"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, October 4, 2010

பகலில் தோன்றும் நிலவு.........வள்ளியம்மை சுப்பிரமணியம்


பகலில் தோன்றும் நிலவு
--------------------------------------------
அதிகாலை வேளையிலே அழகாய்க்கண் விழித்தபின்னே
குதிக்காலில் நின்றுகொண்டு “தூக்கு”என்று கையசைப்பாய்!
உன்னைத் தொடும்போது  உள்ளம் குளிர்கிறது.
மென்மைப் பரிசத்தால் மேனியெலாம் சிலிர்க்கிறது.
கவிபாடும் புலவர்கட்கு கற்பனையை வளர்க்கின்றாய்--கைகளான
கருமேகம் மறைத்தபின்பு கண்ணாமூஞ்சி காட்டுகின்றாய்!
புலர்கின்ற விடிபொழுதின் புதுமையான வெண்ணிலவே!
மலர்ந்தும் மலராத பாதிமலராகக் கண்திறந்தாய்!
அகலாது இருக்கின்ற அருமையான பேரக்குஞ்சே!----என்னைத்தொடும்
பகலில் தோன்றும் நிலவு பாருலகில் வேறுஏது?
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்
07/10/2010 அன்று எனக்கு 72 வயது

2 comments:

  1. அருமை. கவலை வேண்டாம். உலகம் சிறியது.
    தொழில்நுட்பம் பெரியது.பிரிவு என்பது இப்போதில்லை.

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்