Wednesday, October 7, 2009

Letter written on 7 October 2009 in Sinhala to His Excellency the President of Sri Lanka


 For the benefit of the readers, this letter was written on 7 October 2009.                                                                         Blk 101 #04-07, Tampines St 11
                                                                                                             Singapore 521101

கனம்,
பெருமதிப்புக்கு உரிய ஜனாதிபதி அவர்கட்கு,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம்
சிறீலங்கா

           வணக்கம்! ”ஆயுபோவன்”!!

இன்று 07/10/2009 எனக்கு 71 வயது.எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்றும் அதற்குரிய ஆளுமையுடைய உங்கள் சுதந்திரக்
கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய
கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை
இழந்த தாயாகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம்
வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம்
மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர அவரவர் சொந்த இடங்களுக்கு போக வேண்டும்.அல்லது பாடசாலை
கட்டடங்களில் மாரி அடைமழைக்கு முன்பாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு உண்மையான இலங்கை பிரசையாக உங்களிடம் உறுதியாகக் கூறுகின்றேன், இன்று மீதமாக உள்ள அனைவரும்
அடக்கி ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்களே.அவர்களின் கதவைத் திறப்பதன் மூலம் நெடுஞ்சாலைகளும்
குளங்களும் அமைக்க முடியும்.

வரண்ட நிலங்களை நன்செய் நிலமாக்க, இதயச் சுத்தியுடன் நன்னெறியில் மக்களை
செம்மையாய்ப் பயிற்றிட, உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால் அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள், அதற்கு உலக
நாடுகள் உதவ வேண்டுமென உறுதிபட சிங்கப்பூர் TV எதிரொலியில் May 2009இல் கூறினேன்.

இக்கடிதத்தை அவதானத்துடன் வாசித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!
இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

”சீலமும் காட்சியும் நிறைந்தவர், தருமத்தில் நிலைத்தவர், வாய்மைகளை உணர்ந்தவர், தன் கடமைகளைச் செய்பவர்,
இவர்களையே மக்கள் போற்றுவர்.” (தம்மபதம் 217)

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF