Tuesday, October 13, 2009

நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்! ...சிங்கைக் கவிச்சோலை 11 10 2009

மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
 புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
     அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
     நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?

    இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
    களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
    சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
    நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.

    கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
    முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
    வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
    நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!

சிங்கைக் கடற்கரைக் கவிமாலை 11 10 2009

           வள்ளியம்மை சுப்பிரமணியம். 07 Oct 2009       

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF