Sunday, March 14, 1971

Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for liberation காலனி முறையின் காவலன் குருச்சேவ் கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது போராட்டமே விடுதலை மார்க்கம்

Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for  liberation 

காலனி முறையின் காவலன் குருச்சேவ் கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது 

போராட்டமே விடுதலை மார்க்கம் 

தொழிலாளி 1964.05.16



Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for liberation 

The policy of the crony Khrushchev clown of the colonial system killed Lumumba 

The struggle is the only way for liberation

 

Worker 1964.05.16

The policy of the crony Khrushchev clown of the colonial system   killed Lumumba. 


காலனி முறையின் காவலன் குருச்சேவ்  கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது. 

The struggle is the only way for liberation 

The next treatment Khrushchev would use to dismantle the colony was disarmament. Bernstein , a revisionist of the Second International, also said that "international treaty and disarmament can uphold equality between nations." Revisionist Kautsky also said that "Western European countries can reduce military spending by doing public works in China, Turkey, and South America, such as railroads, to help develop businesses."

When Lenin criticized the disarmament of that day, he said that the main mistake of their demand for disarmament was to slip away from the material problems of the revolution. Or a new kind of disarming proponents of disarmament! Do you stand for revolution? ” He asked in an article entitled 'War Plan'.

At this point, Khrushchev, who boasted of being Lenin's successor, immersed himself in Lenin's views on the armed revolution. Yet he has brought back to the forefront the reactionary view of the Second International revisionists that the liberation of the colonial people is possible only through disarmament.

"Disarmament means the disarmament of war forces, the elimination of military fanaticism, the elimination of armed interference in the internal affairs of another country, and the complete and final abolition of all forms of colonialism," Khrushchev said.

Not only that, 'disarmament will greatly increase the chances of assisting new countries. Allocating 8-10 percent of the $ 12 billion annually to military spending would help eradicate hunger, disease and illiteracy in the region within 20 years. ”

According to Khrushchev, the people of the oppressed countries did not engage in anti-colonial and liberation struggles, and it seemed as if the imperialists could wait until they were merciful and agree to disarmament, but once the disarmament was over, they would be freed and slaughtered. It is utterly strained, nothing but the original opportunism, and yet waxing and waxing imperialism.

Imperial Instrument United Nations


Khrushchev's next call for the abolition of the colony is to implement it through the United Nations. "Who else but the UN can guide the abolition of colonial rule?" Khrushchev asks.

Today's UN They dominated the former 'League of Nations' just as the imperialists had taken over the council. In reference to this Stalin said that today the world is divided into two camps so that they 'cannot make the alley. One is the imperialist camp and the other is the socialist camp. Imperialism on the verge of death is holding the last trumpet of the 'League of Nations' and trying to save itself by siding with the thieves of other nations. This is a futile effort. Because time and circumstance work against it and in favor of socialism. ”

But the existence of one League of Nations, the old Trinitarian Kautsky said, "represents a great achievement of the ambition for peace, a lever that no other institution can provide for the preservation of peace."

He did not stop with this. 'Today the United States is the most powerful power in the world. He said it was possible to prevent a war within the League of Nations, or work with it.

Today, Khrushchev also describes the United Nations-not accommodating the People Republic of China, home to a quarter of the world's population, as the father of peace. Today he is also promoting that the abolition of colonization can be accomplished with the help of the UN.

'We appeal to this high-level UN body for the rationality and foresight of the West. We appeal to their governments and representatives. Let us agree to the move to end colonial rule and accelerate the natural course of history, ”he told the UN.

But what has the UN really achieved? It helped to liberate the Congo from Belgian imperialism and turn it into a US colony.

It’s good to have a little perspective on this. In the Congo, described as a "repository of global raw materials", Belgium carried out spontaneous exploitation.

Meanwhile, the UK joined. It is rich in all kinds of chemicals, metals such as gold, silver, uranium, cotton, cocoa, coffee, rubber, etc. This has aroused great appetite in the United States. Congo was liberated on June 30, 1960.

But in five days the United States created a state of chaos and prompted the UN to intervene. At this point, a 1959 research report by the U.S. Senate Foreign Relations Committee found that Congo's minerals were helping the U.S.'s industrial and military needs. Therefore, our future relationships must be such as to guarantee the continued availability of these provisions. "

On the pretext of suppressing the Congolese insurgency, Khrushchev also supported the United States, which dreamed of eliminating the colony through the UN for its own needs. At the UN General Assembly on July 13, 1960. Russia joins UN Security Council Voted to send troops to the Congo. Not only that: on July 15, 1960 Khrushchev told Patrice Lumumba by telegram  that " the UN Security Council has taken effective action”. But what happened? Lumumba was murdered. Antoine Gizenga, who came after him, was imprisoned. The Congo escaped from the wolf's mouth and was captured by the tiger. This is how Khrushchev's policy of annihilating the colony through the UN ended.

The United States, still dreaming of building a stronghold in the Mediterranean, has provoked ethnic strife between Turkey and Greece in tiny Cyprus. (The role of the United States in the Sri Lankan ethnic conflict is significant.) President Macarios has also rejected US and British deployment of "peacekeeping forces".

The Cyprus issue was brought to the UN. Russia has failed to abide by its decision to send UN troops to Cyprus. This is Khrushchev's second aid to the United States. Formerly in Congo, today in Cyprus, therefore, the United States has sent PS Gyani , from the American new colony of India, as UNEF Commander-in-Chief. We must not forget that Indian forces also helped the United States in the Congo.

Is this the abolition of colonies by the UN? Or create new colonies for America? Today is a critical time to think about that. Here we recall what Mario de Andrade, the leader of the people's movement for the liberation of Angola (MPLA), said.

"We are fighting today for those political rights that we have failed to achieve in a peaceful way. The gift of the Salazar regime to our demands for peace is to reject freedom and unleash repression. This is forcing the Angolan people to take up arms”.

போராட்டமே விடுதலை மார்க்கம் 

அடுத்து குருஷ்சேவ் காலனியத்தை ஒழிப்பதற்குக் கொடுக்கும் சிகிச்சை ஆயுத ஒழிப்பாகும். இரண்டாவது சர்வதேசியத்தை சேர்ந்த திரிபுவாதி பேர்ன்ஸ்டைனும் ‘சர்வதேசிய உடன்படிக்கை, ஆயுத ஒழிப்பு இவற்றின் மூலம் நாடுகள் மத்தியில் சமத்துவ உரிமைகளை” நிலை நிறுத்த முடியும் என்று கூறினார்.  திரிபுவாதி கவுட்ஸ்கியும், ‘மேற்கு ஐரோப்பிய நாடுகள் இராணுவ செலவினங்களைக் குறைத்துக் கொள்வதால் சீனா, துருக்கி, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் புகையிரத வீதிகள் போன்ற பொது வேலைகளைச் செய்து தொழில் அபிவிருத்திக்கும் உதவி செய்ய முடியும்” என்று கூறினார்.

அன்று ஆயுத ஒழிப்பைப் பற்றி விமர்சனம் செய்தபோது லெனின் அவர்கள் ‘ஆயுத ஒழிப்புக்கான கோரிக்கையின் பிரதான தவறு என்னவெனில், புரட்சியின் ஸ்தூலமான பிரச்சினைகளிலிருந்து நழுவப் பார்ப்பதாகும். அல்லது ஆயுத ஒழிப்பின் ஆதரவாளர்கள் ஆயுதமற்ற ஒரு புதியவகையான! புரட்சிக்காக நிற்கிறார்களா?” என்று ‘யுத்தத் திட்டம்” என்ற கட்டுரையில் கேட்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் பொழுது தன்னை லெனினின் வாரிசாகத் தம்பட்டம் அடிக்கும் குருஷ்சேவ் ஆயுதப் புரட்சி பற்றிய லெனினின் கருத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டார். இன்னும் காலனி நாட்டு மக்கள் விடுதலை பெறுவது ஆயுத ஒழிப்பினால் சாத்தியம் என்ற இரண்டாவது அகிலத் திரிபுவாதிகளின் பிற்போக்குக் கருத்தை திரும்பவும் அரங்கிற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

‘ஆயுத ஒழிப்பு என்பதன் அர்த்தம் யுத்த சக்திகளை நிராயுத பாணிகளாக்குவது, இராணுவ வெறியை அகற்றுவது, இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் ஆயுதத் தலையீடு நிகழ்த்துவதை இல்லாமாற் செய்வது, எல்லா வடிவங்களிலுமான காலனியத்தை முற்று முழுதாகவும், இறுதியாகவும் ஒழித்துக் கட்டுவதாகும்” என்று குருஷ்சேவ் கூறியுள்ளார்.

அது மாத்திரமல்ல, ‘ஆயுத ஒழிப்பு புதிதாக அமையும் நாடுகளுக்கு உதவியளிக்கும் வாய்ப்புகளைப் பெரிதும் அதிகரிக்கச் செய்யும். இராணுவச் செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 12,000 கோடி டாலர்களில் 8-10 வீதத்தை ஒதுக்கினால், அது துன்ப துயரங்களால் வாடும் பிரதேச மக்களின் பசி, நோய், கல்வியின்மை ஆகியவற்றை 20 ஆண்டுகளுக்குள் ஒழித்துக்கட்ட துணை புரியும்” என்றும் கூறினார்.

குருஷ்சேவின் கருத்துப்படி அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள் காலனிய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடாமல், ஏகாதிபத்தியவாதிகள் கருணை கூர்ந்து, ஆயுத ஒழிப்புக்கு இணங்கும்வரை காத்திருந்தால் போதும், ஆயுத ஒழிப்பு நிறைவேறியதும் அவர்கள் அடிமை விலங்கை அகற்றி, நேரே கைலாயம் போய்விடலாம் என்பது போலிருக்கிறது. இது முழுக்க முழுக்க திரிபுவாதம், அசல் சந்தர்ப்பவாதம் அன்றி வேறல்ல, இன்னும் ஏகாதிபத்தியத்தையும் பூசி மெழுகுவதாகும்.

ஏகாதிபத்தியக் கருவி ஐக்கிய நாடுகள் சபை

காலனி ஒழிப்புக்கு குருஷ்சேவ் கூறும் அடுத்த மருந்து, ஐக்கிய நாடுகள் சபை மூலம் அதை நிறைவேற்றுவதாகும். ‘காலனி ஆட்சியை ஒழிப்பதற்கு ஐ.நா சபையின்றி வேறு யார் வழிகாட்ட முடியும்?” என்று கேட்கிறார் குருஷ்சேவ்.

இன்று உள்ள ஐ.நா. சபையை எப்படி ஏகாதிபத்தியவாதிகள் கைவசப்படுத்தி இருக்கிறார்களோ, அப்படியே முன்னிருந்த ‘லீக் அப் நேஷன்ஸ்” உம்  அவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இதைக் குறிப்பிடும்போது ஸ்டாலின் அவர்கள் ‘சந்து செய்ய முடியாதபடி இன்று உலகம் இரண்டு முகாங்களாகப் பிரிந்து இருக்கிறது. ஒன்று ஏகாதிபத்திய முகாம், மற்றது சோஷலிச முகாம். மரணப்படுக்கையில் இருக்கும் ஏகாதிபத்தியம் ‘லீக் அப் நேஷன்ஸ்” என்ற கடைசித் துரும்பைப் பிடித்து, இதர நாடுகளின் திருடர்களையும் ஓரணியில் சேர்த்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. இது வீண் முயற்சியாகும். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அதற்கு எதிராகவும், சோஷலிஸத்துக்குச் சார்பாகவும் வேலை செய்கின்றன” என்றார்.
ஆனால் பழைய திரிபுவாதி கவுட்ஸ்கி ‘லீக் அப் நேஷன்ஸ் ஒன்று இருப்பதே சமாதான லட்சியத்துக்கு ஒரு மகத்தான சாதனையாகும் சமாதானப் பாதுகாப்பிற்கு வேறெந்த ஸ்தாபனமும் அளிக்க முடியாத நெம்பு கோலை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது” என்று கூறினார்.

இத்துடன் நின்று விடவில்லை அவர். ‘இன்று அமெரிக்கா உலகின் மிகப் பலம் வாய்ந்த வல்லரசாகத் திகழ்கிறது. அது ‘லீக்அப் நேஷன்ஸின்” உள்ளே, அல்லது அதனோடு சேர்ந்து வேலை செய்தால் யுத்தத்தைத் தடுப்பது சாத்தியம்”என்று கூறினார்.

இன்று குருஷ்சேவும் அமெரிக்கா கைவசப்படுத்தியுள்ள ஐ.நா.வை, உலகின் நாலில் ஒரு பங்கு மக்கள் வாழும் சீனாவை அங்கத்துவ நாடாக இல்லாத ஐ.நா.வை சமாதானத்தின் பிதாவாக வர்ணித்து வருகிறார். இன்று ஐ.நா.வைக் கொண்டு காலனிய ஒழிப்பை நிறைவேற்றலாம் என்றும் விளம்பரம் செய்து வருகிறார்.

‘இந்த உயர்தர ஐ.நா சபையிலிருந்து மேலை நாடுகளின் பகுத்தறிவுக்கும், தூரதிருஷ்டிக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். அவற்றின் அரசாங்கங்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். காலனிய ஆட்சியை ஒழிக்கும் நடவடிக்கைக்காக நாம் உடன்பட்டு, வரலாற்றின் இயற்கையான போக்கை துரிதப்படுத்துவோமாக” என்று ஐ.நா.விலும் பேசினார்.

ஆனால் ஐ.நா உண்மையில் சாதித்ததென்ன? பெல்ஜிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரமடைந்த காங்கோவை அமெரிக்காவின் காலனியாக மாற்றத் துணை செய்ததன்றி வேறல்ல.

இது பற்றிச் சிறிது கண்ணோடிப் பார்ப்பது நல்லது. ‘உலக மூலப் பொருள்களின் களஞ்சியம்” என்று வர்ணிக்கப்படும் காங்கோவில் பெல்ஜியம் தன்னிச்சைப்படி சுரண்டல் நடத்தி வந்தது.

இடையில் இங்கிலாந்தும் இதிற் சேர்ந்து கொண்டது. அங்கு எல்லாவிதமான ரசாயன மூலப் பொருட்களும், தங்கம், வெள்ளி, உரேனிமயம் போன்ற உலோகங்களும், பருத்தி, கொக்கோ, கோப்பி, றப்பர் முதலியவையும் ஏராளமாக உண்டு. இது அமெரிக்காவுக்கு கைவசப்படுத்த வேண்டுமென்ற பெரும் பசியைக் கிளப்பிவிட்டது. 1960 ஜுன் 30ல் காங்கோ விடுதலையடைந்தது.

ஆனால் ஐந்து நாட்களில் அமெரிக்கா ஒரு குழப்ப நிலையை உண்டாக்கிவிட்டு, ஐ.நா.வைத் தலையிடுமாறு தூண்டியது. இந்த இடத்தில், அமெரிக்க செனட் வெளிவிவகாரக் கமிட்டி 1959ல் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில் காங்கோவின் கனிப்பொருள்கள் அமெரிக்காவின் தொழில், இராணுவத் தேவைகளுக்கு உதவியாக இருக்கின்றன. எனவே, இந்த வழங்கல்கள் தொடர்ந்தும் கிடைப்பதை உத்திரவாதம் செய்யக்கூடிய அளவு எமது எதிர்கால உறவுகள் அமையவேண்டும்” என்று கூறியிருந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

காங்கோ கிளர்ச்சியை அடக்கும் சாக்குப் போக்கில், அமெரிக்கா தனது தேவைக்காக ஐ.நா மூலம் காலனியத்தை ஒழித்துவிடக் கனவு காணும் குருஷ்சேவும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தார். 1960 ஜுலை 13ந் தேதி நடந்த ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலில் ரஷியா ஐ.நா. படையை காங்கோவுக்கு அனுப்ப வேண்டும் என்று வாக்களித்தது. அது மாத்திரமல்ல: ஜூலை 15ல் குருஷ்சோவ் ‘ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் பயனுள்ள நடவடிக்கையை எடுத்திருக்கிறது” என்று லுமும்பாவுக்கும் தந்திமூலம் தெரிவித்தார். நடந்தது என்ன? லுமும்பா கொலைசெய்யப்பட்டார். அவருக்கு பின் வந்த கிஸெங்கா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கோ ஓநாயின் வாயிலிருந்து தப்பி, புலியிடம் அகப்பட்டுக் கொண்டது. இப்படித்தான் ஐ.நா மூலம் காலனியத்தை ஒழித்துக் கட்டும் குருஷ்சேவின் கொள்கை முடிவடைந்திருக்கிறது.

இன்னும் மத்திய தரைக்கடலில் வலுவிடம் ஒன்றை அமைக்கக் கனவு கண்டுவந்த அமெரிக்கா சின்னஞ் சிறு சைப்பிரஸில் துருக்கி, கிரேக்க மக்களுக்கிடையில் இனக்கலவரத்தைத் தூண்டி விட்டது. (இலங்கை இனக் கலவரத்திலும் அமெரிக்காவின் பங்கு உண்டு என்பது இங்கு சிந்தித்தற்குரியது.) இதை, ஜோர்ஜ் போல் என்ற அமெரிக்க துணைக் காரியதரிசி நிக்கோஸியாவுக்குச் சென்று திரும்பியதும், இனக்கலவரம் தீவிரமடைந்தது நிரூபிக்கின்றது. அத்துடன் அமெரிக்காவும், பிரிட்டனும், ‘சமாதான பாதுகாப்புக்கான படைகளை” அனுப்புவதை ஜனாதிபதி மக்காரியோஸ் நிராகரித்துவிட்டார்.

மேற்படி சைப்பிரஸ் பிரச்சினை ஐ.நாவுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.நா படைகள் சைப்பிரஸக்கு அனுப்பும் தீர்மானம் வந்தபோது ரஷ்யா தனது ரத்துரிமையைப் பாவிக்கத் தவறிவிட்டது. இது அமெரிக்காவுக்கு குருஷ்சேவ் செய்த இரண்டாவது உதவி. முன்பு காங்கோவில், இன்று சைப்பிரஸில், எனவே, அமெரிக்காவின் புதிய காலனியான இந்தியாவின், P.S. ஜியானியை ஐ.நா படைத் தளபதியாக அமெரிக்கா அனுப்பியிருக்கின்றது. காங்கோவிலும் இந்தியப் படைகள் அமெரிக்காவுக்கு உதவி செய்ததை நாம் மறந்துவிடக்கூடாது,

இது ஐ.நா மூலம் காலனிகளை ஒழிப்பதா? அல்லது அமெரிக்காவுக்குப் புதிய காலனிகளைப் படைப்பதா? என்று சிந்திக்க வேண்டிய ஒரு நெருக்கடியான கட்டம் இன்று வந்துவிட்டது. இங்கு அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மரியோ டி அன்ட்ராடே அவர்கள் கூறியதை நினைவூட்டுவோமாக.

‘‘எந்த அரசியல் உரிமைகளை சமாதான வழிகளில் பெறப் பாடுபட்டுத் தோல்வி கண்டோமோ, அந்த உரிமைகளைப் பெற இன்று போராட்டம் தொடுத்திருக்கிறோம். சுதந்திரத்தை நிராகரித்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டதுதான் எமது சமாதானக் கோரிக்கைளுக்கு சலஸார் ஆட்சி தந்த பரிசு. இது அங்கோலா மக்களை ஆயுதம் தாங்கிப் போராட நிர்ப்பந்தித்துள்ளது” என்று கூறினார். - கே. ஏ. சுப்பிரமணியம் 1964.05.16

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF