மானிடத்தின் மகிழ்வில் உணர்வு கொள்வாய்!
---------------------------
சொந்தப் பலத்தைத் தொலைத்து நிற்கும்  தோழனே....!
வந்தோம் பூமிக்கு....வாழ்ந்துதான்  காட்டுவமே....!
முட்டையிடும் பருவத்தில் கூடுகட்டும் குருவிகண்டாய்  !
இட்டமுடன் மாரிகாலம் இனத்தோடு  வாழ்வதற்கு.....
திட்டமுடன் புற்றெடுக்கும் கறையானைக் கவனித்தாய்  !
உட்கருத்தை ஏற்று நீ உற்சாக உணர்வு  கொள்வாய்.!
வட்டவட்டக் கண்கள் வைத்து வளர்பிறை  காலத்திலே
எட்டாத உயரத்தில் தேனீக்கள் கூடு  கண்டாய்....
அட்டதிக்கும் உன்மதிப்பை அன்பர்கள்  மெச்சிடவே....
கட்டளையை நீ வகுத்துக் காலத்தால் உணர்வு  கொள்வாய்!
ஊனமுற்றோர் பங்குபற்றும் விளையாட்டுப்  போட்டிகண்டாய்
கானமிசைக்கும் கண்பார்வை அற்றோர்  பாடல்கேட்டாய்
சோர்வகற்று ! சுறுசுறுப்பை உன்னகத்தே  கொண்டுவந்தால்... !
மார்பழகா!....மானிடத்தின் மகிழ்வில் உணர்வு  கொள்வாய்!
வள்ளியம்மை  சுப்பிரமணியம்.

 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்