சிங்கப்பூர் "ரெக்ஸ்" திரையரங்கில் டிசம்பர் 13ம் நாள் நடைபெற்ற சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் புதுமைத்தேனீ திரு மா. அன்பழகனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிகரம் பாராட்டிப் பேசிய சுபமங்களா ஆசிரியர் மறைந்த திரு- கோமல் சுவாமிநாதன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வரைந்தெழுதிய சிகரமாம் பாலச்சந்தர் அவர்களின்
மனதில் இடம்பிடித்த ‘தண்ணீர் தண்ணீர்’*
கனதியாய் சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிற
திரைப்படமாகப் பல ஆண்டுக்கு முன்னர்
உரைகல்லாய் வெளியிட்ட கோமல் சுவாமிநாதனின்
சமுதாய விழிப்புணர்வை ஊட்டுவதாய் அமைந்த
வெகுமானக் கருத்துக்கள் அப்படத்தில் இருந்ததனால்
தேசியவிருது பெற்ற தகுதியும் பெற்றதென்றார
ஆசீர்வாதம் வழங்க தன்னினிய இளவலாம்
மாசிலா அன்பழகனின் மதிப்புள்ள அழைப்பேற்று
நேசமுடன் வருகைதந்து சிங்கப்பூர் ‘ரெக்ஸி’
உரையாற்றும் போதுதான் உளம்திறந்து கூறினாரே!
சிகரமே பாராட்டிய சிறந்த அந்தப்படத்தை
அகத்தின் அக்கறையாய் ஆர்வமுடன் போற்றிடுவோம்.
*சுபமங்களா ஆசிரியர் மறைந்த திரு- கோமல் சுவாமிநாதனின் நாடகம் 'தண்ணீர் தண்ணீர்' 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்