இராம.வயிரவன்- கவிதைக் குழந்தைகள்.
------------------------------------------
காலத்தின் கட்டாயம் கருத்தில் எழுந்ததனால்
ஞாலத்தில் தன்பங்கும் நியாயமாய் உண்டென்று....
இராம--வைரவனார் எழுதிவெளிட்ட அந்த
காராம் பசுவான “ கவிதை குழந்தைகள்” கருவூலம்....! கருவூலம் !!
குழந்தைமுதல் பெரியோர்வரை குளிரவைத்தார் வார்த்தைகளால்
மழலைக்கு மட்டுமல்ல; மானிட வர்க்கத்துக்கே....
பழமையிலும் புதுமைகண்டு....புதுமையிலும் புகுதிறத்தில்
அழகாக யாத்துத் தந்தார்....கவிக் குழவி வயிரவனார் !
வேறு
-----------
முகத்திலொரு புன்சிரிப்பு அகத்திலொரு அமைதி
செயல், திறன்கள் செய்துவிட்டு சிறுவன்போல் வீற்றிருப்பார்.
அத்தனையும் தன்னடக்கம், மொத்தத்தில் அன்னம்போல்
பாலுக்கும், நீருக்கும்....பகுத்துணரும் பாங்கினனாம்!
அன்புடன்.......அம்மா....வள்ளியம்மை சுப்பிரமணியம்.
சிங்கப்பூரில் கணிப்பொறித் துறைப் பணியிலிருக்கும் இவருடைய சிறுகதைகள் மற்றும் கவிதைகள் இந்திய, சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இதழ்களிலும், இணைய இதழ்களிலும் நிறைய வெளியாகி இருக்கிறது. இவருடைய கவிதைகள் மற்றும் சிறுகதைகள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பரிசைப் பெற்றிருக்கிறது. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் போன்றவற்றில் பங்கேற்றிருக்கும் இவர் சிங்கப்பூர் வானொலியான ஒலி 96.8 நடத்தியுள்ள கவியரங்கத்தில் பல முறை பங்கேற்றிருக்கிறார்.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்