் இராசையா மக்களோடும் தோழர்களோடும் மிக நெருக்கமாக நின்று கட்சிவேலைகளை முன்னெடுத்து வந்த ஒருவராக திகழ்ந்தார். அதேவேளை மக்கஞக்கும் கட்சிக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டோருடன் மிகக் கடுமையாக நடந்துகொள்வது அவரது இயல்பாகும். 


 தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்ட காலத்தில் சங்கானைப் பிரதேசத்தில் தோழர் இராசையா ஏனைய தோழர்களோடு இணைந்து நின்று ஒரு புரட்சிகரப் போராளியாகவே திகழ்ந்து வந்தார். அவர் அதிகம் பேசுபவர அல்லர். ஆனால் அவரது கருத்துக்களில் நிதானமும் தூரநோக்கும் பதிந்திருக்கும். 
தோழர் இராசையா புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் குறிப்பிட்ட காலப்பகுதி யாழ்ப்பாண வட  பிரதேச குழுவிலும் இருந்தவர்.
 தோழர் இராசையா 12-07-2009 இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்  மத்திய குழு தனது ஆழ்ந்த செவ்வஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டது. மேலும் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது துணைவியார் பிள்ளைகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டது. தோழர் இராசையாவின் பெயர் என்றும் கட்சியின் தோழர்களின் மத்தியில் நிலைத்து நிற்கும். தோழர் இராசையாவின் மறைவிற்கு  புதிய பூமி தனது புரட்சிகர அஞ்சலியையும் குடும்பந்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதிய பூமி October 2009 ஒக்ரோபர்


'சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்' 






30 நவம்பர் 1989  அன்று சத்தியமனையில் நடைபெற்ற தோழர் கே.. சுப்பிரமணியம் நினைவேந்தல் கூட்டத்தில் :  பேராசிரியர் மௌனகுரு உரையாற்றுகிறார். அவருக்கு அருகில் தோழர் சி. கா. செந்திவேல், தோழர் அழ பகீரதன், தோழர் க. இராசையா, தோழர் காபஞ்சலிங்கம், தோழர் க.ஜெயபாலசிங்கம் 

தோழர் கா. பஞ்சலிங்கம், தோழர் க. இராசையா, தோழர் அழ பகீரதன்















சங்கானைக்கு என் வணக்கம் !

 

Saturday, November 29, 2008

19th Anniversary கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு தினம் 29-11-2008

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு தினம் 29-11-2008

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF