மக்களுடன் வாழ்ந்த மாதரசி அன்புச் சகோதரி பார்வதி அம்மா
------------------------------------------------
கன்றைவிட்டுப் பசுஅகலாக் கதைகள் படித்ததுண்டு.....
கன்றுகள் தாயைக் கதறவைத்துப் பறந்தகதை......
ஒன்றொன்றாய்ச் சொன்னாலும் ஓராயிரம் நாள்வேணும்.
நன்றான இல்லறத்தில் நானுனக்கோர் தங்கையம்மா!
உனக்கு....
புலம்பெயர்ந்த தமிழரெல்லாம் புகழாரம் சூட்டுகையில்
வலமிடமாய்ச் சுற்றிவந்து வாய்க்கரிசி வேண்டாமே!
குலமகளே! குணக்குன்றே !...கோலங்கள் மாறினாலும்
பலமாக மகனோடு வாழ்ந்தவாழ்வு அர்த்தங்கள் நிறைந்ததம்மா.
வள்ளியம்மை சுப்பிரமணியம்
நீவிர் தனித்தவர் அல்ல அம்மா ஈழத்தினை உயிர் மூச்சாய் கொண்ட அமைத்து மைந்தருக்கும் நீவிர் தாயே. உமைப்பிரிந்து இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோம் தாயே. எம் உள்ளத்தில் கோவில் கொள்வீர் என் மாதாயே.
ReplyDelete