கிளானை, கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் தற்போது நவாலியில் வசித்தவருமாகிய
அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம்
அம்பலப்பிள்ளை இலங்கை நாயகம்
இன்று (16.07.2010) வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.
திதி வெண்பா
---------------------------------
வருடம் விகிர்தி வனப்பான நல் ஆனி
அருளான வளர்பிறைச் சதுர்த்தியிலே----பெருமையுறு
இலங்கை நாயகத்தார் இவ்வுலகை நீத்தார்
நலங்காணும் நல்லுலகம் நயந்து.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆழிசூழ் இலங்கை மண்ணில்...........
வாழுகின்ற தமிழர் வாழ்வில்...........
இலங்கை நாயகம் என்றபெயர் குடும்பத்தில்
துலங்கும் பிரகாசமாய் விளங்குவது சிலருக்கே!
சமாதான உணர்வுள்ள ஆயிரத்தில் ஒருவருக்கே
சமாதான நீதவான் பதவி கிடைக்கிறது
தகுதியாய் அமைந்தது அவரவர் சேவையின்
மிகுதியாய்க் கிடைக்கிறது பதவியில் வகித்தது!
எந்தவிதச் சச்சரவும் இல்லாது வாழுகின்ற
அந்தநல் மனிதருக்கே அரசால் பரிந்துரைத்து
புழங்கும் நட்புணர்வின் தோழமையை மெச்சியே
வழங்கப் படுகின்ற வரமான மகுடமிது!
சின்னமகன் என்பதனால் உடன்பிறந்தார் சுற்றத்தார்
அன்பினைச் சொரிந்து அரவணைத்த செல்லக்குட்டி!
வாழ்நாளில் விவேகானந்த அச்சகத்தின் வளர்ச்சியில்
வாழ்நாட் சாதனையைச் சாதித்த வழிகாட்டி!!
நல்லமனிதர் நாடறிந்த குடும்பத்தின் பெயர்
சொல்லும் வகையில் சுட்டித்தனமாக.............
நிலைகுலையாது நெறிதவறாது............
தலைமை வழிநடத்திய தயவான தம்பியிவர்!
அனைவரும் பாராட்டும் பாசமான மனைவிமக்கள்
சுனைநீர் போன்றதொரு சுதாகரனும் மகனாக.......
பெற்றெடுத்த பெருமையினால் பெரிதும் மனம்பூரித்த...........
பொற்தேர் போலவே பொலிந்த தலைவனிவர்!
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கம், நடராசா (பாதிரி) , மனோன்மணி,
கே ஏ.சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
கே ஏ.சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

