Saturday, November 28, 2009

தாத்தா கே.ஏ.சுப்பிரமணியம்

தாத்தா கே.ஏ.சுப்பிரமணியம்




மனிதத்துக்கு ஒர் அடையாளம்- நீ

மலரின் மென்மையும், துப்பாக்கியின் தேவையும் உணர்ந்தவன்


அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை-என் கை தூக்கி

ஒரு வயசில் உணர்த்தினாய்!

சரிவு கண்ட இடமெலாம் -நீர்

பாய்ந்து ஓடுவது போல

அநீதி கண்ட இடமனைத்தும் நீ இருந்தாய்

உன் கனவுகளின் வெற்றியாக

நான் வாழ்வேன்!

சுபாரா

27.11.2009

Thursday, November 26, 2009

இன்னொரு மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009.....




"1959:- தோழர் வி.பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்ய+னிஸ்ட் கட்சிக் கிளைகள் கிராமம் தோறும் ஏற்படுத்துதல். இதற்கு பக்க பலமாக தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நின்று செயற்படுதல். கிராமங்கள் தோறும் ஜனசமூக நிலையங்களையும் பாரதி வாசிகசாலைகளையும் ஆரம்பிக்க ஊக்குவித்தல். இப்பணியைத் தொடர்ந்து கட்சிக் காரியாலயமும் படிப்பகமும் சுன்னாகத்தில் திறக்கப்பட்டன. இப்பணியில் தோழர்.எஸ்.ரி.என்.நாகரெத்தினம் சகல வழிகளிலும் உதவினார். படிப்பகத்தில் பத்திரிகைகளைப் பெறுவதற்குரிய நிதியுதவியை அன்று இலங்கை – சோவியத் நட்புறவுச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவராகவும் தாய்ச் சங்கத்தின் உபதலைவராகவும் கடமையாற்றிய திரு.வி.தர்மலிங்கம் வழங்கினார்."


நன்றி "பொன்மலர் 1994"




இன்னொரு  மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009. 


--------------------------------------

என் மறைவை விடைபெறும் நாளாய் இத்தால்

அறிவிக்க வேண்டுமென்று எண்ணி

முன்னேற்பாடாய்க் கையசைத்து விடைபெற்ற

காட்சியுள்ள புகைப்படத்தை

தன்னினிய தோழர்களிடம் கையளித்து

விடைபெற்ற மனிதநேயர் மணியம் ஆகும்.



இன,மத,சாதிய ஏற்றத்தாழ்வு களைந்து

மக்களின் ஒற்றுமை மலரட்டும் என்று

காங்கேயன் சீமெந்துக் கூட்டுத்தாபன

பொறியியல் பயிலுநராக இருந்தநீ

மனதைப் பாதிக்கும் உள்ளக உணவங்காடி

மனித உரிமையைப் பறிப்பது கண்டு

தன்மனப் போராட்ட உந்துதலால்

தொழிலையும் துறந்து வெளியேறினீரே!
 

50ம் ஆண்டுகளில்....மத சம்பிரதாயங்களை மறுத்தவர்

--------------------------------------------------------------------------------------------------

மணவாழ்விலும் வாழுங்காலத்திலும் இல்லத்தில்

நடந்த நிகழ்வுகளில் மதசம்பிரதாயங்கள்

கணப்பொழுதாவது நடைபெறக் கூடாதென

கவனமாகவும் கண்டிப்பாகவும் வாழ்ந்து-மனித

இணக்கத்தை வலுப்படுத்தும் இடதுசாரிக்

கொள்கைக்காய் குச்சொழுங்கை சந்துபொந்து

சுணக்கமின்றிச் சென்றடைந்து கிராமத்து மக்களின்

சுதந்திர உரிமைகளைச் சுயமாக உணர்த்தியவர்.




ஆலயப் பிரவேசம்.

---------------------------------

“சாதிஅமைப்புத் தகரட்டும், சமத்துவநீதி ஓங்கட்டும்

ஆதியில் இருந்துவந்த அடக்குமுறை ஒழியட்டும்” என்று

அறுபதுகளின் நடுவில் தன்பிறப்பிட ஆலயமாம்

மாவிட்டபுரக் கோவிலின் பிரவேசத்தை மனதாரக்

குறுக்கீடில்லாத் தோழர்கள் குழாத்துடன் வைத்தியர்

சீனிவாசகம், சூடாமணி, சுப்பையா, செந்திலென

போராட்டம் வளர்ந்து மட்டுவில், சங்கானை,

வேம்பிராய், புத்தூர் என்று வேகமாகப் பரவியதே!



மே தினம்---ஊர்வலம்

--------------------------------------

‘மே’ தினம் என்பது அமெரிக்க மண்ணில்....தொழிலாளர்

எட்டு மணித்தியால வேலைஉரிமைக்காய்

போராடி வென்றெடுத்த நாளே ’மே மாதம்’ முதல் நாளாகும்.

உலகமெங்கும் விடுமுறைநாள்..ஊர்வலங்கள்,கூட்டத்தில்....

வேரோடிய தொழிலாளர் விழிப்புணர்வு மிகுதியினால்...

ஆர்வமுடன் செங்கொடிகள் கைகளிலே தாங்கியோர்க்குத்

தலைமை தாங்கித் துணிச்சலுடன் புறப்பட்டாய்.

குண்டாந் தடியடிகள்....குறிபார்த்த துப்பாக்கிகள்..

எணணத்தில் உறுதிகொண்ட தோழர்களின் பலத்தால்,

மே தின ஊர்வலம் யாழ்-நகரைச் சுற்றியதே!


அடித்து உதைக்கப் பட்டும் எலும்புகள் நொருக்கப் பட்டும்

பிடித்து மிரட்டினாலும் பின்தள்ள முடியாத...

அடிமை விலங்கொடிக்க ஐக்கியமும் போராட்டமும்

குடிமக்கள் மனதிலே கொழுந்து விட்டெரியும்

ஆவேசம் தீரவில்லை அவலம் குறையவில்லை

ஆனமட்டும் சகல முற்போக்குச்  சக்திகளுடன்

கையோடு கைகோர்க்கும் கைங்கரியம் நடைபெற

தைரியமாய் இடதுசாரிகள் ஐக்கியம் உதிக்கச் செய்தாய்!



முன்னாளில் கெனமன், சரத் முத்தட்டு வேகம...பதுளை

முன்னணி வெற்றிபெறப் போனதுபோல் உன்னைநாடி

வநத பலருக்கு உறவானாய்....கருத்துப் பரிமாற்றம்
 
 
’தாயகம்’ இலக்கிய இதழைத் தோற்றுவித்தாய்!


---------------------------------------------------------------------------------

ஆண்டு எழுபதுகளின் ஆரம்பத்தில் அரசியலுடனே

பூண்ட இலக்கியமும் புதுமைபெற வேண்டுமென

வேண்டும் கலைஇலக்கியப் பேரவையைத் தோற்றுவித்து

தூண்டும் ஆசிரியத் தலையங்கம் தீட்டிநின்றாய்...

“தாயகம்” என்ற இலக்கிய இதழ்பிறந்து வளர்ந்தது.

தாயவள் நேசக்கரம் தன்னகத்தே கொண்டதனால்.....

முற்போக்குச் சிந்தைகொண்ட முனைவர்கள் வந்தார்கள்.

கற்றுப் பயன்பெறுவோர் கருத்தை எடுத்துரைத்தார்.




பேராசிரியர் கைலாசபதியின் தலைமையிலே

பாரதியார் பன்முகப் பார்வைத் தொடர்களில்...

சாரதிபோல் ரதம் செலுத்த அறிஞர்பலர் கூடினரே!

வேராக மறைந்திருந்தும் விழுதாயும் தாங்கினரே!

அரசியல் வாதிக்கு இலக்கிய ரசனையா?-எங்கிருநது?

‘’வரலாறு கூறுங்கள்” என்றுபலர் வினவினரே!’

“வி.பொன்னம்பலம்  தொடக்கம் - சண்முகதாசன் வரைக்கும் விளம்பினீரே!

 
 
இலக்கியவாதியாகவும் இயங்கினார்.


--------------------------------------------------------------

வொல்கவிலிருந்து கங்கைவரை.....பகவத்சிங் தொடக்கம்

நம்பூதிரிபாத் வரை--ஜீவானந்தம் தொடக்கம்-ஜெயகாந்தன்வரை

கார்ல்மார்க்ஸ் தொடக்கம்--மார்க்ஸிம் கோர்க்கி வரை-அதற்கு முன்

கம்பன் தொடக்கம்-வள்ளுவன் வரை பாரதி தொடக்கம்-பாரதி தாசன் வரை

கம்பனை வளர்த்த சடையப்ப வள்ளலை குறிக்கும்,

கம்பன் பாடிய பாடலையே தன்வீட்டுப் பாடலாக........

“அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்.......”

அந்தக் காலத்தில் கணனி-இணையம் இல்லாததால்...

இந்த உண்மைகள் வெளியுலக வெளிச்சத்திற்கு வரவில்லை!



அரசியல் எதிரிக்கும் அடைகலம் கொடுத்த அன்பன்.

-------------------------------------------------------------------------------------------

எண்பதுகளின் ஆரம்பத்தில் மனிதம் மரணிக்க.....

எண்ணற்ற வானூர்திகள் எடுத்துவீசிய பொருட்களும்

அள்ளும் ஆர்வலர்களின் மேளதாள வரிசைகளும்...

மக்கள் கூட்டமும் மலர்மாலைப் பொதிகளும்...

மேலாதிக்க வல்லரசின் மேலோட்டம் விழுந்ததால்...

“தேசியத்துள் நுழைதல் தேவையில்லை” என்று...

முதற்குரல் கொடுத்த முத்தமிழன் நீதான்!

இக்கருத்தை மறுதலித்த பத்திரிகை ந்ண்பன்

இல்லந்தேடி அடைகலம் கோர உன்னிடம் வந்தபோது..

‘”அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்”

உடையவனாய் மிளிர்ந்தவன் மனிதமணியமே!
 
 
நிர்ப்பந்தமாய் ஊர் துறந்தாய்.


-------------------------------------------------------

அரசியல் தெளிவற்ற ஆட்கொலைஞர் உன்கருத்தை....

விரசமாய் விதைத்தபோது நிர்ப்பந்தமாய் ஊர்துறந்தாய் !

அதிகார வர்க்கமும் மாறிக்கொண்டே இருக்க...

அரிதாரம் பூசுவோரும் நிறங்களை மாற்றினர்.....

பதிவில் பலகதைகளுக்குச் சுருதியைக் கூட்டினர்.

உன்னைத் துரத்திய துப்பாக்கிகள் மாறின...

மதித்தவர் பலர் உன்னுடன் இருந்ததால்.....-நீயோ

துப்பாக்கிகளுடன் ஒத்துப்போக விரும்பவுமில்லை !



கண்டி வைத்தியசாலையில் இறுதி மூச்சு !

-------------------------------------------------------------------------

மனிதத் தேய்வு மலிந்து நீர்தேங்கிய இடங்களில்

பாசி பிடித்ததுபோல் இடப்பெயர்வு - புலம்பெயர்வு....

தனியத் தமிழன்....அவதிகள்...”அகதிகள்” என்ற

புனிதப் பெயரால் அழைக்கப் பட்டான்.

மனித இனமே மந்தைகளாயினர் ஏனென்று கேட்காமல்...

பின்னாலே ஓடுகிற பின்னடைவு வந்ததனால............!

எண்பதின் இறுதியில நீ விடைபெற்ற வேளையில்...

உன் உடம்பில்................!

‘தங்கொல்லை” முஸ்லீம் சகோதரியின் வீட்டுணவும்,

கண்டி வைத்தியசாலை பெளத்த பிக்குவின் குருதியுமே.....

தேசியம் உனக்குள் இருக்க; தேசம் உன்னை இழந்தது !
 
 
இறுதிப் பயணம்.
 
-----------------------------
ஊர்வலங்களைத் தடைசெய்யும் இராணுவக் காலத்தில்

சீர்பெறு செம்பதாதைகள் உயர்ந்து நிற்க....

ஏராளமான புத்தகப்பூக்களின் நடுவில் கண்மூடியபடி...

பெயரான ‘பொய்யாமொழி’ யின் உடலைச் சுற்றி

பாராளும் பலதோழர்கள் கைகளிலே செங்கொடிபறக்க.....-கண்

நீரால் வாழ்த்தி விடைகொடுக்கும் தோழமை,உறவுகள்

உன்னை அனுப்பி வைத்தோம். நீ வளர்த்த தேசியமும்

உன்கனவை நனவாக்க கண் விழித்தபடி இருக்கிறது. !



Wednesday, November 25, 2009

Remaining steadfast beside me! - My Grandfather K.A.Subramaniam



It is still so hard to believe that I have spent only my initial childhood years with you. However those days as a toddler & young kid remains still fresh and would always be evergreen in my life.

Whenever I have met different people, whose lives have been touched by your presence had said great & wonderful things about you. This would leave me wondering with so much awe & wished that I could spend more time with you.

Sometimes I believe that since we had so less time with each other, the love you showered to me was eternal.


The videos, photographs and the stories told to me enabled me to picture within my heart & was in every part of my life which helped me to be successful in the steps I’ve taken so far.


The words which I still remember and cherish are the ones where “You told me not to worry about anything and will always be there for even before I could utter my first alphabet in my mother tongue”, however you were long gone before I had the chance to grow as a girl and deal with real problems in life.


The way you saw life was “Nothing is Impossible”, still remember the day when I had asked you to show me the moon on a moonless night and you did show me the moon. It was not in the sky, however on a wall with torch light. The optimism which you showed me is one of the reasons on me being successful so far in life. All your dreams were well thought ahead of your time. Whatever people are saying at this century has been envisioned by you about two decades ago.


I’m so proud & honored to share the genetics with such a righteous man. The question that lingers my mind is how was it possible for a person to have the knowledge, virtue, commanding personality and yet being simple?


“Greatness of my thatha is his simplicity”


The life you lead was the one you preached to people of Tamils in the island nation, -“


“Adaiya nedung kathavum, Anjel enra sollum vendum”* (அடையா நெடுங் கதவும், அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும்) and our Sathiamanai never had a door. You were a man of your words.


When you lay frozen amid the trees which you had planted, books you treasured and people esteemed by you knew that the mankind will never see another human being in this world with love, honesty, integrity and a hope to realize the dreams for his country and his people.


Along with all the people whose lives had an impact by your presence is your granddaughter who will live your dreams and make them come true.


 Thatha-you are my hero “ A true hero who lived for the change and / to uplift millions of lives in a society with troubled civil rights”and you always will be a Hero in those.


Love you!

Subhara Raveendran

கார்த்திகை 27: தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு



காலில் வீக்கத்துடன் அந்தக் காலை லேசாக தடவிக்கொடுத்தவாறே திண்ணையில் உள்ள சாய்மனைக்கட்டிலிலிருந்து இடதுசாரிச் சிந்தனை அடிப்படைகளை கோரோசனைக் குழிசையை சிரட்டையில் உரைத்துப் பக்குவத்துடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம் கிராமத்து வைத்தியர்போல அவர் அருகே இருந்து பாடம் கேட்ட 1983 கால நாட்களை இன்று நினைவுகூர்கிறேன்.

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் 1969 இல்




இடையிடையே எழும்பி முற்றத்தில் நடக்கும் பாவனையிலும்கூட மூலதனத்தினதும் தனிச்சொத்துடமையினதும் அரசினதும் உழைப்பாளர் வர்க்கத்தினதும் இனவேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படவேண்டிய தவிர்க்கவியலாத நியதிபற்றி ஆசான் மணியத்தாரிடம் அப்போது பாடம் கேட்டதை இப்பொழுது நினைவுகூர்கிறேன்


கீறாத,கிறுக்கிக் கசக்கிவைக்காத காகிதமாக அப்போது நாங்கள் இருந்தோம். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச்செயலாளராக இருந்தார். அவ்வப்போதான உரையாடல்களின் வழியே இன்றுவரை என்னிடம் தொடரும் வர்க்க சாதிய போராட்ட அடிப்படைகள் அவரிடம் இருந்து முதிசமாக எனக்குக் கிடைத்தவைகளே.

தமிழில் வெளிவந்த சீன - சோவியத் இலக்கியங்களை எனக்கு கனிவோடு அளித்த ஒளியும் அறிவும் விவேகமும் நிறைந்த அந்த முகம் நினைவில் இப்போது அபூர்வமாகவும் அதிசயமாகவும் மாறிவிட்டது. நாம் மறுத்தபோதும் துப்பாக்கிகளைத் தருவதற்கு எல்லோரும் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அவரின் அன்றைய நெறிப்படுத்துதல்களே இன்றுவரை வன்முறையற்ற வடிவங்களில் எம்மை நடத்திவருகிறது.

தீண்டாமை எதிர்ப்புப்போராட்டத்தின் போது தோழர் மணியம் அவர்கள் முன்னணியில் நின்று போராடியதிலும், அப்போது பொலிஸாரின் வன்முறையிலும் தடியடியிலும் தாக்கப்பட்டதிலும் தொல்புரத்தில் தலித்துகளிற்கான குடிநீர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்மாதிரியிலும் அவரின் நினைவு இன்றுவரை தொடர்கிறது.

'வெய்யிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும்' என்பது அவர் போன்ற பெரும் ஆளுமைகள் மறைவின்பின் இன்று வெறுமையாகவே தெரிகிறது. புலிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார். எப்போதும் செயற்படாதவாறு அவர் முடக்கப்பட்டார்.

ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளின்போது அவர் மகனும் எனது தோழனுமான 'மீரான் மாஸ்ரர்' அவர்களோடு கடைசியாக அவர்கள் வீட்டிற்குப்போய் அம்மாவின் கையால் கொழுக்கட்டையும் மோதகமும் சாப்பிட்டபின்னர் அவர் வீட்டிற்கு இன்றுவரை போகவில்லை.

இப்போது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் மிஞ்சியிருப்பது...மணியத்தார் இருந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்.

சுகன்

Monday, October 12, 2009
 "நிச்சாமம்" இணையத் தளத்தில் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்.

Tuesday, November 24, 2009

5th March 1931 K.A Subramaniam 27 November 1989 Remaining steadfast beside me…

Remaining steadfast beside me…



It is so hard to believe I have spent only my initial most years with you.

Every time I hear people talk about you with so much awe I wish I had the opportunity to spend more time with you.


It is probably because we had so little time with each other you showered me with all the love that is needed for an eternity.


All your videos, photos and all the stories I’ve heard about you, made me picture you as someone who has been there in every part of my life and helped me lead every step I’ve taken.

You told me not to worry about anything and that you will always be there for me even before I could speak my first word, but you were long gone before I even had the chance to deal with the real problems in life.

When it comes to you nothing is impossible, I ask you for the moon on a moonless night and you show me moon on the wall with torch light. All your dreams were well ahead of your time. Whatever people are saying now you said them two decades ago.


I’m so proud to even share my genes with such a righteous man. How is it possible for a person to have all the knowledge, virtue, commanding personality and yet be so simple?


You’ve lead a quintessential life, you’ve followed every single thing you preached.


You said "Adaiya nedung kathavum, Anjel enra sollum vendum” * and our Sathiamanai never had a door. You were a man of your words.


When you lied frozen amid all the trees you planted, the books you treasured and the people who esteemed you, they all knew without a doubt that the world will never see another human so full of love, so full of honesty, so full of integrity and so full of hopes and dreams for his country and people.


Along with all the people, whose lives you’ve made an impact on, I will live your dreams and make them come true.


Thatha, you have always been my hero and you always will be. Love you!


R,Subhara
* In Tamil

Friday, November 20, 2009

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009



கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture will be held on Saturday 28 November 2009 
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

Sunday, November 15, 2009

சிங்கப்பூர்-திருமதி-திலகவதி அன்பழகனின் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்




நாமறிந்த திலகவதிகள் நானிலத்தில் பலருண்டு...
நாவுக்கரசரின் தமக்கையாக நற்சமய வரலாற்றில்
தம்பியாரைத் தன்வழியில் தடுத்தாண்ட தமக்கையாகும்.-மற்றவர்
செம்மைமாதர் பாதுகாப்பில் சேவைபல செய்கின்ற
தமிழ்நாட்டின் தலைநிமிரக் குரல்கொடுத்து-மின்
குமிழான ‘அம்ருதா’வில் குறிக்கோளை எழுதிவரும்
ஐ.பி.எஸ். திலகவதி- அரிவையர்க்கு ஆணிவேராம்.
செய்கையில் தமிழுயர சிங்கையில் உழைக்கின்ற
வலதுகையான அன்பழகன் வாழ்க்கைத் துணைவியான
திலகவதி பெயருள்ள திருமகளாம்.சிங்கைவாழ்ந்த
இராமையாத் தேவரின் இளையமகள் இவரென்போம்.
இராமன் வாழுமிடம் சீதைக்கு அயோத்தியென்று
தமிழ்நாடு சென்றிருந்து தலைவன்வழி வாழந்த்வராம்.
அமிழ்தான வாழ்க்கையிலே ஆண்மக்களைப் பெற்றவராம்.
அக்டோபர் முப்பத்தொன்றில் ஆளுமையுடன் பிறந்து
அன்பழகன் இல்வாழ்வில் அரும்பணிகள் செய்தவராம்
கவிமாலை நிகழ்ச்சிகட்கு கருத்துடனே வருகைதந்து
குவிகின்ற புன்சிரிப்பால் குளிர்விக்கும் குலமகளாம்.-அவரை
புவிமேலே நீடுவாழ்ந்து புதுமைத்தேனி புகழுயர...
கவிமாலை உறவுகள் களிப்புடனே வாழ்த்துகின்றோம்.

   வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Monday, November 2, 2009

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில் இருந்து சில காணொளிகள்.......

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில்  சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில்  இருந்து சில காணொளிகள்....... உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே  ஒளி செய்கின்றோம்...........


'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 50ம் ஆண்டு நினைவு நாள், சிங்கப்பூர் 01 Nov 2009 இல் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றோம்........


 
           அமைதிப் பாட்டு.
         -----------
 சிங்கப்பூர்ச் சிக்கனத்தில் வாழ்க்கையை ஓட்டு.
 ம்ங்காத ஐக்கியத்தைப் பழக்கத்தில் காட்டு.
 அயலவனை நேசிக்கக் கரத்தினை நீட்டு.
 சுயமாக உழைத்து மகுடத்தைச் சூட்டு.


 சமூக முன்னேற்ற நெறிகளைத் தீட்டு.
 தமிழின் பெருமையைத் தரணியில் நாட்டு.
 அறவழி தன்னில் பொருளினை ஈட்டு.
 குறைகள் சொல்வோர் வாய்தனைப் பூட்டு.


 இல்லாள் வருந்தாமல் ஒத்துழைத்து வீட்டு -
 அல்லல் களைய ந்ம்பிக்கை ஊட்டு.
 குழந்தையின் சிரிப்பில் தலைதனை ஆட்டு.
 புழக்கத்தில் புரளுதாம் கள்ள நோட்டு.


 வேண்டாத விரயங்கள் துருப்புச் சீட்டு.
 பூண்டநன் நெறிகளை அறிஞ்ரிடம் கேட்டு -
 வாரத்தில் ஒருநாள் குடலினை வாட்டு.
 நேரமே கிடையாது என்பது சாட்டு.

 அருவருக்கும் செயலுக்கு வைப்பாய் வேட்டு.
 திருக்குறள் எழுதிச் சுவரிலே மாட்டு.
 விரும்பும் சமாதான வீணையை மீட்டு.
 திரும்புமே உலகில் அமைதிப் பாட்டு.


  வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF