Wednesday, October 7, 2009

மகிழ்வாரே சந்திராவும்.




மகிழ்வாரே சந்திராவும்.
          ...............
  
வீட்டுக்குள்ளே முடங்கி விரக்தி மனதுடனே
    பாட்டெழுதும் பக்குவமும் பதுங்கி மறைந்ததாலே
  நாட்டுக்கும் பயனின்றி நானேன் இவ்வுலகில்....
    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதென...
  பூட்டிய வாசல்திறந்து பூவாங்கப் போனபோது
    வாட்டிடும் துயரம் போக்கும் வனிதாமணி ஒருவர்
  தீட்டிய வார்த்தை கேட்டுத் திடமொன்று மனதுள்வர
   ஊட்டிய தெம்பினாலே உள்ளூரச் சிந்தித்தேனே!



  ஆசிரியப் பணியினூடே அயராமல் சமூகப்பணி
   ஆங்கிலம், தமிழ், மலாய் அனைத்திலும் தேர்ந்தமங்கை
  ஊசிமுனைத் தராசுபோல நீதிநிறை நங்கை
 ”  பேசுகின்ற வார்த்தையிலே பெருகும் தமிழ்ப்பங்கை
  பாசமுடன் எழுதுங்க பையனின் தாள்களிவை”
   வீசிடும் தென்றலாக விளம்பினார் என்முன்னாலே
  நேசமுடன் அவர்துணையால் நிரூபணம் கிட்டியது
   கூசிநின்ற நாட்கள் குறைந்து மறைந்தனவே!

  வேண்டுவோர் உதவிகளை விரைந்துநல்கும் நாவரசி
   பூண்டு மகிழ்வீரெனப் புத்தாடை தந்த பூவரசி
  ஆண்டகை சிவராமகிருஸ்ணன் அகத்தின் மாதரசி
   காண்பவர் போற்றுகின்ற அர்விந்தின் தாயரசி
  நீண்டநாள் நீர்வாழ்ந்து சேவையிலே சீரரசி..
   வேண்டுகிறேன் தாயொருவர் உனக்கு அன்பரசி
 தூண்டுகோல் போலிருந்து திரிஒளிரச் செய்தராசி
   மாண்புறு மனத்தாலே மகிழ்வாரே சந்திரா.சி.

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF