சொற்களில் வடித்தோ சொல்லியோ முடியாத
அற்புதச் செயலால் ஆசிரியை சுகந்தி
நற்பணி செய்து நானிலம் போற்ற
பெற்றதாய் போலவுன் பேருயிரை நீத்தாயே!
வேதாரண்யம் கத்தரிப்புலம் காமாட்சிக் குளத்தில்
பூதாகாரமான உயிப்பலிகள் நடக்க விடாமல்..
சாதாரணமாக உயிர்காக்கும் நீச்சலே தெரியாத...
ஆதாரமற்ற மாணவர்களை அக்கரை சேர்த்தாயே!
இருபத்தி ஒருவயதில் இன்னுயிரைத் துச்சமென...
பருவவயது பட்டக்கல்வி பெற்ற மங்கை...
அரிதாகப் பூத்திட்டாய் டிசம்பர்க் குளத்தினிலே
புரிந்த உன் தியாகத்தால் டிசம்பர் பூ நீயே!
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்