"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, March 7, 1971

Colonial system is collapsing .... The revisionists are opposing the liberation wars. Written by K.A. Subramaniam in 1964

சடசடவென சரிகின்றது  காலனி முறை விடுதலை  யுத்தங்களை எதிர்க்கும் திரிபுவாதிகள்   Colonial system is collapsing .... revisionists are opposing the liberation wars


Colonial  system is collapsing .... revisionists are opposing the liberation wars 


Colonial  system is collapsing The revisionists are opposing the liberation wars


The revolutions that erupted in the colonial and semi-colonial countries after the First World War suffered great losses due to the oppression of the imperialists and their henchmen. But they could not extinguish the flames of the war of national liberation after World War II.

So the colonial system began to crumble to the foundations of the system. To date, more than 50 Asian, African, and Latin American nations with a population of 170 million have been freed from colonial slavery. Among them China, North-Vietnam, North-Korea and Cuba followed the path of socialism.

In other countries, the national liberation revolution is beginning to spin like a hurricane. So the imperialist colonialists began to change their tactics and intrigues. They pretended to be good to the colonial powers, made a number of reforms and sought to preserve their interests.

Modern colonial system

However, their nature has not changed. To continue their exploitation, they abandoned the old colonial policy and adopted the new colonial policy. They left their direct rule and exploited the colonial powers by handing them over to the bourgeois classes who did not compromise their interests.

For example, they handed over to the representative of the big bosses and landlordsIndia to Nehru,  and Sri Lanka to the UNP. In a few other places they gave nominal freedom and established their puppet regimes. They enslaved other liberated countries, especially in military alliances with SEATO, Sento, NATO, ANZUS, etc. They set up military bases in those countries and sabotaged their independence.

They are trying to unite a few countries into a federation and keep them under their control. The best examples of this are the British colonial work of Malaysia and the Southern Arabin LeagueThey are exploiting the wealth of those countries by giving them 'aid' with political and economic conditions.
They are still using the UN as a tool to interfere in the internal affairs of many countries and carry out military, economic and cultural occupations there.

Without saying much about these, one can only speculate somewhat on its universality if one hears what the Havana Declaration says about the new colony.

"Latin America is trapped under imperialism far more powerful than the Spanish colonial empire. After World War II, United States (USA) investment crossed the $ 1 billion mark.
Money for the USA is running rampant. $ 4000 per minute, 50 lakh per day, 200 crore per year, 1000 crore per 5 years, for every 1000 dollars that leave us, a corpse is left. $ 1000 per corpse. This is the gift that imperialism gives us is $ 1000 per corpse, 4 corpses per minute. "

American imperialism

This is the essence of the new colony. Its main masterpiece is American imperialism. The Moscow statement said, "Today the United States is the main source of colonial power. The US-led imperialists are constantly making frantic attempts to exploit the old colonial people in new ways and in new forms. The monopoly bosses are trying to maintain their influence over the economies and politics of Asian, African and Latin American countries. ” Therefore, the anti-colonial struggle is an anti-imperialist struggle. There has always been a great difference between Marxist-Leninists and modern revisionists in how to conduct this, whether through revolutionary struggle or peace.

Lenin, a Marxist, claims that the oppressed people and classes must carry out a revolution if they are to liberate themselves completely. Such revolutions are inevitable.
In his book, The War Plan of the Proletarian Revolution, he states that "the history of the 20th century is one of unbridled colonial wars in which unbridled imperialism prevails."
He goes on to say, "Denying the possibility of a national liberation war under imperialism is not only ideologically wrong but also historically erroneous."

Anti-colonial wars and revisionists

Not all the revisionists who lived then and today could directly oppose the anti-colonial wars.
Because they will have to lose the support of the oppressed masses. To that end, they literally supported the oppressed nations and peoples. But on the pretext of opposing the war, they opposed and even opposed the just wars waged by the oppressed people against all wars.

Kautsky, a fanatical member of the Second International, said that the danger posed by imperialism to world peace was minimal. The danger from liberation efforts in the lower countries is great. ”
Today's revisionists, Khrushchev and his entourage, follow the logic of the Second International Tripartite and indirectly liberate the nationalist war, claiming that "even a small territorial war can wreak havoc on world war, and that any war today could turn out to be a non-nuclear war, a destructive nuclear war."
Yet thus, Khrushchev threatens to destroy Noah's ark, our planet.

Even during the Second International some revisionists said that the war of national liberation would turn into an imperialist war, a war in which many imperialists would intervene. Junius (Rosa Luxemburg), for example, put forward this theory when she said, "This argument that every national liberation war will be transformed into an imperialist war is wrong." What is the response to the fact that the Algerian National Liberation Revolution and the Cuban Revolution (many more) did not cause world war?

Cheat for help

Now the modern revisionists have given some methods to solve the problem of colonization. These, too, show blatantly their opposition to national liberation revolutions.
One of them is help. The report of the Central Committee of the Soviet Communist Party, presented during the 22nd Congress, stated that 'the ill effects of colonialism must be eliminated. They need to be helped to grow as fast as they can at the level of economically and culturally developed countries. ”

In this, the leaders of the Soviet Communist Party, who are on the path of separatism, claim that the liberation of the colonial people is not by their liberation struggles but by aid, which is in fact a Marxist perspective beyond Marxism-LeninismDuring his visit to the United States in 1959, Khrushchev said that the funny thing was that the United States' assistance to other countries, which were the stronghold of the colony, would help those countries to stand on their own two feet.
He said, "Both yours and our economic achievements will be admired by all the people of the world who have lagged behind in their economic development for centuries, and who will be able to stand on their own two feet and seek the help of our two superpowers" (1959-9-17). 

This is with the help of the socialist countries, the aid of imperialism provided with political conditions.
Not only balancing, but also aiding other countries with the help of Soviet Communist Party leaders raises suspicions that Khrushchev's word is that the colonial powers can be liberated with the help of the imperialists at the hands of the revisionists.

சடசடவெனச் சரிகின்றது காலனி முறை:
விடுதலை யுத்தங்களை எதிர்க்கும் திரிபுவாதிகள்

முதலாவது உலக யுத்தத்திற்குப் பின் காலனி, அரைக் காலனி நாடுகளில் வெடித்தெழுந்த புரட்சிகள் ஏகாதிபத்தியவாதிகளினதும் அவர்கள் அடிவருடிகளினதும் அடக்குமுறையினால் பெரும் நஷ்டங்களுக்குள்ளாயின. ஆனால் 2வது உலக யுத்தத்திற்குப் பின் தேசிய விடுதலை யுத்தத்தின் சுவாலையை அவர்களால் அணைக்க முடியவில்லை.
எனவே காலனிய அமைப்பு முறை அடித்தளம் வரையில் ஆட்டம் கண்டு சடசட என்று தகர்ந்து விழத் தொடங்கியது. இது வரையில் 170 கோடி மக்களைக் கொண்ட 50க்கு மேற்பட்ட ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் காலனி அடிமைத்தளையினின்றும் விடுபட்டன. அவற்றில் சீனா, வட-வியட்நாம், வட-கொரியா, கியூபா ஆகியவை சோஷலிஸப் பாதையை மேற்கொண்டன.
இதர நாடுகளிலும் தேசிய விடுதலைப் புரட்சி சூறாவளி போலச் சுழன்றடிக்கத் தொடங்கிற்று. எனவே ஏகாதிபத்திய காலனியவாதிகள் தமது தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் மாற்ற ஆரம்பித்தார்கள். காலனி நாடுகளுக்கு நல்லவர்கள் போல நடித்து, சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்து, தமது நலன்களைப் பேண முயன்றார்கள்.

நவீன காலனி முறை

என்றாலும், அவர்களுடைய இயல்பு மாறவில்லை. தமது சுரண்டலைத் தொடர்ந்து நீடிக்க, பழைய காலனியக் கொள்கையைக் கைவிட்டு புதிய காலனியக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். தாம் நேரடியாக ஆட்சி செய்வதை விட்டு, காலனி நாடுகளைத் தமது நலன்களை ஊறுபடுத்தாத பூர்ஷவா வர்க்கங்களிடம் ஒப்படைத்து தமது சுரண்டலை நடத்தினார்கள்.
உதாரணமாக இந்தியாவைப் பெரு நிலப் பிரப்புக்கள், பெருமுதலாளிகளின் பிரதிநிதியான நேருவிடமும், இலங்கையை யூ.என்.பி.யிடமும் ஒப்படைத்தார்கள். இன்னும் சில இடங்களில் பெயரளவுக்குச் சுதந்திரம் கொடுத்து தமது பொம்மை ஆட்சிகளை ஆங்காங்கு நிறுவினார்கள். வேறு விடுதலை பெற்றிருந்த நாடுகளை இராணுவக் கூட்டணிகளில் சிறப்பாக சியாட்டோ, சென்டோ, நேட்டோ, அன்ஸஸ் முதலியவைகளில் சேர்த்து அடிமைப்படுத்தினார்கள். அந்த நாடுகளில் இராணுவத் தளங்களை அமைத்து அவற்றின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவித்தார்கள்.

ஒரு சில நாடுகளை ஒன்று சேர்த்து சமஷ்டி அரசுகளாக இணைத்து, அவற்றை தமது கட்டுப்பாட்டில் மேலும் வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். இவற்றுக்குப் பிரிட்டிஷாரின் காலனியப் படைப்பான மலேஷியாவும் தெற்கு அராபிய சமஷ்டியும் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. ‘உதவிகள்” என்பவற்றை அரசியல், பொருளாதார நிபந்தனைகளுடன் கொடுத்து அந்நாடுகளின் செல்வாதாரங்களைச் சுரண்டி வருகின்றார்கள்.
இன்னும் ஐ.நா.வைக் கருவியாக்கி பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு, அங்கெல்லாம் இராணுவ, பொருளாதார, கலாசார ஆக்கிரமிப்புகளை நடத்துகின்றார்கள்.

இவை பற்றி அதிகம் கூறாமல் ஹவானா பிரகடனம் புதிய காலனியம் பற்றிக் கூறுவதைக் கேட்டால், அதன் விஸ்வரூபத்தை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடியும்.

"லத்தீன் அமெரிக்கா, ஸ்பானிய காலனி சாம்ராஜ்ஜியத்தை விட மிகக் கொடிய பலம் வாய்ந்த ஏகாதிபத்தியத்தின் கீழ் அகப்பட்டிருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின் அமெரிக்க முதலீடுகள் 1000 கோடி டாலர் எல்லையைக் கடந்து விட்டன. லத்தீன் அமெரிக்கா இயற்கை மூலப் பொருள்களை மலிவாகக் கொடுத்து, உற்பத்திப் பண்டங்களை பெரும் விலைக்கு வாங்குகின்றது. அதே வேளையில் லத்தீன் அமெரிக்காவிலிருந்து
ஐக்கிய அமெரிக்காவுக்கப் பணம் சோனாவாரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிமிஷத்துக்கு 4000 டாலர், நாளுக்கு 50 லட்சம், ஆண்டுக்கு 200 கோடி, 5 வருடத்துக்கு 1000 கோடி, எங்களை விட்டு நீங்கும் ஒவ்வொரு 1000 டாலருக்கும் ஒரு பிணம் விட்டுச் செல்லப்படுகின்றது. ஒரு பிணத்துக்கு 1000 டாலர். இதுதான் ஏகாதிபத்தியம் எமக்களிக்கும் பரிசு பிணம் ஒன்றுக்கு 1000 டாலர், நிமிஷத்துக்கு 4 பிணம்."

அமெரிக்க ஏகாதிபத்தியம்

இதுதான் புதிய காலனியத்தின் விஸ்பரூபம். இதன் பிரதான எஜமானாக விளங்குவது அமெரிக்க ஏகாதிபத்தியமாகும். இதை மாஸ்கோ அறிக்கை, ‘இன்று காலனி ஆதிக்கத்தின் பிரதான ஆதாரமாக விளங்குவது அமெரிக்கா தான். அமெரிக்காவின் தலைமையிலுள்ள ஏகாதிபத்தியவாதிகள் புதிய வழிகளில், புதிய உருவங்களின் மூலம் பழைய காலனி நாட்டு மக்களைத் தொடர்ந்து சுரண்ட வெறித்தனமான முயற்சிகள் செய்து வருகிறார்கள். ஏகபோக முதலாளிகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தின் மீதும் அரசியலின் மீதும் தமது செல்வாக்கை நீடித்து வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது. எனவே காலனிய எதிர்ப்புப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகவே விளங்குகின்றது. இதை எப்படி நடத்துவது, புரட்சிப்போராட்டத்தின் மூலமா, அல்லது சமாதானமாகவா என்பதில் மார்க்ஸிஸ-லெனினிஸவாதிகளுக்கும் நவீன திரிபுவாதிகளுக்கும் பெரும் வேறுபாடு எப்பொழுதும் இருந்து வருகின்றது.

மார்க்ஸிஸவாதியான லெனின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும் வர்க்கங்களும் தம்மைப் பூரணமாக விடுதலை செய்து கொள்ள வேண்டுமானால் புரட்சி நடத்தியே ஆகவேண்டும் என்று கூறுகின்றனர். அப்படிப் புரட்சிகள் நடத்துவதும் தவிர்க்க முடியாதது.
‘இந்த 20-ம் நூற்றாண்டின் வரலாறு, கட்டுப்பாடற்ற ஏகாதிபத்தியம் நிலவும் இந் நூற்றாண்டு காலனி யுத்தங்கள் நிறைந்த ஒன்று” ‘ஏகாதிபத்திய தேசிய விடுதலை யுத்தங்களையும் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது” என்று ‘பாட்டாளி வர்க்கப் புரட்சியின் யுத்தத் திட்டம்” என்ற நூலில் கூறுகிறார்.
தொடர்ந்து, ‘ஏகாதிபத்தியத்தின் கீழ் தேசிய விடுதலை யுத்தம் தோன்றும் சாத்தியப்பாட்டை மறுப்பது சித்தாந்தரீதியில் தவறானது மாத்திரமல்ல, வரலாற்று ரீதியிலும் பிழையானதாகும்” என்றும் கூறுகின்றார்.

காலனி எதிர்ப்பு யுத்தங்களும் திரிபுவாதிகளும்

அன்றும் இன்றும் வாழ்ந்த திரிபுவாதிகள் அனவருக்கும் நேர்முகமாக காலனி எதிர்ப்பு யுத்தங்களை எதிர்க்க முடியவில்லை.
ஏனெனில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை இழந்துவிட வேண்டிவரும். அதற்காகவே, அவர்கள் சொல்லளவில் அடக்கி ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் மக்களுக்கும் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் யுத்தத்தை எதிர்ப்பது என்ற சாக்குப்போக்கில் எல்லா யுத்தங்களையும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் நீதியான யுத்தங்களைக் கூட எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்கள்.

இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த திரிபுவாதியான கவுட்ஸ்கி ‘உலக சமாதானத்துக்கு ஏகாதிபத்தியத்திலிருந்து வரும் ஆபத்து மிகக் குறைவு. கீழ் நாடுகளில் விடுதலைக்கான முயற்சிகளிலிருந்து வரும் ஆபத்து பெரிதாக இருக்கின்றது” என்று கூறினான்.
இன்றைய திரிபுவாதிகளான குருஷேவும் அவர் பரிவாரங்களும், இரண்டாவது அகிலத் திரிபுவாதிகளின் தர்க்கத்தை பின்பற்றி ‘சிறிய பிரதேச யுத்தம் கூட உலக யுத்த மண்டலாக்கினியை உண்டாக்கிவிடும்”, ‘இன்று எந்தவகையான யுத்தமும் அணு ஆயுதமற்ற யுத்தமாகத் தோன்றினாலும், அது அழிவு தரும் அணு ஏவாயுத யுத்தமாக மாறும் சாத்தியப்பாடு உண்டு” என்று கூறி மறைமுகமாக தேசிய விடுதலை யுத்தங்களை எதிர்க்கிறார்கள்.
இன்னும் இதனால், நோவாவின் பேழையை, எமது பூகோளத்தை அழித்து விடுவோம் என்று அச்சுறுத்துகிறார் குருஷ் சேவ்.

இரண்டாவது அகிலத்தின் போதும் சில திரிபுவாதிகள் தேசிய விடுதலை யுத்தம் ஏகாதிபத்திய யுத்தமாக பல ஏகாதிபத்தியர்கள் தலையிடும் யுத்தமாக மாறிவிடும் என்று கூறினார்கள். உதாரணமாக ஜூனியஸ் என்ற பெண் இத்தத்துவத்தை முன்வைத்திருந்தபோது, "ஒவ்வொரு தேசிய விடுதலை யுத்தமும் ஏகாதிபத்திய யுத்தமாக, மாற்றப்பட்டு விடும் என்ற இந்த நியாயம் தவறானது” என்று கூறினார். எனவே குருஷ்சோவின் அச்சுறுத்தல் தவறு, அவர் ஏகாதிபத்தியத்துக்கு தொண்டு செய்ய, அவர்கள் காலனி நலன்களைப் பேண, இத்தகைய யுத்தங்களை எதிர்க்கிறார் என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும் வரலாற்று ரீதியில் அல்ஜீரிய தேசிய விடுதலைப் புரட்சி, கியூபா புரட்சி (இன்னும் பல) ஆகியவை உலக யுத்தத்தை உண்டாக்கவில்லையே இவற்றுக்கு என்ன பதிலளிக்க உள்ளார்?

உதவி என்ற ஏமாற்று

இனி நவீன திரிபுவாதிகள், காலனி ஒழிப்புப் பிரச்சினையைத் தீர்க்க சில முறைகளையும் கொடுத்திருக்கிறார்கள். இவையும், அவர்கள் தேசிய விடுதலை புரட்சிகளை எதிர்த்து வருவதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
அவற்றில் ஒன்று உதவி என்பதாகும். 22-வது காங்கிரஸின் போது சமார்ப்பிக்கப்பட்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அறிக்கை ‘காலனியாதிக்கத்தின் தீய விளைவுகளைப் போக்க வேண்டும். அவர்கள் பொருளாதார கலாச்சார வளர்ச்சியுள்ள நாடுகளின் மட்டத்திற்கு எவ்வளவு துரிதமாக வளர முடியுமோ அவ்வளவு வேகமாக முன்னேற உதவி அளிக்கப்பட வேண்டும்” என்று கூறுகின்றது.

இதில் திரிபுவாதப் பாதையில் சென்று கொண்டிருக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், காலனி நாட்டு மக்கள் விடுதலை பெறுவது தமது விடுதலைப் போராட்டங்களால் அல்ல, உதவிகளால் என்பது போலக் கூறுவது உண்மையில் மார்க்ஸிஸ-லெனினிஸத்துக்கு அப்பாற்பட்ட திரிபுவாதக் கண்ணோட்டமாகும். 1959-ம் ஆண்டு குருஷ்சேவ் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது கூறிய கருத்து இன்னும் வேடிக்கையானது காலனியத்தின் கோட்டையாக விளங்கும் அமெரிக்கா இதர நாடுகளுக்கு அளிக்கும் உதவி அந்த நாடுகளைத் தமது கால்களில் எழுந்திருக்கத் துணைபுரியும் என்று கூறினார்.
‘தமது பொருளாதார வளர்ச்சியில் பல நூற்றாண்டுகள் பின்தங்கியுள்ள நாட்டு மக்கள், தமது கால்களில் விரைவாக எழுந்து நிற்க, நமது இரு வல்லரசுகளின் உதவியை எதிர்பார்க்கும் உலக மக்கள் அனைவராலும் உங்களுடைய, எங்களுடைய பொருளாதார சாதனைகள் இரண்டும் போற்றப்படும்” என்று (1959-9-17) கூறினார். 

இது அரசியல் நிபந்தனைகளோடு அளிக்கப்படும் ஏகாதிபத்தியத்தின் உதவிகளை சோஷலிஸ நாடுகள் அளிக்கும் உதவிகளோடு
சமப்படுத்திக் கூறுவது மாத்திரமன்றி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உதவிகளில் இதர நாடுகள் சந்தேகப்பட வேண்டிய நிலையையும் உண்டுபண்ணுகிறது குருஷ்சேவின் வார்த்தை திரிபுவாதிகள் கரத்தில் காலனி நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளின் உதவியுடன் விடுதலை பெறலாம் போலும். - கே. ஏ. சுப்பிரமணியம் 1964.05.09

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்