"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Saturday, March 26, 2022

Introduction to the book of poetry by Prof. S. Sivasegaram பேராசிரியர் சி.சிவசேகரம் கவிதைகள் நூல் அறிமுகம்

 



தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தக அரங்கப் பெருவிழாவின் முதல் நிகழ்வு - பேராசிரியர் சி.சிவசேகரம் கவிதைகள் நூல் அறிமுகம்

















சத்யதேவன் சற்குணம்

சத்யதேவன், சற்குணம் (1984.01.20 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சற்குணம்; தாய் தங்கேஸ்வரி. இவர் தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் மாணவராவார். தற்போது இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்ற இவர் வரலாறு, தமிழ் சமூக வரலாறு, மானிடவியல், தமிழிலக்கிய வரலாறு, சமூகவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர்.

இவர் எஸ்.சத்யதேவன், சத்யன், ச.சத்தியதேவன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரை, ஆய்வு, பத்தி, விமர்சனம் ஆகிய துறைகளில் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மலைமுரசு முதலிய பத்திரிகைகளிலும் ஞானம், நீங்களும் எழுதலாம், கலை ஓசை, புதிய சொல் ஆகிய இதழ்களிலும் நீள்கரை ஆகிய இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். சுன்னாகம் நூலக பொன்விழா மலரிலும் எழுதியுள்ளார். இவர் சனம், கலைஓசை, சமூக வெளி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அங்கத்தவராவார். தி.த. சரவனமுத்தப்பிள்ளையின் "தமிழ் பாஷை, தத்தைவிடு தூது மற்றும் ஏனைய பிரபந்தகளும்" நூலின் மீள் பதிப்பாசிரியர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினரான இவர் சமூகவெளி படிப்பு வட்டத்துடனும் இணைந்து செயற்படுகின்றார். தாயகம் (இதழ்) நிர்வாக ஆசிரியர் சத்தியதேவன் ஆவார்.



வரலாறு பற்றி ....
(தோழர் மணியம் நினைவாக )

வரலாற்றிற் பேர்பொறிக்க 
வலியபெரும் படை நடத்தி 
வாளெடுத்த பேர்கள் பலர் 
வாள்பொறித்த பேர்களையே 
வாள் சிதைத்த வரலாறு 
பேர் மாற்றிப் பேர் மறந்து 
பேர் மறைக்கும் வரலாறு 
வென்றவர்கள் எழுதுகிற 
பொய் கலந்த கதை நிறைந்த 
ஏடுகளா வரலாறு? 
களிமண்ணா கல்வெட்டா 
காகிதமா வரலாறு ? 
முதல் நெருப்பை மூட்டியவர் 
சக்கரத்தைக் கைத்தறியைக் 
கல்லுளியைக் காகிதத்தைப் 
பூச்சியத்தைக் கண்டறிந்தோர் 
பேசுகிற மொழி வகுத்தோர்
பேரறியா வரலாற்றிற் 
சொல்திரிந்து செயல் மறந்து 
பேரழிந்து போனாலும் 
வாழுமொரு வரலாறு 
மானுடத்தின் மேம்பாடு 
மானுடரின் அருஞ் செயல்கள் 
ஆக்கிவைத்த வரலாறு, 
எழுதாமல் நிலைபெற்று 
வாழுகிற வரலாறு
 - - பேராசிரியர் சி.சிவசேகரம்
Thanks Noolaham புதிய பூமி 1990.04 for more information please read  Unity and Struggle - By Professor S. Sivaseharam in memory of K.A. Subramaniam in 1991 ஐக்கியமும் போராட்டமும் (தோழர்.கே.ஏ.சுப்பிரமணியம் நினைவுகள்) - பேராசிரியர் சி.சிவசேகரம் (1991 ) 






SSA Talks: Dr. S. Sivasegaram [1/3]


SSA Talks: Dr. S. Sivasegaram [2/3]


SSA Talks: Dr. S. Sivasegaram [3/3]




Wednesday, March 23, 2022

செவ்வஞ்சலி செலுத்துகிறோம்! தோழர் க.நடனசபாபதி !!

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்  மூத்த உறுப்பினரும், மனித நேயக் கல்வியாளரும், மக்கள் சேவையாளருமான தோழர் க.நடனசபாபதி 23.03.2022 அன்று இரவு 9 மணியளவில் புலோலி பருத்தித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு  செவ்வஞ்சலி செலுத்துகிறோம்! 


இனிய நினைவுகள்




தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் என்னோடு பழகிய நாட்கள் சிலவே ஆயினும், அச் சிலநாட்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம் நின்று நிலைக்கக்கூடியது. ஏட்டில் இடம் பெறாத பல வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் அப்பழுக்கில்லாமல், துல்லியமாக வெளிக்கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர். ஒக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற புரட்சிக் கோலங்களையும் விளைவுகளையும் அவர் எடுத்துச் செல்லும் பாங்கு அலாதி சிறப்புடையது.

 

மக்கள் நடத்திய புரட்சி வரலாற்றை நன்கு அறிந்த காரணத்தால், குறைகளையும் தவறுகளையும் அறவே களைந்த மக்கள் புரட்சியை எடுத்து நடத்த வழிகோலினார். இலங்கைத் தமிழ்ச் சாதியிடம் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை அடியோடு அகற்ற இவர் காட்டிய வழி, நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழி. இவர் வாய்ச்சொல் வீரரல்லர், செயல் வீரராகவர்.

 

பகைவருக்கும் அருளும் நல்லுள்ளம் படைத்தவர். இருந்தபோதிலும், தமது நண்பர்களுக்காகவேனும் இலட்சியத்திலிருந்து வழுவாதவர். நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் சிறிதும் நம்பிக்கை அற்றவராயினும், அந்த நம்பிக்கை நன்கு ஊறிய மக்களைத் தேர்தல் கடமையை எவ்விதம் நிறைவேற்ற வேண்டும் என வழிகாட்டத் தவறவில்லை.

 

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் மக்களுக்குக் காட்டிய வழி, போட்டியாளரிடம் அவர் பெற்றுத்தந்த வாக்குறுதிகள், போட்டியாளரைத் துணிவுடன் வரவேற்ற பாங்கு- போற்றிப் புகழ வேண்டியவை. மாற்றாரிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறிய வழிமுறைகள் வருங்கால வழிகாட்டிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

 

அவருடைய எழுத்தாற்றல் செம்பதாகை’, ‘புதிய பூமி ஆகியவை தென்புடன் நடைபோடக் காரணமாயிருந்தது. அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு, அவர் காட்டிய வழியில் ஒழுகி- புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதே ஆகும்.

 

க.நடனசபாபதி, பருத்தித்துறை. 1989



Happy Memories - By K.Natanasabapathy

 
Although the days when Comrade KA Subramaniam got acquainted with me were few, the impact he had on those few days was lasting. He is the one who has the power to unravel many historical events that are not in the record. Aladdin's style of carrying out the revolutionary spheres and effects that took place in various parts of the world after the October Revolution is remarkable.

Knowing the history of the revolution carried out by the people, he guided the people to carry out the revolution which had eliminated the flaws and mistakes. The way he showed us to eradicate the caste inequality that is deeply ingrained in the Sri Lankan Tamil caste is the way we should follow. He is not a word player, he is an activist. 

He is kind and gracious to the enemy. Nevertheless, he did not fall short of the ideal for his friends. Although he had little faith in the current electoral system, he did not fail to guide the well-to-do people on how to fulfill their electoral duty. 

The way he showed the people during the last presidential election, the promises he made to the contestant, the manner in which he boldly welcomed the contestant - were to be commended. Let the instructions that are said to be communicated to the converter also be a lesson to future guides.

His writing 'Cembatagai' and 'New Earth' were the reason for walking with the South. The handover we make to him is to flow the way he has shown- to create new leadership. 

Point Pedro. 1989


உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • முன்னுரை- எம்.கே.முருகானந்தன்
  • என்னுரை - க.நடனசபாபதி
  • பொருளடக்கம்
  • பருவமானவர்கள்
  • உடல் மாற்றங்கள்
  • மார்பகங்கள்
  • பருக்கள்
  • மணம்
  • உடல் மாற்றங்கள்
  • விருத்தசேதனம் செய்தல்
  • ஹிஜ்றாக்கள்
  • பாலியலும் அது தொடர்பான பிறவும்
  • சுயமாய் விந்து வெளியேற்றுதல்
  • பாலியல்
  • பாலியலால் பரவும் நோய்கள்
  • வன்கலவியும் பாலியல் துஷ்பிரயோகமும்
  • கருத்தடை முறைகள்
  • அபாயங்களும் முரண்களும்
  • புலிமியா, அனோ றெக்ஸியா, உடற்கட்டமைத்தல்
  • இரட்டை நிலை பருக்கள்
  • பெற்றோருக்கு பூர்வீகத்திலிருந்து உயிர்வாழ்வோரே பருவமானவர்கள்

நூலக எண்80744
ஆசிரியர்நடனசபாபதி, க.
நூல் வகை-
மொழிதமிழ்
வெளியீட்டாளர்புதிய பூமி வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு2009
பக்கங்கள்48


நூலக எண்2963
ஆசிரியர்நடனசபாபதி, க. (தமிழாக்கம்)
நூல் வகைஇலக்கியக் கட்டுரைகள்
மொழிதமிழ்
வெளியீட்டாளர்தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு1999
பக்கங்கள்120

Sunday, March 20, 2022

தெய்வ. பகீரதன் அவர்கள் அவுஸ்த்திரேலியாவிலிருந்து இந்த அம்மம்மாவையும் பார்க்க வந்திருந்தார்




இம்முறை இலங்கைப் பயணம் மிகச்சிறந்த சுவாரசியங்களாலும்  கற்றல்களாலும்  குடும்பங்களின் ஒன்றுகூடல்களாலும் சில எதிர்பாராத திருப்பங்களாலும் சந்திப்புகளாலும் திகட்டாமல் தித்தித்தது. 

நண்பர்கள் குடும்பத்தில் எப்போதும் அங்கத்தவர்கள் தான். 

அவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு அடுப்படிவரை வந்து அடிப்பானை வழித்துண்ணும் அளவுக்கு நெருங்கியவர்கள். என் பயணங்களிலெல்லாம் பங்கெடுத்துக்கொள்ளும் பலரில் இவர்கள் அடக்கம். 

புலம் பெயர் வாழ்வின் புதிய அனுபவம் தேடிய பயணங்களில் பொதியிறக்கி இளைப்பாற இடம் தந்த பலரில் என் எண்ணப்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் ஒத்தபடி ஒருவர் எனக்கு அறிமுகமாகிறார்..

இற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரம்மியம் நிறைந்த பச்சைப் பசேல் பள்ளத்தாக்குகளினூடு குளிர்கலந்த காற்றைத் கிழித்தபடி உறுமிச்சென்றது என் ராசா - ஆம் என் ராசா தான், அவனிடம் தங்கமில்லை வைர வைடூரியங்கள் இல்லை ஆனால் என்னோடு ஓடியுழைக்கும் வைராக்கியமும் வலிமையும் இருந்தது. 

ஆம் ராசாவேதான் - எனக்கு உறவினர் தந்த ஓர் கார். 

என் முற்பாதி அலைச்சல்களில் அயராது துணைநின்றவன் ராசா. எனது முதல் கார்! 

அவன் தான் உறுமிச்செல்கிறான் குளிர்கலந்த காற்றைக்கிழித்த படி! 

இருள் கவ்வத் தொடங்கி இருமணிநேரம் கடந்தபின் இயக்கம் நிறுத்தப்படுகிறது ..

டொக் டொக் ... 

வாங்கோ .. நீங்கள்  தான் பகீரதனா ...

மதி கதைச்சவர் ..

ஓம் கீர்த்தி அண்ணா .. எனக்கு அவர் மாமா முறை.  இப்பிடி இஞ்சாலை இடம் மாறப்போறன் எண்டு சொன்னதால உங்களைச் சந்திக்கச் சொன்னவர். 

தத்தளித்த ஓடத்தின் துடுப்பைச் சரிபார்த்த மனிதர் கீர்த்தி அண்ணா. 

அன்று அவரைச் சந்தித்த நிகழ்வு பல திருப்பங்களை உருவாக்கிய நிகழ்வுகளின் தொடக்கப் புள்ளி. 

நீங்கள்  நல்ல வேலையொண்டு கிடைக்கும் வரை இங்கையே தங்கலாம். எனக்கும் பம்பலா பொழுது போகும். 

நன்றி .. 

சரி குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம். 

சாப்பாட்டு மேசையில் தொடங்கிய ஆழமான உரையாடல்கள் எம் இருவரையும் இன்னும் பல படி நெருங்க வைத்தது. 

மின்னியல், ஊடகம், சுதந்திரம், உலகம் என பரந்து படர்ந்தது பல சுவையான உரையாடல்கள். 

சமையல், புல்லுவெட்டுதல் , கூரைக்கு மேல் குப்பை பொறுக்குதல் என எல்லா வேலைகளிலும் இருசோடி கரங்கள் இணைந்து கருமமாற்றின. நட்பும் நெருக்கமானது. 

அங்கேதான் தான் நான் அம்மம்மா என்றழைக்கும்  மதிப்புக்குரிய  வள்ளியம்மை சுப்பிரமணியம் அறிமுகமாகிறார் - தொலைத்தொடர்பின் பரிணாம வளர்ச்சி எமை இறுக இணைத்து விடுகிறது. 

கீர்த்தியண்ணாவுடன் கதைக்கும்பொழுதுகளில் என்னோடும் கதைத்துத்தான் நிறைவுறும் உரையாடல்கள். 

நேரில் பார்த்துவிட வேண்டும்! 

அளவளாவி அவாத்தீர்க வேண்டும், அவா வளர்க வேண்டும். ஆளுமையையும் அசராத துணிச்சலையும் ஆறாத இடரிலும் இரும்பு இருதயத்தோடு இத்தனை கனவுகளை நிஜமாக்கி தனக்கின்றி மற்றோர்க்கு மனமுவந்து கொடையளிக்கும் இந்த அம்மம்மாவைப் பார்க்கவே வேண்டும். 

கங்கணம் கட்டிக்கொண்டேன்! 

"கற்க கசடற" கற்கவைத்தது, கதைக்க வைத்தது, கனவைல்லாம் கண்முன்னே நிஜமாக்கி விரியவைத்தது! 

கீர்த்தி அண்ணா ...இண்டைக்குப் பின்னேரம் அம்மம்மாவைப் பாக்கப் போறேன்..

ஓ.. சந்தோசப்படுவா ..

நம்பர் இருக்குத்தானே? 

ஓம் ..

சரி ..என்னத்துக்கும் ஒருக்கா சும்மா கோல் பண்ணிச் சொல்லி விடுங்கோவன். 

அவா வீட்டதான் நிப்பா எண்டாலும் ஒருக்கா சொல்லுறது நல்லது தானே..

பிரச்சினை இல்லை இப்பவே சொல்லிவிடுறன் ...

இரண்டு மாடி நூலகம்! 

எத்தனை அருமையான புத்தகங்கள் ..

இன்னமும் பலர் பங்களிப்புச் செய்கிறார்கள் .. பெட்டி பெட்டியாக புத்தகங்கள் ...

எல்லா நிரல் நிரைகளினூடும் இந்த எறும்பு ஊர்ந்து பார்கிறது ...

தொல்காப்பியம் ... நிற்க வைத்தது முதலில் ..

அடுத்தடுத்து பல நூல்கள் ..கைக்குள் அடக்கமுடியாத பருமன் ...

நெஞ்சில் அடக்க முடியாத ஆனந்தம் 

முகத்தில் மறைக்கமுடியாத பூரிப்பு ...

தூளாவி அலசி விட்டு மீண்டும் உரையாடலைத் தொடங்கவும் இந்த வரிகள் பதித்த அச்சிட்ட "கற்க கசடற" கைகளில் தவழ்ந்தது ...


எனக்கும் சு.சத்திய கீர்த்தி குடும்பத்திற்கும் மிக மிக வேண்டப்பட்ட செல்வன் தெய்வ. பகீரதன் அவர்கள் அவுஸ்த்திரேலியாவிலிருந்து -தும்பளை வந்து- இந்த அம்மம்மாவையும் பார்க்க பெற்றார் உயர்திரு தெய்வேந்திரம் அவர்களுடனும் அம்மா  திருமதி சாந்தகுமாரி அவர்களுடனும் வந்திருந்தார். 

                            அவர், என்னால் எழுதப்பட்ட இந்த "கற்க கசடற" என்ற நாவலுக்கு சிறந்த விமர்சனத்தை எழுதிய முதல் வாசகன் ஆவார். அத்துடன் அமரர் திரு கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நூலகத்தையும் பார்வையிட்டார். 

   "அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாள்....?"

என்ற உண்மையை அவர்களது நல்வரவு எனக்கு உணர்த்தியது. நன்றி 

                                              இங்ஙனம்,

                         தங்கள் நல்வரவால் மகிழும்

                         வள்ளியம்மை சுப்பிரமணியம்.

                                 "சத்தியமனை"

                                   சுழிபுரம்

                                 04/03/2022. 

புல்லரித்துப் போய் கைகள் அள்ளிக்கொண்டன. 

அள்ளும் கைகள் அணைத்துக் கொடுக்கவும் வேண்டும் - அம்மா சொல்வது அடிக்கடி...


அம்மாவுக்கு முன்னாலேயே எறும்பின் கன்னி முயற்சியையும்  கிறுக்கலையும் 

        அன்பின் சத்தியமனைக்கு,

அறிவூட்டிப் பலரை வெற்றிப்படியேற்றிவிடும் இந்த நூலகம் மேலும் பல நூல்களால் அறிவலங்காரம் பெற வாழ்த்துகள்.

                                         அன்புடன் 

                                     தே.பகீரதன் 

                                       04/03/2022.

கையளித்து விட்டு விடைதர வேண்டி நிற்க 

தேனீர் அருந்தாமல் செல்லமுடியாது என்ற அன்புக்கட்டளை அப்படியே இருந்து இன்னும் பல மணி நேரம் பேச வைத்தது. 

நீங்களும் இந் நூலகத்தை பயன்படுத்தி வளம் சேர்க்க வாழ்த்துகள்.  



அடிக்கடி கொள்ளாத உறவு
கேளாக் கடன்
நீர் பாய்ச்சாப் பயிர்
...
உற்றுக்கல்லா வித்தை
இவை அனைத்தும் பாழ்!
அடிக்கடி நினைவில் சுழன்றபடி எனை உழட்டிக்கொண்டிருக்கும் உண்மைகள் பலவற்றில் மேலுள்ளவைக்கு மேலிடம் - முதலிடம்!
உற்றுக்கல்லாதவை பல, உக்கிப்போய் உரமானால் அது ஏதோ ஒருவகையில் மண்ணுக்கும் மரத்துக்கும் தேட்டம் ஆனால் உற்றுக்கல்லாமல் அவற்றிலிருந்து நூற்றவை என்று எதையும் என் சுற்றுச் சமுதாயத்திற்குக் கடத்திவிட ,விட்டுச் செல்ல இல்லையே ..இருந்தாலும் அவை மிகவும் அற்ப சொற்பமே ..
இது ஏக்கம் ...என் அங்கலாய்ப்பு
இந்த சிந்தனைகள் எப்போதும் என்னை சுற்றி வந்த வண்ணமே ..
இவற்றில் புதையுண்டு அமிழ்ந்திருக்கையில் ஓர் இணைய அழைப்பு என்னிடம் வந்து சேருகிறது ..
"கற்க கசடற" - வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய குறுநாவல் - ஓர் வாழ்க்கைப் பாடம், எம் கடந்த கால வாழ்வின் பிரதிபலிப்பு! ஓயாத அசரீரி! எழுத்துருவில் பிரவகித்திருக்கிறது.
இரட்டை நிகழ்வு - "கற்க கசடற" கற்றுத்தர வருகிறது, இன்னும் பல கற்றுத்தர ஓர் நூலகம் தன் வசம் எமை அழைக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன்னர் இவ் இரட்டை மாங்காய்கள் ஒரே கல்லில் குறிபார்த்துக் கொய்யப்பட்டு எமக்காக ஏந்தப்படுகின்றன- 19.01.2022.
இந்த எறும்பாருக்கும் அழைப்பு வந்திருந்தது. வெல்லத்திலிருந்து விலகி வேலையில் இறங்கிவிட்டார்.
பூகோளம் அதிசயம்தான்!
அதெப்படி இலங்கையில் மாலையாகும் பொழுது நான் குறுகிக்கொண்டிருக்கும் தேசத்தில் இருள்கட்டி நடுநிசி கடந்திருக்கிறது ...
இதற்குத் தானோ "உற்றுக் கற்கச்" சொன்னார்கள் ..இனிமேலாவது பிரயத்தனப்பட வேண்டாமா எறும்பாரே ..
நூல் வெளியீட்டில் பல "அனுபவித்த அனுபவசாலிகள்" எமக்கு அறிவூட்டினர் சிலர் அண்ணாந்து பார்த்தும் கண்ணுக்கெட்டாத துரத்தில் எமை தூக்கிச் சென்றிருந்தனர் - அத்தனை சுவைப்பட அறிவையும் அனுபவத்தையும் அளவே கலந்து அள்ளித்தந்தனர்.
இலங்கை இந்திய தமிழ்ப்பாலம் - அத்தனை அழகாய் இணைத்தது எமை.
இலங்கையில் நாம் தவழ்ந்து,விழுந்து, நடந்து, மழை வெள்ளத்தில் விட்ட காகிதக் கப்பல்கள் கான் வழி சென்று முட்டி மோதி வேலியிடுக்கில் மாட்டிக்கொண்ட ஊர் வாசம் இந்திய வாசகரை ஈர்த்திருந்தது அவர்களின் உரையில் - கருத்துரையில் கலந்து இந்திய வாசத்தோடு வந்தது . செவிகள் சிலாகித்தன.
என்ன பகீ .. கேட்டுக்கொண்டிருக்கிறதுக்கு மட்டுமே கூப்பிட்டது . .
நீரும் வாசிச்சு விளங்கினதில உம்மடை கோணம், பார்வை என்ன எண்டு சொல்லுமன்..
ஐய்யய்யோ இதென்ன சிக்கலில மாட்டிவிடுற வேலை அண்ணை..
சும்மா கதையும் ...
புத்துக்க ஒளிக்கப் போன ஏறும்பாரை பெட்டிக்கிள்ள போட்டு பாக்க விட்டிட்டுதே இந்தாள் ..
சரி மாட்டுப்பட்டாச்சு . இனியென்ன ..கூ அடிச்சாலும் ஆரும் காப்பாத்த மாட்டாங்கள்
எறுப்பாரும் தட்டுத்தடுமாறி ஏதோ படிச்சு விளங்கினதை சொன்னார் - ஆரும் கை தட்டேல்லை ...
இதென்ன கேட்டு வாங்கிற சாமானே எண்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார் ..நேரம் ஒரு மணி- நடுச்சாமம்.
புத்தகத்தைப்பற்றிச் சொல்லி உங்களை வலிந்திழுக்கவோ, வாசிக்க ..மன்னிக்கவும் படிக்க இருக்கும் உங்களுக்கு முன்கூட்டியே "கற்க கசடற" வின் உள்ளார்ந்த எழுச்சி பற்றிய விடயங்களை இங்கு எழுதி உங்கள் எதிர்பார்ப்பை தணித்துவிடவோ எறும்பார் விரும்பவில்லை.




https://m.facebook.com/story.php?story_fbid=1998678053648498&id=100005189684978